“ என் பெயர் பாலாறு “
தோழர் சீனிவாசன்,

உங்கள் ஆவணத் திரைப்படமான “ என் பெயர் பாலாறு “ பார்த்து மௌனித்துப் போனேன்.என்னெதிரில் நடக்கும் அநீதி நடவடிக்கை பார்த்து மூன்றாவது நபராக இருந்து விட்டேனோ என்பதே.

சுற்றுச்சுழலை பாதுகாக்க எழுப்பப்பட்ட கலகக் குறலே இவ்வாவணமாகும்.உயிரோடு இருக்கும் பாலாற்றை சிறுக சிறுக கொல்லும் நடவடிக்கையின் மறு பெயர்தான் மணல் குவாரிகள். இரண்டு முறை பார்த்தும் சோகத்தில் இருந்து விடுபட்டதாய் இல்லை.

காஞ்சி அமூதன் மூலம் கிடைத்த இந்த ஆவணத்திரைப்படம் காஞ்சி மக்களுக்காக முழக்கமிடும் ஒரு போர்குரல்.

இயற்கையான வறட்சி அல்ல . உலக மயம், தொழில் மயம் என்று வளர்ச்சியை பேசும் ஊடகங்களுக்கு இந்த இயற்கையின் மீதான படுகொலை தெரிவதே இல்லை.

13 வயதாகும் என் மகனுக்கு எப்போது காட்டப்போகிறேன் நீர் ஓடும் பாலாற்றை.


தோழமையுடன்,

கோ.மணிவர்மா

அறிவியல் தமிழுக்கு முன்னுரிமை

நல்ல தமிழில் வரும் நாளிதழ் மட்டுமல்ல அறிவியல் தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பதிலும் தமிழோசை சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக சுற்றுச் சூழல் குறித்த செய்திகள், கட்டுரைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. செப்டம்பர் மாத மூன்று வாரத்தில் மட்டும் மூன்று விதமான செய்திகள் கட்டுரைகள் வந்துள்ளது.

09.9.2008 அன்று முதன்மைச்செய்தியில் இங்கிலாந்தின் வீட்டுக் கழிவுகளை கொட்டும் ‘குப்பைத் தொட்டி தமிழ்நாடு’ செய்தியில் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஏக ஆதிக்கம் கொண்ட நாடுகளின் ஆய்வுக்கூடமாக ஆகிவிட்டதை அம்பல மாக்குகிறது.எந்த நாளிதழிலும் வராத செய்தி நம்மை கலங்க வைக்கிறது.

தயாளன் அவர்களால் எழுதப்பட்ட “நெகிழியினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள்” கட்டுரை அணுக் குண்டுகள் உண்டாகிய விளைவுகளை விட அதிக அளவு பாதிப்புகளை உண்டாக்கியுள்ளதை விவரிகிறது.

16.9.2008 அன்று வெளியாகிய ஓங்கி வரும் ஓசோன் ஓட்டை என்ற அறிவியல் ஆய்வுக்கட்டுரை ஓசோன் மண்டலத்தில் விழுந்த ஓட்டை மெல்ல அடைந்து வரும் செய்தி சுற்றுச் சுழல் ஆர்வளர்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்தியாகும். மருத்துவர் மோகனதாசு அவர்களின் சுற்றுச் சுழல் குறித்த தொலை நோக்கு பார்வை வளி மண்டலத்தை காக்க உதவும்.

ஆங்கில நாளிதழ் மட்டுமே குறிப்பாக மேட்டுக்குடி சிந்தனையாளர்கள் மட்டுமே சுற்றுச்சூழலை பற்றி சிந்திப்பார்கள் என்ற கருத்தியலை உடைத்திருக்கிறது தமிழோசை.

கோ.மணிவர்மா.

சிரிப்பு


சிரிப்பு கருப்பு வெள்ளையில்
கொடி…


நெட்டை பனை

நெட்டை பனை
காய்ந்து போன ஏரி
எல்லாம் எங்களுடன் பேசும்.
·
பழுத்த பனைம் பழம்
பணமில்லாமல் கிடைகும்.
·
சுட்ட வாசம் ஊரேவீசும்
ஒரு வேளை பசியைப் போக்கும்.

·
பல்லிடுக்கில் பழந் நாறு மாட்டும்
அதை பிடுங்குவதில் ஒரு வேளையே ஓடும்
·
இருட்ட மட்டும்
ஏரி மேட்டில் ஓடுவோம்
எல்லைக்காத்தான் துணையுடன்
இருட்டிலேயே திரும்புவோம்.
·
காய்ந்த சுல்லி
காலில் தட்டும்
பொகசுலடன் வாழ்க்கை நடத்தும்
ஆச அம்மாவின் வலியும் புரியம்.
·
சுண்ட காரக் கொழம்பு
பொக வாசம் வீசும்.
ஊதி ஊதி கரியாய்ப் போன
அம்மாவின் மொகம்
சாப்பிடும் என்னை பார்த்து மலரும்.
·

மொழியின் குரல்


திலிபன்


இருளை கிழிக்கும்
ஒளிச்சுடர்


அன்பு


மலை முகடு
எல்லாம்
செயற்கை
செருகல்

மிளகாய் காரத்தில் மழைத் துளி

ஒசோனை மீறுமா இந்த பச்சை .

மேலே படர்ந்த மழைத் துளி நாளையும் கிடைக்குமா . என் சந்ததி நாளை பழிக்குமா ?... கார்பன் கருப்பில் இருந்து பச்சையம் தப்புமா ?

அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா - காஞ்சிபுரம் .


மேட்டுக்குடி தமிழை விடுவித்தவன் . பாமரனுக்கும்
அரசியல் சொல்லியவன் .கவர்ச்சித்
தமிழை விதைத்தவன்.

மணிவர்மா படங்கள்டாக்டர் விமுனா மூர்த்தி நிகழ்ச்சி கலை நிகழ்ச்சிஇதை உங்கள் பதிவில் இணைக்க...