எலும்புகளை மெலிவாக்கும் செல்போன்கள்



நீங்கள் செல்போன் உபயோகிப்பவராகவே இருப்பீர் !

அதுவும் இடுப்பில் கட்டும் பெல்டில் செல்போன் வைப்பவரா? இது உங்களுக்கான செய்தியே !.

செல்போன்களில் வெளிப்படும் மின் காந்த அலைகளின்(electromagnetic) வெளிப்பாட்டில் எலும்புகளின் அடர்த்தியில் மெலிவு (Osteoporosis) ஏற்படுவதாக கூறுகிறார்கள். அதுவும் இடுப்பெலும்பு வளையம் (pelvis Area ) பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது. சுலிமான் டெமிரில் பல்கலைக்கழகம், துருக்கியைச்சார்ந்த டாக்டர் டோல்கா மற்றும் அவரது குழுவினர் செய்த ஆய்வின்படி செல்போன்களில் வெளிப்படும் மின் காந்த அலைகளின் வெளிப்பாடு எலும்பை பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

சுமார் 150 ஆண்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். அவர்களை எக்ஸ் ரே அப்சார்ப்மெட்ரி(Dual-X-ray absorptiometry) மூலம் அளவீடு செய்து எலும்பு மெலிவு பாதிப்புக்கு உள்ளாவதை கண்டறிந்துள்ளார்கள்.

ஒரு செல்போன் பயன்படுத்துவோர் தினம் 15 மணி நேரம் உத்தேசமாக 6 ஆண்டுகள் பயன்படுத்துவதின் மூலம் இப்பாதிப்புக்கு உள்ளாவதாக இவ்வாய்வு கூறுகிறது.

செல்போன் உமிழும் மின் காந்த அலைகள் இந்த எலும்பு மெலிவு தாக்கத்தை உண்டுபண்ணுவதாக கூறுகிறார்கள்.

இருந்தும் இம்முடிவுகள் துவக்க நிலையில் உள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை என்று நாம் மறுக்கமுடியாது. இவ்வாய்வு செப்டம்பர் மாத-The Journal of Craniofacial Surgery இதழில் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு அறிவியல் சார்ந்த நுட்ப பயன்பாட்டில் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகும் செய்தி இருக்கவே செய்கிறது.

ஜி மெயிலில் தானாகவே பதில் அளிக்கும் வசதி.




விடுமுறையில் செல்கிறீர்கள்.

ஒரு வாரத்திற்கு உங்களால் மின் அஞ்சலை பார்க்க முடியாத சூழல்.

இருந்தலும் வரும் மின் அஞ்சலுக்கு உங்கள் சிரமத்தை, பிரச்சனையை அஞ்சல் அனுப்பியவருக்கு சொல்ல வேண்டும்.

கவலை வேண்டாம். ஜீ மெயில் அப்பணியை ஜி மெயில் செய்யும்.

முதலில் உங்கள் ஜீ மெயிலை திறந்து கொள்ளுங்கள்.

படம் :1

செட்டிங் (Settings ) செல்லுங்கள்

படம் :2

ஜெனரல் (General) டேபை சொடுக்குங்கள்.

படம் : 3

Vacation responder பிரிவில் Vacation responder on செய்யுங்கள்.

வழக்கம் போல

Subject: and Message: உங்கள் கருத்தை பதிசெய்து

Only send a response to people in my Contacts என்ற கட்டத்தில் டிக் செய்யுங்கள்

மாற்றத்தை சேமித்து விடுப்பில் செல்லுங்கள்.

நீங்கள் பதிவு செய்த உங்கள் கருத்தை எண்ணத்தை பதிலாக ஜி மெயில் அனுப்பிக்கொண்டே இருக்கும்.

தமிழ் பேசும் டிஸ்கவரி சேனல்.



அறிவியல், இயற்கை, கண்டுபிடிப்புகள், மருத்துவம், உயிரியல், விலங்கியல், மருத்துவம் என்ற விஞ்ஞான சிகரங்களின் எல்லைகளை டிஸ்கவரிச் சேனல் ஆங்கிலத்தில் வழங்கிவந்தது. காட்டுவிலங்கிகளின் அதிசய வாழ்க்கையை படக்காட்சியை மட்டும் பார்த்து அதிசயித்த தமிழுலகம் இப்போது தன் மொழியிலேயே இந் நிகழ்சிக்களை பார்க்கிறது. டிஸ்கவரி சேனல் தமிழில் மொழிமாற்றம் செய்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி செய்து வருகிறது. நான் சென்ற வீடுகளில் எல்லாம் இச் சேனல் ஆர்வத்தோடு பார்ப்பதாக கூறினார்கள். மொழியாக்கம் தமிழ் மொழியில் செய்யும் போது கல்வி, சமூக நிலையில் கீழ் உள்ளவர்களின் வீடுகளில் எல்லாம் இவ்வூடகம் செல்கிறது. சினிமாவை பற்றியே உலகமாக இருந்த தொலைக்காட்சி ஊடகம் இப்போது விஞ்ஞானத்தின் கதவுகளை திறந்து விட்டுள்ளது. இப்போது கூட இப்பதிவை எழுதிக்கொண்டு இருக்கும் போது கொரியா நாட்டில் அதிவேக தொடர்வண்டி தடத்தை கட்டியமைக்கப்பட்டது பற்றிய நிகழ்ச்சி. அதாவது 70 சதவீத மலைகளே உள்ள கொரியாவில் மலைகளை குடைந்து தொடர்வண்டி பாதை அமைப்பது .... என்ன சிறப்பு தெரியுமா? முன்பு ஊமைப்போல சில வார்த்தைகள் மட்டுமே புரிந்து படம் பார்த்த அனுபவத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

என் துனைவியார் மகன்கள் எல்லோரும் சினிமா சேனல்களுக்கு தாவாமல் பார்ப்பது அடிக்கடி நிகழ்கிறது. தாய்த்தமிழ் மொழியில் கிடைக்கும் அறிவியல் மக்களின் மூளையில் உரிமையோடு சென்று உட்கார்ந்து கொள்கிறது.

உலங்குவானூர்திகளின் தர வரிசையை சொல்லும் ஒரு நிழ்ச்சி (Countdown of Helicopters ) ஓட்டுநர்களுக்கு புரியவேண்டிய நிகழ்ச்சி ஒட்டு மொத்த குடும்பமே நிகழ்ச்சியை பார்க்க வைத்து உள்ளது.

இன்னொரு நிகழ்ச்சி இயற்கைக்கும் மனிதனுக்கும் (Man vs Wild )நடக்கும் சாகச நிகழ்ச்சியை காட்டும் காண்பொலியை தமிழில் பார்க்கும் போது மெய்சிலிர்கிறது. ஆனால் முன்பு அப்படியில்லை வெறுமனே சர்க்கஸ் பார்ப்பது போல இருக்கும். இதை உடைத்து இருக்கிறது டிஸ்கவரி. ஆம் வியாபாரம் நோக்கில் இருந்தால் கூட தாய் மொழியில் தொலைக்காட்சி ஊடகம் நிகழ்சிகளை தரும் போது பெறும் பெரும்பான்மை மக்களைச் சென்று அடைகிறது என்பது தான் உண்மை.

அனைத்து துறைகளும் தமிழில் கிடைத்தால் உழைக்கும் மக்களே பயன் பெறுவர். இப்போது டிஸ்கவரி தொலைக்காட்சி ஊடகத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger