ஹைகூ கவிதைகள் -கு.அ. தமிழ்மொழி

திருவோடு ஏந்தி
தெருவோடு போகிறான்
செல்வக் கடவுள்?

0

சிரிக்கிறார்
காந்தி
கள்ள நோட்டு

0

அடிக்கப் போகிறது
சாவு மணி
பிள்ளையார் ஊர்வலம்

0

எரிகிறது
தெரு விளக்கு
தேர்தல்

0

ஆறுமுகனே
பன்னிரு கைகள் வேண்டும்
வீட்டுப் பாடம்

0

பண்பாட்டைச் சீரழிக்கும்
வீட்டுக்குள் பகை
தொலைக்காட்சி

-கு.அ. தமிழ்மொழி 

10ஆம் வகுப்பு, அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி, கதிர்காமம், புதுச்சேரி_9.
நன்றி‍‍‍ ‍‍: புன்னகை‍ கேட்பினும் பெரிது கேள்‍‍ நவம்பர் 2008 இதழ்

மனநல மருத்துவர் முன் நான்…-தி.அய்யப்பன் கவிதை.

அழைத்து வந்தவர்கள் சொன்னதோ

ஆயிரம் காரணங்கள்

 

பிச்சைக்காரனுக்கு ஐம்பது ரூபாய்

போட்டதைச் சொன்னார் ஒருவர்

 

நாய்க்குட்டி இறந்த சேதி கேட்டு

விமானப் பயணத்தை ரத்து செய்ததைச்

சொன்னது இன்னொரு நண்பன்

 

மகனின் தேர்ச்சி அட்டையில்

‘தேர்வுஎன்பதே

முட்டாள்தனமான ஒன்று

என்று கையொப்பமிட்டதைச்

சொல்லி  வருந்தினாள் மனைவி

 

எனக்கோ வேறு கவலை

மீன்களை அடைத்து வைத்திருக்கும் 

இந்த மேஜை மீன் தொட்டியை

எப்படி உடைப்பது ?

(படித்ததில் பிடித்தது)

 

 

(11.02.2009 ஆனந்த விகடன் வெளியான கவிதை.)

போட்டோஷாபில் சின்ன டிரிக்…

போட்டோஷாப் மென்பொருளில் எனக்கு தெரிந்த சில தந்திர செயல்பாடுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சரி. வேலைக்குச் செல்வோம்.

கருப்பு வெள்ளை படத்தை குறிப்பிட்ட பகுதியை மட்டும் வண்ணமாக்குவதை பார்ப்போம்.

அடோப் போட்டோஷாப் மென்பொருளை திறந்து எந்த வண்ணப்படத்தை மாற்றவேண்டுமோ அப்படத்தை open மூலம் திறந்து கொள்ளுங்கள்.


படம்.1.

மேலே உள்ள டூல் பாரில் IMAGEக்கு சென்று Adjecements  சொடுக்கி  பிறகு Channel Mixer யை கிளிக் செய்யுங்கள்.

படம் .2.

Channel Mixer பகுதியில் கீழே தோன்றும்  Monochrome கட்டத்தில் டிக் செய்து ஓகே கொடுங்கள்.

இப்போது படம் கருப்பு வெள்ளையாகி இருக்கும்.

படம் .3.

சைடில் உள்ள கருவிகள் கானும் பகுதியில்  History Brush toolயை தேர்வு செய்யுங்கள்.

இக்கருவி பழைய மாற்றங்களை நினைவில் வைத்திருக்கும்.

படம் . 4.

உங்களுக்குத் தேவையான  பிரஷ் அளவு தேர்வு செய்து , கருப்பு வெள்ளைப்படத்தில் கிளிக் செய்தவாறே தேவையான இடத்தில் தேய்கவும் . வண்ணம் வர ஆரம்பிகும். பணிமுடிந்ததும் சேமியுங்கள்.

பல படங்களில்  நீங்கள் கண்ட தந்திர செயல் இப்போது  உங்கள் கையில்.

இன்று ஒரு எஸ் எம் எஸ்


நண்பர் குமரவேல் அனுப்பிய குறுஞ்செய்தி
Some of the best music
was composed by
Bethoven...
He was deaf.

Some of the best poetry
about nature was
written bu Milton...
He was Blind.

One of the great leader was
Franklin Roosevelt..,
He served from a wheelChair.

Turn Scars in to Stars
You are born to achieve


இதை உங்கள் பதிவில் இணைக்க...