முப்பரிமாண வடிவில் எழுத்துருக்களை மாற்ற- போட்டோஷாப்

பல படங்களில் எழுத்துருக்களின் வடிவமைப்பை பார்த்து நாம் பிரமித்து இருப்போம். அதன் நிழல் மற்றும் முப்பரிமாண தோற்றம் மிக எளிது.
படம்.1.
விருப்பமான படத்தை திறந்து கொள்ளுங்கள்.
File -----Open
இப்போது எழுத்துருவை உள்ளீடு செய்ய டூல்பாரில் T யை தேர்வு செய்யுங்கள்.
போட்டோஷாப்பில் சில தமிழ் எழுத்துருக்களை ஆதரிக்காது.
கவலை வேண்டாம்.
வேர்ட் கோப்பில் தேவையான வார்த்தைகளை தட்டச்சு செய்வோம்.

படம்.2
எழுத்தை உள்ளீடு செய்ய Tயை தேர்வு செய்ய லேயரில் T தோன்றி இருப்பதை பார்க்கிறீர்கள்.
வேர்ட் கோப்பில் தேவையான வார்த்தைகளை காப்பி மற்றும் பேஸ்டு முறையில் செயல்படுங்கள்.
அடுத்து.
லேயர் என்ற சன்னலில் கீழ் உள்ள f என்ற ஐக்கானை அழுத்த
Drop Shadow
Inner Shadow… Bevel /Emboss
என்ற தேர்வுகள் தோன்றும். அதை தேர்வு செய்ய செய்ய நாம் ஒட்டிய எழுத்துகளில் மாற்றங்கள் தோன்றும்.
படம்.3.
மாற்று முறை
பைல்,எடிட் வரிசையில் உள்ள லேயர் சென்று லேயர் ஸ்டெயிலை தேர்வு செய்யலாம்.
Layer
Layer Style
Drop Shadow
Inner Shadow… Bevel /Emboss
அதை தேர்வு செய்ய செய்ய நாம் ஒட்டிய எழுத்துகளில் மாற்றங்கள் தோன்றும்.

மாற்றம் பிடிக்க ஜெபிஜி (JPG) வடிவத்தில் சேமியுங்கள்.

விடியல் தூரமில்லை.. டிஜிட்டல் படம் தயார்.
அச்செடுக்க… மின்னஞ்சல் அனுப்ப,,, வலையிதழில் உள்ளீடு செய்ய…

தோழமையுடன்…
மணிவர்மா


உங்கள் கையெழுத்தை பிரஷ் ஆக்க போட்டோஷாப்போட்டோஷாப் என்றவுடன் ஒரு பிரமிப்பு. அதற்கு மென்பொருள் குறித்த பயிற்சி அவசியம் என்ற அச்சமே தேவையில்லை. ஒரு கோப்பை அனுப்பும் போது கையெழுத்துடன் அனுப்புவது தான் வழக்கம். இணைய உலகில் இது சற்று சிறமமே. நாம் எடுக்கும் டிஜிட்டல் படத்தில் நமது கையெழுத்து இருந்தால் எப்படி இருக்கும் . சிறிய முயற்சி.

போட்டோஷாப் இதை எளிதாக்குகிறது.

நமக்கு விருப்பமான வடிவத்தில் பிரஷ் /துரிகையை தயாரிக்கலாம்.

படம்.1.

போட்டோஷாப்பில் புதிய கோப்பை திறந்து கொள்ளுங்கள்.

குறுக்கு வழி (short cut) : ctrl+n

அளவு : 8 x 4

Mode : RBG Colour

பின்னணி : வெண்மையாக இருக்கட்டும்.

பிரஷ் கருவியை தேர்வு செய்யுங்கள் அல்லது B என்ற எழுத்தை அழுத்துங்கள்.

தேவையான அளவுடன் வெள்ளைக் கோப்பில் எழுதுங்கள் அல்லது வரையுங்கள்.

படம் .2.

படத்தை லேயராக்க வேண்டும்.

மிரட்சி வேண்டாம்.

குறுக்கு வழி (short cut) : shift+ctrl+n

அல்லது லேயரில் சென்று புதிய லேயரை தேர்வு செய்யுங்கள்.

நான் எழுதிய ‘அன்புடன் ‘ என்ற எழுத்து புதிய லேயரில் இருக்கும்.

படம்.3.

படத்தில்  நீலக்குறியீடு காட்டியப்படி மார்க்யு ரெக்டாங்குலர் கருவியை அல்லது M என்ற எழுத்தை மட்டும் அழுத்தினால் அக்கருவி தேர்வாகிவிடும். உங்கள் கை வண்ணத்தை இக்கருவியை கொண்டு தேர்வு செய்யுங்கள்.

படம்.4.

தேர்வு செய்யப்பட்ட நிலையில் எடிட்க்குச் சென்று டிபைன் பிரஷ்யை தேர்வு செய்யவும்.

Edit-      Define Brush

நீலக் குறியீடு காட்டப்பட்டுள்ளது போல்.

படம்.5.

டிபைன் பிரஷ்யை தேர்வு செய்தவுடன். பிரஷ் பெயர் கேட்கும் .

விருப்பமான பெயர் இட்டு  ஒகெ கொடுங்கள்.

படம்.6.

புதிய வெண்மை கோப்பில் நான் தயாரித்த தூரிகை வடிவம் பல் வண்ணத்தில்.

பிரஷை தேர்வு செய்யவும் அல்லது B யை மட்டும் அழுத்த பிரஷ் தேர்வாகிவிடும்.

நீங்கள் பெயரிட்ட தூரிகை உள்ளே சென்று பார்த்து தேர்வு செய்யவும்.

ஒரு கிளிக்கில் கையோப்பம். வண்ணம் தேர்வு செய்து மீண்டும் கிளிக்.

படம்.7.

என் கையோப்பத்துடன்…

அன்புடன்…

ஒ.சி.ஆர் ஒரு பயனுள்ள மென்பொருள்அலுவலகத்திலோ அல்லது நமது சொந்த பணிக்கோ ஒரு புத்தகத்தில் உள்ள சில பக்கங்களையோ சில திருத்தங்களுடன் கோப்பு தேவைப்படலாம். அதற்காக ‘மாங்கு மாங்குஎன்று அப்பக்கங்களை தட்டச்சு செய்வோம். 10 பக்கம் கூட தேவலாம் ஆனால் 100 பக்கங்களாக இருந்தால் விழி பிதுங்க வேண்டியதுதான். இப்பணியை மிக மிக எளிதாக்கும் மென்பொருள்தான் ஓ.சி.ஆர். இதை பயன்படுத்த ஸ்கேன் கருவி அவசியம் தேவை.

ஓ.சி.ஆர். (OCR) என்றால் Optical Character Recognition என்பதாகும். ஓ.சி.ஆரின் பணி ஸ்கேன் செய்த கோப்புகளை திருத்தம் செய்யகூடிய கோப்பாக மாற்றலாம்.

அதுவும் குறிப்பாக

MS Office

MS Excel  வடிவமாக உடன் மாற்றிவிடலாம்.எழுத்துரு மற்றும் அளவுகளை எளிதாக மாற்றலாம்.

ஆனால் இது இப்போதைக்கு ஆங்கிலத்திலேயே சாத்தியமாகிறது. ஸ்கேன் கருவி வாங்கும் போதே இந்த மென்பொருளை உடன் தருவார்கள்.

தனியாக இதற்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருள்தான் பைன் ரீடர் (FINE READER)

முகவரி : http://www.abbyy.com/finereader7/?param=43509

இதேபோல் தமிழில் இருந்தால் தகவல் சொல்லுங்களேன்.

நாங்கள் மரணத்தையும் நேசிக்கிறோம்.


“புரட்சி வீரன் பகத் சிங்  தூக்கிலிடப்பட நாள்  23 மார்சு1931.

குண்டுகளை வீசிவிட்டு, தப்பியோடுவதைக் காட்டிலும், தாங்களே கைதாகச் சம்மதித்து, பிறகு நீதி மன்றங்களைத் தம் கொள்கை பரப்பும் மேடைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற பகத்சிங்கின் யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

திட்டப்படி, சட்டசபையில் குண்டு வீசப்பட்டவுடன் பகத் சிங், தத் இருவரும் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

விசாரனை என்ற பெயரில் நடந்த சித்திரவதைகள் பகத்சிங்கை ஒன்றும் செய்ய முடியவில்லை.விசாரணைகளுக்கு அசைந்து கொடுக்காத பகத்சிங்கின் நெஞ்சுறுதியைப் பற்றி அரசாங்கக் கோப்புகளில் குறிக்கப் பெற்றுள்ளது…

07.10.1930 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படது….

இறுதியில் 23.03.1931 அன்று இரவு 7.33 மணிக்கு, வீரர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

மனிதர்களின்

வாழ்க்கை சாவில் முடிகிறது.

ஆனால்

மாவீரர்களுக்கு மட்டும்

அது மேலும் தொடர்கிறது !.

(பகத் சிங்கும் இந்திய அரசியலும் என்ற நூலில் சுப.வீரபாண்டியன்)

 

நாங்கள்,

வாழ்வை நேசிப்பவர்கள் 

அதனால்

மரணத்தை வெறுப்பவர்கள்.

ஆனால், மரணம்

எங்கள் லட்சியத்துக்காகவெனில்

நாங்கள்

மரணத்தையும் நேசிக்கிறோம்.

ஏனெனி நாங்கள்,

வாழ்வை நேசிப்பவர்கள் 

-இராசோ

மகளிர் தினக்கவிதை-படையெடுப்பாய் பெண்ணினமே..


என்ன பாவம் செய்தேன் நான்?
மண்ணில் ஒரு மங்கையெனப்பிறந்ததை விட
என்ன பாவம் செய்தேன் நான்...?

பருவமடையும் முன்னே
என்னை நோக்கி நீளும்
பார்வை விரல்களினால்
நெளியும் என் கூச்சங்களை யாரறிவார் இங்கே ?

பருவமடைந்த பின்னால்
என்னைச்சுற்றி வட்டமிடும் விரச
உறவுகளின் மாயவலை விரிக்கும்
வார்த்தைச்சகதிகள் பற்றி யாரறிவார் இங்கே ?

பேருந்தில்
உரசப்படும் என் கற்பின் நுனியில்
நடு நடுங்குகிறது உயிர்..

சந்தையில்
மிகுதிப்பணம் தருவதாக
என் கை தீண்டும் கடைக்காரன்
என் அப்பா வயதில் இருக்கும்போது
எப்படி செருப்பெடுத்து அடிப்பது ?

வேலை தேடி அலையும் வயதில்
"ஒத்துழைக்கச்" சொல்லி
ஒத்தூதும் உலகில்
எனக்கான சுதந்திரம் எந்தத்தீயில் எப்படிச்சாம்பலானது ?

திருமணத்தின் பின்னும்
"வீட்டுச்சாப்பாடு" சரியில்லையென்றால்
பந்தி விரிக்கத்தயார் என்னும்
படுபாதகர்களின் மோகப்பார்வைகளுக்கு
விலங்கிடுவது யார் ?

என்ன உலகமடா இது?

பட்டினியை போக்குகிறேன்-உன்
பத்தினியை தா என்னும்
பைத்தியங்கள் வாழும் வரை-எம்
பெண்ணினமே எங்கு போவோம் நாம்..?

அழுதுவிட்டு அடுப்பூதிய
பழுதுபட்ட காலம் உடைத்து
பழி தீர்க்கும் நெருப்பெடுத்து
கழிசடைகள் சுட்டுப்பொசுக்கு...

எதிர்காலம் உன் கையில்
பொலிவுடனே சுடர்விடவே
எண்திசையும் அதிரும் வண்ணம்
படையெடுப்பாய் பெண்ணினமே..

நிந்தவூர் ஷிப்லி

எப்போது வயது முதுர்ச்சி துவங்குகிறது ?

மனித வாழ்வில் வயது நிலையானது இல்லை. மனித உடலின் அடிப்படை அலகு செல் ஆகும். பல ஆயிரம் செல்களின் தொகுப்பே திசுக்களாகும். ஒரேவகையான செல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட உறுப்புகளை தோற்றுவிக்கும். திசுகள் குறிப்பிட்ட காலத்தில் அழிவதும் தோன்றுவதும் இயற்கையாக நடக்கும் நிகழ்வாகும். வயது முதிர்ச்சி வரவர புதிய திசுக்கள் தோன்றுவது குறைவாக நடைபெறுகிறது. உடல் திறன், நல் உணவு, உழைப்பு,சுற்றுச்சூழலின் தாக்கம் இந்நடவடிகையில் பெறும் பங்குவகிக்கிறது.

வயது முதிர்ச்சி தவிர்க்க முடியாதபடி படிப்படியாக நடைபெறுகிறது. மொத்த உடல் செயலியக்கத்தில் 30வயதுக்கு மேலிறுந்தே மெல்லமெல்லமாக,கீழிறங்குமுகமாக செயல்பாடுகள் நடைப்பெற்று வருகிறது

தசைகள் (30வயதிலிருந்து முதிர்ச்சி துவங்குகிறது )

தசை செல்களின் வலிமை கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. இதை தசைத்தன்மை இழப்பு(Sarcopenia) தன்மை 30 வயதிலிருந்தே துவங்குகிறது.வளர்சிதை மாற்ற விகிதம் (Metabolic Rate) குறைந்து கொண்டே வருகிறது. விளைவு உடல் சக்தி,கலோரியின் தேவை குறைவாகிறது. உடலில் எரிகப்படாத கொழுப்பு சக்தியின் அளவு கூடுகிறது.

இந்த உடல் இயக்க போக்கைத்தடுக்க/குறைக்க தொடர்சியான உடல்பயிற்சி நல்ல கைக்கொடுக்கும்.

மூளை (30 வயதிலிருந்து)

மூளைச்செல்லின் அடிப்படை அலகு நியுரான் ஆகும். மூளைச்சுறுக்கமே அதனை சுருங்கச்செய்து சிறியதாக்குகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் நியுரான் செல்கள் குறைந்து அல்லது இரத்த ஓட்டம் மூளைக்கு செல்வது குறைய ஆரம்பிகிறது. பெரும்பாலானோர் அவர்களுடைய மதிநுட்பத்திறனில் சில மாற்றங்கள் ஏற்படுவதை உணர்வார்கள். நீண்ட நேரம் யோசிப்பது, கணக்கு போடும் திறனில் காலம் அதிகமாகுவது.

ஆனால் பெண்களுக்கு ஆண்களைவிட மூளைச்செயல் பாட்டில் காலம் கடந்தே ஆரம்பிகிறது. காரணம் அவர்களுக்குள்ளே சுறக்கும் ஈஸ்ட்ரோஜன் ஆர்மோன் காரணமாகிறது.

கண்கள் (40 வயதிலிருந்து)

கண்ணிலுள்ள லென்சின் தன்மையில் மீள்நீட்சித்தன்மை குறைந்து தடிமனாகிறது. அதனால் பார்வையின் குவியும் தன்மை மாறுபடுகிறது. குறைந்த வெளிச்சம் மற்றும் மஞ்சல் நிற ஒளியில் பார்க்கும் தன்மை கடினமாகிறது. இதனால் கண்மணியின்  ஒளியின் தன்மைக் கேற்ப மாறும் தன்மை மெதுவாகவே செயல்படுகிறது.

நரம்பு செல்களின் குறைவால் உற்று கவனிக்ககூடிய தோற்றம் பலவீனமடைகிறது.

கண்களில் லென்ஸ் திரவம், ஈரம் உலர்ந்து விடுவதால் கண்களில் வரட்சி பார்வையில் ஏற்படுகிறது.

காது (50 வயதுக்கிடையில்)

காது கேட்புத்திறனில் குறைகிறது. குழந்தை மற்றும் பெண்களின் குரல்களை கேட்புத்திறன் குறைவதை உணரலாம்.

இருதயம் (40 வயது முதல்)

பெருந்தமனித் தடிப்பு (Atherosclerosis) , இந்நிலை இருதயம் மற்றும் தமணி சுறுங்கி விரியும் தன்மை மெல்ல மெல்ல இழக்கிறது. இதனால் இருதயம் இரத்தத்தை தள்ளும் செயலை கடினமாக செய்கிறது. உறுப்புகளுக்கு இரத்தம் செல்லும் நிலை மெதுவாகவே நடைபெறுகிறது.

முடி (30வயது முதல்)

முடி வளைர்நிலை  மெல்ல குறைகிறது.  முடியின் மெல்லிய தன்மையாகி சுருங்கி ஒவ்வொரு முடியும் மாறுகிறது . முடி உதிர்ந்து வழுக்கையாகிறது. முடியில் உள்ள நிறமிகள் தன் நிறமியின் தன்மையை இழந்து வெள்ளை மற்றும் பழுப்பு நிறமாகிறது.

தோல் (25வயது  முதல்)

வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கிறது. நெகிழ்வு தன்மை, சுருங்கு தன்மை மெல்ல இழந்து சுருக்கம் தோன்றுகிறது. சூரிய ஒளிபட தன் நிறத்தை மெல்ல இழகிறது. இந்நிலையை குறைக்க நார்சத்து உள்ள உணவு சாப்பிடுதல், பிரனாயமா யோகா செய்வதின் மூலம் தடுக்கலாம்.

( இதை படித்துவிட்டு நான் இளமையாகத்தான் இருகிறேன் என்றால் நான் பொறுப்பள்ள. உங்கள் நம்பிக்கைக்கு நான் குறுக்கே நிற்கப்போவதில்லை )

இக்கட்டுரை அடிப்படை ஆதாரம் சென்னை, டிகான் கிரானிகல் 08.03.2009 நாளிட்ட ஆங்கில நாளிதழில் டாக்டர் வி. ரவிந்தர நாத் ரெட்டி, அமெரிக அக்கடாமியின் வயது மூப்பு மருத்தவப் பிரிவு அவர்கள் எழுதியது )

மாணவர்களுக்கான பயனுள்ள இணையதளங்கள்


தமிழ் நாட்டில் மேநிலைப் பள்ளி தேர்வுகள் நடைப்பெற்று வருகிறது. மருத்துவர் மற்றும் பொறியாளர் கனவுகளோடு மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள்.  தமிழக அரசு கல்வி மற்றும் தேர்வு உள்ளிட்ட பல செய்திகளோடு இணையதளம் ஆரம்பிகப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் என பல இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிக்கான பகுதியை சொடுக்கினால் கேள்வித்தாள்களின் தொகுப்பு (Question Bank )  கொடுக்கப்பட்டுள்ளது. அதை சொடுக்கி தறவிரக்கம் செய்து கொள்ளலாம். அரசு தேர்வாக நடக்கும் 10 மற்றும் மேநிலை பிரிவுகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முகவரி :

http://pallikalvi.in/

இன்னொருதளம் : இதில் வகுப்பு வாரியாக தனி பயிற்சி ( On line Tuition )  கொடுகப்பட்டுள்ளது.  கணிதம் வழிமுறை பாடங்கள், உங்கள் கணிணியில் ஓரு ஆசிரியர் உங்களுக்காக.

http://www.topperlearning.com/

இதை உங்கள் பதிவில் இணைக்க...