அழகூட்டும் மாஸ்க் கருவி...போட்டோசாப்.

நான் பதிவிட்டு பல வாரங்கள் ஆகிவிட்டது. இத்தேக்க நிலை இனிமேல் வராமல் பார்த்துக் கொள்வேன்.. சரி..

போட்டோசாப்பில் மிக மிக முக்கியமான கருவி மாஸ்க் ,அதாவது படத்திற்கு முகமுடியிட்டு அழகு படுத்தப்போகிறோம். இக்கருவி பழக்கமாகிவிட்டால் பல அழகிய கவித்துவம் மிக்க படங்களை உருவாக்கலாம். கீழே உள்ள படங்கள் இவ்வாறு உருவாக்க பட்டவைகளே. முதலில் இதை பார்த்துக் கொள்ளுங்கள்.

குழந்தையின் தடுப்பூசி நாளை நினைவூட்டும் வலைத்தளம்

பரபரப்பான வாழ்க்கை முறை... எந்திர மயமான உலகம். இதில் நமது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு பாதுகாப்பது முக்கியமானப் பணி..

18 மாதம் முடிவதற்குள் 6 தவணை தடுப்பூசி மருந்துகள் போடப்பட வேண்டும்.

இத்தளத்தில் 18 மாதத்திற்குள் உள்ள குழந்தையின் பிறந்தத் தேதியினை பதிவு செய்தால் எந்தந்த நாளில் தடூப்பூசி போடவேண்டும் என்று காட்டுகிறது.

நமக்கு நினைவூட்ட செல் பேசி எண்ணையோ அல்லது மின்னஞ்சல் முகவரியையோ பதிவு செய்தால் காலத்தே நமக்கு நினைவூட்டுகிறது.


வலைத்தளம் : வாக்சிடேட்உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இத்தளத்தை நீங்கள் பரிந்துரைக்களாம்.

பிரதிபலிப்பு படங்கள்/எழுத்துருக்கள் உருவாக்கா.... போட்டோசாப்.கண்ணாடிப் போன்ற தோற்றம், நிழல் தோற்றம் போன்ற படங்களை உருவாக்கப் பார்ப்போம்.

படம்.1. வருக என தட்டச்சு செய்து ஒரு கோப்பை போட்டோசாப்பில் திறந்துள்ளேன்.

நெருப்பு நரிக்கு புது புது சட்டை- வலைத்தள அறிமுகம்.

நெருப்பு நரி (பையர் பாக்ஸ்) இணையதள பயன்பாட்டுக்கு நாம் பயன்படுத்தும் ஒரு மென்பொருள். இணையத்தில் பல மணி நேரம் இருப்பது எல்லோருக்கும் வாடிக்கையான ஒன்று.

ஒரே வடிவமைப்பை பார்த்து பார்த்து அலுப்புத்தட்டிய நேரங்களும் இருக்கும்.

இதன் குறையை போக்குகிறது இத்தளம்.

கருப்பு வெள்ளையில் கலக்கல் தோற்றம். போட்டோசாப்

பல விளம்பரங்களில் பார்த்த வடிவமைப்பு... முக்கியமாக திறைப்பட விளம்பரங்களில் கண்டு இருக்கலாம். ஒரு ஓவிய வடிவத்துடன் ஒளி மேம்படுத்தப்பட்ட செறிவுடன் ஒரு படத்தை உருவாக்கப்போகிறோம்.

யூ டியுப் காணொலிகளை பதிவிறக்கம் செய்ய ...

யூடியூப் தளம் பல்முக காணொலிகளை கொண்ட தளம். இதில் சமூக பகீர்வு தளமாகவும் விளங்குகிறது. இதில் உள்ள காணொலிகளை பதிவிறக்கம் செய்ய சில இணைய தளங்களை இதில் பார்ப்போம்.

கூகுளில் சில டிப்ஸ்கூகிள் தேடு எந்திரம் உலக இணையவாசிகளிடம் பிரபலமானது. இதில் பயன்படுத்த சில டிப்ஸ்...

குறிப்பிட்ட வண்ணத்தை தவிர்த்து மற்ற இடத்தை கருப்பு வெள்ளையாக்க..


படம்.1.சிவப்பு வண்ணத்தை கொண்ட பூக்களின் படம் திறந்துள்ளேன். இதில் சிவப்பு வண்ணம் தவிர்த்து மற்ற பகுதியை கருப்பு வெள்ளை படமாக்கப்போகிறோம்.

படங்களைமட்டும் வித்தியாசமான தேடும் எந்திரங்கள் (Search Engines )

பிரபல தேடு எந்திரங்களான கூகுள், யாகு, பிங்,ஆல்டாவிஸ்டா,ஆஸ்க் போன்றவற்றை தேடும் பொருள், செய்திகள் அடிப்படையில் தேடுவோம். ஆனால் படங்களை மட்டும் அடிப்படையாக தேடும் எந்திரங்களை இப்போது நாம் பார்க்கப்போகிறோம். புதிய அனுபவத்தை உங்களுக்கு இத்தளங்கள் கொடுக்கும்.

உங்கள் பென் ட்ரைவர்களை வைரஸ்களிடமிருந்து பாதுகாக்க...

ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிளாப்பி ட்ரைவர்கள் வைரஸ்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகளை செய்து கொண்டு இருந்தன.

இப்போது காலம் மாறிவிட்டது.

பிளாப்பிகளுக்கு மாற்றாக பிளாஷ் டிரைவர்கள்...

ஆனால் பிளாப்பி பணிகளை உங்கள் பென் டிரைவ்கள் செய்கிறது.

உங்கள் கோப்புகளுடன் வைரஸ்கள்....

தடுக்கமுடியுமா?

முடியும்.

சின்ன கோப்பை பதிவிறக்கம் செய்தால் போதும்.

சுறுக்கப்பட்ட வடிவத்தில் கிடைக்கும்.

இக்கோப்பின் அளவு 500கேபி அளவை மட்டுமே யுஎஸ்பி டிரைவில் பிடிக்கப்போகிறது.

இங்கே கிளிக் செய்து கோப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

சுறுக்கப்பட்ட கோப்பான ரார் (Rar) வடிவத்தை விரித்துக் கொள்ளலாம் அல்லது சிப் 7 பதிப்பில் திறந்து கொள்ளலாம்.திறக்கப்பட்ட கோப்புக்களை உங்கள் பென் டிரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கில் ஒட்டுங்கள்.

இதற்கு பென்பொருள் மன்னிக்கவும் மென்பொருள் நிறுவத்தேவை இல்லை.

விரிக்கப்பட்ட கோப்பில் uspwriteProtect.exe பைலை கிளிக் செய்ய....

மொழியை தேர்வு செய்து...Usp write protect ON
      
Usp Write Protect OFF
   
இரு தேர்வில் ஆன் செய்து கொள்ளுங்கள்.


முடிந்த்து.

பாதுபாப்பு பணி அக்கோப்பு பார்த்துக் கொள்ளும்.

எந்த பேய், பூதம், பிசாசுக்களை அண்ட விடாது.


இந்த தாயத்து ஆப் ஆகிவிட்டால் வைரஸ் ஆட்டுவித்துவிடும்.
************

இன்று

நாள் 06.06.2010...

6.6.66 இதே தேதியில்தான் இந்த மகான் பிறந்தான்.

நாட்களை பாருங்கள்.6666.

20 ஆண்டுகளுக்கு முன் வெட்டியாய் தெருக்களை சுற்றிக் கொண்டிருந்தவன்.

அதே வேலையைத்தான் செய்து கொண்டு இருக்கிறேன்.

இணையத்தை வலைபக்கத்தினூடாக சுற்றிக் கொண்டு இருக்கிறேன்.

44 வயதில் ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

கொஞ்சம் போட்டோசாப், பிளாக் என்று பயணித்துக் கொண்டு இருக்கிறேன்.

மார்க்சியம்... என்னை ஒழுங்குபடுத்தியது.

சிவப்பு பெரியார்

சிவப்பு அம்பேத்கர் இப்போதைய தேவை என்ற கொள்கையில் உறுதியாக உள்ளவன்.

முதுகெலும்பில் பெரிய அறுவை செய்து ரூபாய் 10,000 செலவில் போல்டை என் துனைவியாருக்கு வைத்தது தான் அவர் கண்ட பலன்.

இரண்டு மகன்கள்...

தமிழ்நட்டில் தமிழில்தான் படிக்க வேண்டும் என்ற கொள்கையில் இருந்து பிறழாது... மகன்கள் தமிழ் வழியில் தான் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நான் தாண்டாத 250 மதிப்பெண்ணை 10ம் வகுப்பில் 430 எடுத்து என்னை வெட்கப்பட வைத்தவன் பெரியவன் அன்பு. பெயரே அன்புதான்.

துறுதுறு... சுறுசுறுப்பு திலீபன் இளையவன்.

இவர்களின் ஒத்துழைப்போடு இவர்களின் கைபிடித்து நடக்கக் கற்று வருகிறேன்.


இப்படம் துனைவியார் எடுத்தது. போட்டோசாப் கொஞ்சம் அழகு படுத்தி இருக்கிறது.

தோழமையுடன்....

தொலைத் தூர கணினியை இயக்க இலவச மென்பொருள்

என் அலுவலக்கத்தில் கணக்கியல் சம்மந்தமான புதிய மென்பொருள் ஒன்றை கணினியில் பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள். இதில் சில தவறுகள் பயன்பாட்டில் நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது. ஆனால் இது குறித்து தலைமை இடத்தித்தில் இருந்து அறிவுறுத்தியும் அதை மேம்படுத்த முடியவில்லை. பிறகு அவர்களிடத்தில் இருந்தே அதாவது தொலைதூரத்தில் இருந்தே கணினியின் தகவல்களை பெற்றார்கள், மாற்றினார்கள், பயிற்சியும் கொடுத்தார்கள். அவர்களிடத்தில் இருந்தே இங்குள்ள கணினியை இயக்கினார்கள்.

இச்செயல் பிரமிப்பைக் கொடுத்தது. படித்தை கேட்டதை என் கண்முன்ணாலேயே விட்டாலச்சாரியார் படம் போலவே நிகழ்ந்தது. நவீன உலகத்தில் எல்லாமே சாத்தியம் என்றாலும் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து இக்கணினியை இயக்குவது அதிசயம் தான்.

சுமார் 6 கோடி பேர்  50 நாடுகளில் இம்மென்பொருளை பயன்படுத்துகின்றனர் என்பது கூடுதல் தகவல்.


ஆம். டீம் வீவர் மென்பொருளோ அது. இலவசமாகத் தருகிறார்கள். எந்த இரண்டு கணினியை இணைக்கப் போகிறோமோ இவ்விரண்டு இடத்திலும் இம்மொன்பொருளை இணைய இணைப்புடன் கணினியில் இயக்கத்தில் இருக்க வேண்டும்.

நமது கணினியில் நிறுவும் போதே உங்களுக்கான பாஸ்வேர்டை கேட்கிறது. பிறகு அம்மென்பொருளே ஒரு ஐடி எண்ணையும் கொடுக்கிறது.(படம்.1.)


தொலைதூர தொடர்பாளரையும் நாம் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவி இருக்கச்செய்ய வேண்டும். டீம் வீவர் மென்பொருளின் அளவு 2.7 எம்பி மட்டுமே.

அவர்கள் நிறுவிய பின்னர் தொலைதூர கணினியில் கொடுக்கப்பட்ட ஐடி எண்ணை நமது கணினியில் தட்டச்சு செய்து அவருடன் இணைப்புக் கொள்ளலாம். (படம்.2.)


தொலைத்துற தொடர்பாளரின் ஒத்துழைப்பு இல்லாமல் நாம் இணைப்புக் கொள்ளமுடியாது. அதனால் கணினிக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. கோப்புக்களை பரிமாறிக் கொள்ளலாம், பரிமாறும் போது சாட்டிங்கும் செய்யலாம்.


வீட்ட்டுக் கணினியில் கோப்பு இருக்கிறதே பென் டிரைவரும் மறந்தாச்சே என்ற கவலை வேண்டாம். உங்கள் செல்போனிலேயே வீட்டை தொடர்பு கொண்டு கணினியை இயக்கச்செய்யச்சொல்லி , உங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விடலாம்.

நாம் கர்சரை ஆட்டினால் வேறு கோப்பை திறந்தால், அந்த குரங்கை கையை சும்மாவைத்துக் கொண்டு அமைதியாக இருக்கச்சொல்லுங்கள் என்று மறுமுனையில் இருந்து சொல்லக் கேட்பது நகைச்சுவையே.


அவர்களுக்கு அங்கிருந்தே பயிற்சியும் கொடுக்கலாம்.

இவ் அனுபவத்தைப் பெற இங்கே சொடுக்கி பதிவிறக்கம் செய்து இவ்வசதியை பெறுங்கள்.

நீங்கள் சென்றுதான் கோப்பை எடுக்கமுடியும், உங்களுக்குத்தான் தெரியும்  என்ற சங்கடங்களுக்கு இம்மென்பொருள் இருந்த இடத்தில் இருந்தே தீர்வு தரும்.
தோழமையுடன்...

தீப் பிடித்து எரியும் எழுத்து-போட்டோசாப்.
பதிவிட்டு நீண்ட நாளாகிவிட்டது. இப்போது பார்க்கும் நுட்ப்ப் பதிவு. தீப்பற்றி எரியும் தோற்றத்துடன் கூடிய எழுத்து.

எளிதாக புரிய பல பட விளக்கம் கொடுத்துள்ளேன்.

சரி. பயிற்சிக்கு செல்வோம்.

இணையத்தில் கிடைக்கும் இலவச ஆன்லைன் டைரி


இலவசமாக நமது கோப்புக்களை பதிவேற்றி பாதுகாக்க பல  இணைய தளங்கள் வசதியை தருகிறது. இசை, படங்கள் வீடியோ இன்று வகைப்படுத்தலாம். தினசரி ப்லருக்கு டைரி எழுதும் வழக்கம் உண்டு. இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் யாராவது படித்து விடுவார்களோ என்ற அச்சத்தினூடே இப்பழக்கம் கைவிட்டவர்களும் உண்டு.
இணையத்தில் இவ்வசதியை போக்கும் பொருட்டு இலவச ஆன்லைன் டைரி என்ற வலைத்தளம் இவ்வசதியை தருகிறது

விண்டோ எக்ஸ்பி திறக்கும் ஒலிக்கு நமக்கு பிடித்த ஒலிக்கோப்பை இணைக்க...


விஸ்டா, விண்டோ 7 வந்தாலும் பெறும்பாலும் நாம் பயன்படுத்தும் ஆப்ரேடிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி-ஐதான் நாம் பயன்படுத்துகிறோம். இதில் வால்பேப்பர் மாற்றுவதுப் போல, திறக்கும் போது கேட்கும் ஒலியைக் நாம் மாற்றலாம்..
லாக் ஆண் ஆகும் போது கேட்கும்  ஒலிக்கூட எரிச்சலை உண்டாக்கும். இதற்கு மாற்றாக நாமே நமக்குப்பிடித்த ஒலிக் கோப்பை தயாரித்து இணைத்து விடலாம்.

பிளாகின் பக்கப்பகுதியில் பிடித்தமான படங்களை வரச்செய்ய...

பிளாகின் பக்கப்பகுதியில் பிடித்தமான படங்களை வரச்செய்ய...
நமது வலைப்பூக்களின்  பக்கப்பகுதிகளில் (Side Bar) பிடித்தமான படங்களை இருக்குமாறு செய்யலாம்.
அது இயற்கை காட்சியாக..
நமது குழந்தையாக, குடும்பமாக இருக்கலாம். 
நான் என் பழைய பதிவில் பதிவின் பின்னணியில் படம் வரவைக்கும் பதிவை கொடுத்து இருந்தேன்..

நான் உழைப்பாளர் சிலை படத்தை  இம்முறையில் இணைத்துள்ளேன்.  உலக தொழிலாளர்களின் நலனுக்காக உயிர் நீத்த தோழர்களின் நினைவாக இப்பதிவு.

பிடித்த தலைவராக இருக்கலாம் அதற்கு கீழ் கண்ட கோடை ஒட்டினால் போதும்.

பென்சிலில் கோட்டோவியம்-போட்டோசாப்.

ஓவியம் என்றால் பென்சில் தீட்டும் ஓவியம் அடிப்படை. அந்த வடிவத்தை எளிதாக போட்டோசாப்பில் செய்யலாம்.

செய்முறையை பார்ப்போம்.

யூடியூப் வீடியோக்களில் இருந்து எம்பி3யாக பிரித்தெடுக்க...

பல வீடியோக்களை காட்சிகாளாக ரசித்து இருப்போம். ஒலி வடிவத்தில் மட்டும் கேட்க இணைய வழியிலேயே ஒருவசதி.

முகவரியில் பிரித்தெடுக்க வேண்டிய யூடியூபின் முகவரியை கொடுங்கள்.
தரம் எப்படி வேண்டும் என்பதையும் கொடுத்து கண்வர்ட் செய்து பதிவிரக்கம் செய்து கொள்ளுங்கள்.
கீழே உள்ள வீடியோ இளையராஜாவின் ஒரு இசை எழுச்சி. பாடல் வைரமுத்து.


இப்பாடலைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை பதியலாம். நன்றி.


பிளாகிள் மேலிருந்து பூவானம் தூவ...

தோழியர் பத்மா  வலைப்பூவை பார்த்தபோது பூவானம் தூவிக்கொண்டு இருந்தது.
இன்னும் பலரின் வலைப்பூக்களிலும் கூட பார்த்திருக்கிறேன்.
மற்ற பதிவர்களும்  இவ்வமைப்பைப் பெற பார்வைக்கும் இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

சலன / தெளிவற்ற படங்களை உருவாக்க- போட்டோசாப்.

நல்லப்படங்களை சிதைத்தால் அதுவும் கலைநயத்தோடு எப்படி ?
விளம்பரத்துறையில்  அதிகம் பயன்படுத்தும் கருவி.

ஆம் அசைவு நிலையில் ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் ?

அவுட்டாப் போகஸ் என்பார்கள் அதுவே வேகமாக நடக்கும் நிகழ்ச்சியை படம் எடுத்தால் அதுவே கலையாகிவிடும்.

பிளாகில் நிலையாயிருக்கிற படம் தெரிய...

கொஞ்சம் பிளாகின் மூலையில் பாருங்கள். இப்படம் எந்தபதிவும் மேலோ கீழோ சென்றாலும் படம் அதே இடத்தில் தான் இருக்கும். படம் சிறியதாக உள்ளதா? என் தேர்வு அப்படி. உங்களுக்கு அளவுகளில் பெரியதாக வேண்டும் என்றால் தேர்வு எப்படியோ அப்படியே வரும்.
மூன்று நிலைகளிலேயெ இத்தோற்றத்தை கொண்டு வரலாம்.

நமது பிளாகின் பரவலைப் பற்றி ஓர் ஆராய்ச்சி

வணக்கம்.
இது ஏதோ ஆராய்ச்சி என்று நினைத்து விடாதீர். அந்த அளவுக்கு மூளை கொதித்து வீங்கிப் போனவன் இல்லை நான்.
நோக்கம் 
எல்லாம் ஒன்றுதான்.

எவ்வளவு பேர்  பிளாகை பார்த்தது என்பதைப் பற்றிய ஆராய்ச்சிதான். அதுவும் தேதி வாரியாக.

தொடர்ந்து பின்னூட்டம் இடுபவர்களை தனியாக காட்ட...

சுமார் 1000 இருந்து 5000 பின்னூட்டங்கள் உங்கள் பதிவில் இருக்கலாம்.
நமது பதிவை தொடர்ந்து படித்து பின்னூட்டம் இடுபவர்களை தனியாக காடினால் எப்படி இருக்கும்.
அவர்களை பெருமை சேர்க்க ஒரு வாய்ப்பாக இருக்கும் அல்லவா.  
இதற்கு இந்த எச்டிஎமெல் கோடை பயன்படுத்தலாம்.

பிளாகில் கூகுல் பஸ் அட்டையை இணைக்க...

சமூகத்தளங்களில் கூகுல் பஸ் இப்போது  பலர் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.  டிவிட்டர், ஃபேஸ் புக்கிற்கு போட்டியாக கூகுள்  நிறுவனம் துங்கி இருப்பதே கூகுல் பஸ் இதனை நம் வலைத்தலத்தில் இணைத்து விட்டால் அங்கேயும் நமது தளம் கால் பதிக்கும்.
வழக்கமாக செய்வது போல் பிளாகினுல் சென்று  லேவுட்- எடிட் எச்டிஎமெல் செல்லுங்கள்.

நோட் பேடை டைரியாக பயன்படுத்த...

பலர் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருக்கும்.
இதற்கு எழுது கோல், நாட்குறிப்பு, தாள் தேடத்தேவையில்லை. டிஜிட்டல் உலகம். இணையத்தில் இருப்போம். நம் கருத்தை குறிப்பை பதிய தேதியுடம் நேரத்துடன் பதிய வேண்டும்.
இதற்கு உதவப்போகிறது விண்டோஸ் சிஸ்ட்த்தில் உள்ள நோட் பேட்.

பதிவுகளுக்கு பின்னால் பிடித்தமான படங்களை வரச்செய்ய...


நாம் வெளியிடும் பதிவுகளுக்கு பின்னால் பிடித்தமான படங்களை இருக்குமாறு செய்யலாம்.
அது இயற்கை காட்சியாக..
நமது குழந்தையாக, குடும்பமாக

பிடித்த தலைவராக இருக்கலாம் அதற்கு கீழ் கண்ட கோடை ஒட்டினால் போதும்.

போட்டோசாப்பில் மேஜிக் டூல்-வீடியோ

போட்டோசாப் மென் பொருள் பல அற்புத கருவிகளை படங்களை மேம்படுத்த கொடுக்கிறது.
அதிலொன்று தான் வேனிசிங் பாய்ண்ட் டூல்.
இக்கருவியைக் கொண்டு இது இரண்டாவது பயிற்சி. முதல் பயிற்சியை பார்க்க இங்கே சொடுக்கவும்

எளிதான சுவர் விளம்பரம் – போட்டோசாப்.

  மாதிரி படங்கள் இம்முறையில் உண்டாக்கப்பட்டவையே. சென்னை அண்ணா சாலையில் உள்ள எல் ஐ சி கட்டிட்த்தில் படங்களை ஒட்டி வடிவமைத்துள்ளேன்.
நான் பார்த்த உயரமான கட்டிடம் இதுதான்?!.
அதில் ஏறி விளம்பரம் செய்ய முடியுமா ?
முடியும் என்கிறது போட்டோசாப்.

புதியவர்களுக்கு -வார்த்தைக்கு இணையதள முகவரியின் இணைப்பு கொடுத்தல்

பல நண்பர்கள் பல மாதங்களாக பதிவுலகில் இருப்பவர்கள் கூட இம்முறையைப்பற்றி அடிக்கடி கேள்வி எழுப்புகிறார்கள்.
சின்ன செய்திதான். தெரிந்தால் சிறியது.
தெரியாவிட்டால் கண்ணுக்கருகில் இருக்கும் சிறிய கல் போல பிரமிப்பை கொடுத்துவிடும்.
ஆகையால் இப்பதிவு புதியவர்களுக்கு மட்டுமே.
பல பதிவுகளில் பார்த்து இருப்போம்.
இங்கே கிளிக் செய்யவும்
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
குறிப்பிட்ட வார்த்தைகளை கிளிக் செய்ய  இணைப்புக்கொடுக்கப்பட்ட வேறு இணைய தளத்திற்கு செல்லும்.
அதைதான் இப்போது பார்க்கப்போகிறோம்.
இவ்வசதியை மின்னஞ்சல், பிளாக்குகளில் கொடுக்கிறார்கள்.

நீர் வண்ண ஓவிய தோற்ற விளைவு- போட்டோசாப்


படக்காட்சிகளை ஓவியத்தில் காட்டுவதே ஒரு விதக் கலை. அதுவும் செய்தி ஊடகம்,  நாளிதழ்களில்  நீர் வண்ண ஓவியங்கள் தனியிடத்தை பெறுகிறது.
இவ்விளைவுகளை போட்டோசாப் சிறப்பாக செய்து கொடுக்கிறது.
நான் ஓவியத்தோற்ற விளைவுகளை மூன்று நிலைகளிலேயே விளக்க முயற்ச்சித்துள்ளேன்.
தோவையான படத்தை திறந்து கொள்ளுங்கள்.

பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை இமேஜாக மாற்ற..


நாம் நிறுவனத்திற்காக அல்லது ஒரு செயல்முறைகளை படவிளக்கக்கோப்பாக (Power Point presentation )  தயாரித்து இருப்போம். நிறுவனத்திற்கோ அல்லது உயர் அலுவலருக்கோ காட்ட வேண்டுமானால், லேப்டாப், கணினி, புரொஜெக்டர் நுட்பங்களைத்தான் நாட வேண்டும்.

பிளாகின் டூல்பாரை உருவாக்குங்கள்.....

இணையதள அறிமுகம்.

வணக்கம், பல பிரபல பதிவுகள் தங்களுக்கான டூல்பாரை தருகின்றன. அதை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தால் இவ்விணைய தள தொடர்பு கிடைக்கிறது. ரேடியோ பாடுகிறது.
பேஸ் புக்கிற்கான, டிவிட்டர், முகவரியை அவர்களுக்கு இந்த டூல் பார் அவர்களுக்கு தருகிறது. விருப்பமானவர்கள் தொடரலாம்.

எழுத்துக்களை நமது விருப்பப்படி மாற்ற – போட்டோசாப்.

எழுத்துருக்களை மாற்றவும் போட்டோசாப் வழிவகை செய்கிறது.
ஒரு கோப்பை திறந்து கொள்ளுங்கள்.
தேவையான வார்த்தைகளை தட்டச்சு செய்து கொள்ளுங்கள்.
பிறகு எழுத்தை தேர்வு செய்த பிறகு
லேயர்-டைப்- கிரியேட் ஒர்க் பாத் தேர்வு செய்யவும்.

தூரிகைக் கொண்டு எழுத.... போட்டோசாப்.
இப்பதிவில் போட்டோசாப்பில் பிரஷ் கொண்டு அழகான வடிவமைப்போடு எழுதுவதைப் பார்ப்போம்.

ஒரே சொடுக்கில் எழுத்தின் தோற்றம் மாற்ற- வீடியோ பயிற்சி
போட்டோசாப் மென்பொருளில் பணியாற்ற தினமும் பதிவுகள் எழுதப்பட்டு வருகிறது.
என் தளத்தில் கூட இது பற்றி தொடர்ந்து பதிவுகளை கொடுத்து வருகிறேன். பலரும் வரவேற்று கருத்துக்களை பதிந்துள்ளார்கள்.

ஸ்டாம்ப் அளவில் படங்களை அச்செடுக்க... போட்டோசாப்

டிஜிட்டல் யுகமாகிவிட்டது. சாதாரன செல்பேசியில் கூட கேமெரா வசதி வந்துவிட்டது.
நாமெடுக்கும் படங்களை ஒரு கோப்பில் போட்டுவைப்போம். அத்துனை படங்களையும் அச்சிடுவது செலவீனம். அதற்காக சிறிய படவடிவில் எல்லா படங்களையும் ஒரே சீட்டில் அச்செடுக்கலாம்.

ரசிக்க இருவேறு வீடியோக்கள்

இது ஒப்பீடு அல்ல.
1970களில் வந்த இசை அலைகள் பற்றியது.
எனக்கு சிறிய வயது .ஞாபகமில்லை. ஆனால் அப்போது பார்த்த இப்படம் என்னை கிரங்கிடச்செய்கிறது.
படம் மேரே நாம் ஜோக்கர்.
திடீரென யூடியுபில் தேடினேன்.

புதியவர்களுக்காக- யூ டியுப் வீடியோக்களை எளிதாக பதிவிறக்கம் செய்ய...
மென்பொருள் தேவையில்லை..
கிக்கடித்தால் போதும். மன்னிக்கவும்
நீங்கள் பதிவிறக்கம் செய்யும் முகவரிக்கு முன் kick என்று தட்டச்சு செய்து எண்டர் தட்ட கிக் தளத்திற்கு முகவரி அழைத்து செல்லும்.

படங்களில் பின்னணி காட்சிகளை எளிதாக நீக்க- போட்டோசாப்.

படம் சிறப்பாக வந்து இருக்கும்.
சில காட்சி தேவை இல்லாததாகவும், பின்னணி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை போட்டோசாப் எளிதாக செய்து கொடுக்கிறது.

போட்டோசாப்- புதிய கலை நயம்மிக்க தூரிகைகள்.


சில பதிவுகளில் போட்டோசாப் எழுத்துருக்களின் வடிவமைப்பின் தோற்றத்தை பார்த்தோம்.
போட்டோசாப்பில் சில வடிவ தூரிகைகள் மட்டும் கொடுத்து இருப்பார்கள்.
ஆனால் விளம்பரம் மற்றும் திரைத்துறை வடிவமைப்பில் வரும் வடிவமைப்புகள் நம்மை பிரமிக்க வைத்து இருக்கும்.

ஒரே சொடுக்கில் ஓவியத்தோற்றம்- போட்டோசாப்

வணக்கம். எனது கடந்தப் பதிவில் எழுத்துருவினுள் படங்களை கொண்டுவருவதை பற்றி எழுதி இருந்தேன்.

இன்று படத்தை ஓவியத் தோற்றத்தில் கொண்டுவரவது பற்றி பார்க்கலாம்.

விருப்பமான படங்களுடன் எழுத்துருக்கள்- போட்டோசாப்.
கடந்த பதிவில் ஒளீறும் எழுத்துருக்களைப் பற்றிச் சொல்லியிருந்தேன்.
இன்று படங்களை உள்வாங்கிய எழுத்துருக்களை உருவாக்குவதுப் பற்றிப் பார்ப்போம்.
பார்க்க பிரமிப்பு ஏற்படுத்தும் இப்படைப்பை தோற்றுவிப்பது மிக எளிது. கொஞ்சம் உள்வாங்கினால் என்னை விட சிறப்பாகச் செய்வீர்கள்.
சரி பயிற்சிக்கு செல்வோம்.

இதை உங்கள் பதிவில் இணைக்க...