உங்கள் வலைப்பதிவில் நீங்களே வாக்கெடுப்பு நடத்தலாம்?









வாக்கெடுப்பு நடத்துவதைபல இணையதளத்தில் பார்க்கலாம் . அவ்வப்போது எழும்பிரச்சனைகள், சூடான விவாதங்களுக்கு பொது கருத்து, மாதிரி கணக்கெடுப்பு,

இணையத் தள படிப்பாளிகளிடையே கருத்து கணக்கெடுப்பை நடத்தலாம்.

http://polldaddy.com/

இதற்கு கீழ் கண்ட இணைய முகவரி இலவச பயன்பாட்டைத் தருகிறது.

வழக்கம் போலவே நாம் இதிலும் பதிவை செய்து கொண்டு நமக்கென்று தனி கணக்கை துவங்க வேண்டும். பதிவு முடிந்தவுடன் ஒப்புதல் கிடைக்கும்.

நாம் செய்யப்போகும் கருத்து கணிப்பு/ வாக்கெடுப்பை முன்னமே தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.

  • சரியான தலைப்பு
  • கேட்கப்போகும் கேள்வி
  • அல்லது தேர்வு செய்யச் சொல்லும் பதில்கள்

நாம் முன்னதாகவே யுனிக்கோட் தமிழில் தட்டச்சு செய்து கொண்டு ,படம் 2. காட்டியுள்ள இடத்தில் ஒட்ட வேண்டும். பிறகு நமக்குத்தேவையான வாக்குமுறை குறிப்பாக ஒருவரே பல கேள்விகளை தேர்வு செய்வது, ஒரே வாக்கை மட்டும் அளிப்பது போன்ற தேர்வுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நமக்குத்தேவையான டிசனை தேர்வு செய்யவும்.

முடிவுகள் பார்வையாளர்களுக்கு எப்படி காட்ட வேண்டும்?

எண்ணிக்கையில்

விழுக்காட்டில் அல்லது மறைத்தல் போன்ற வற்றையும் தேர்வு செய்தல் வேண்டும். முடிதவுடன் நமக்கு HTML கோடை இத்தளம் நமக்குத்தரும். இதை நமது வலையிதழில் HTML கேட்ஜில் ஒட்டவேண்டியதுதான். இப்போது வாக்கெடுப்பு பட்டை தயார். உங்கள் பதிவிற்கு வருபவர்கள் வாக்களிப்பு செய்வார்கள்.

உங்களுக்கு தேவையான எண்ணிக்கை பதிவானதுடன் அது குறித்து தனியாக ஆய்வு பதிவையும் நீங்கள் பதிப்பிக்கலாம்.

பை ----ஜெயபாஸ்கரன் கவிதை

கண்ணிமைக்கும் நேரத்தில்
எனது கைப் பையைக்
களவாடிப் போனவனைக் குறித்து
கவலையாக இருக்கிறேன் நான்

என்னால் யூகிக்க இயலாத
ஏதோ ஒரு இடத்தில் வைத்து
அதைப் பிரித்த அவன்
எப்படியெல்லாம் குழம்பியிருப்பான்

கொடுத்த கடனைக் கேட்டு
என்னை மிரட்டிக் கொண்டிருக்கும்
இந்த வாரத்திற்கான
அந்த கடித்திற்கு
என்ன பதில் எழுத இயலும் அவனால்?

இப்போதைக்குத் தர இயலாமைக்கான
காரணங்கள் எல்லாவற்றையும்
கடந்த ஐந்து ஆண்டுகளாக
நான் எழுதித் தீர்த்துவிட்டதை
எப்படி அறிவான் அவன்

அவனையும் அழைக்கும்
இலக்கியக் கூட்ட அழைப்பிதழ்களை
என்ன செய்யப் போகிறான்?

மதிப்புரைக்கு வந்திருந்த
அந்த இரண்டு நூல்களைப்
பாராட்டித் தொலைப்பானோ ஒரு வேளை!

எக்கேடும் கெடட்டும்...
பையைக் களவாடியது குறித்து
அவனுக்கொரு துயரமும்
களவுகொடுத்தது குறித்து
எனக்கொரு மகிழ்ச்சியும்
என்றைக்கும் எஞ்சியிருக்கும்

இனி,
கைப்பையைத் திருட
அவன் துணியும் போதெல்லாம்
ஒருவேளை அது
என் பையாக
இருந்துவிடுமோ என்று
அஞ்சியே தீர வேண்டும்
அவன்.

- ஜெயபாஸ்கரன்(jayabaskaran_1960@rediffmail.com)

பை ----ஜெயபாஸ்கரன் கவிதை

கண்ணிமைக்கும் நேரத்தில்
எனது கைப் பையைக்
களவாடிப் போனவனைக் குறித்து
கவலையாக இருக்கிறேன் நான்

என்னால் யூகிக்க இயலாத
ஏதோ ஒரு இடத்தில் வைத்து
அதைப் பிரித்த அவன்
எப்படியெல்லாம் குழம்பியிருப்பான்

கொடுத்த கடனைக் கேட்டு
என்னை மிரட்டிக் கொண்டிருக்கும்
இந்த வாரத்திற்கான
அந்த கடித்திற்கு
என்ன பதில் எழுத இயலும் அவனால்?

இப்போதைக்குத் தர இயலாமைக்கான
காரணங்கள் எல்லாவற்றையும்
கடந்த ஐந்து ஆண்டுகளாக
நான் எழுதித் தீர்த்துவிட்டதை
எப்படி அறிவான் அவன்

அவனையும் அழைக்கும்
இலக்கியக் கூட்ட அழைப்பிதழ்களை
என்ன செய்யப் போகிறான்?

மதிப்புரைக்கு வந்திருந்த
அந்த இரண்டு நூல்களைப்
பாராட்டித் தொலைப்பானோ ஒரு வேளை!

எக்கேடும் கெடட்டும்...
பையைக் களவாடியது குறித்து
அவனுக்கொரு துயரமும்
களவுகொடுத்தது குறித்து
எனக்கொரு மகிழ்ச்சியும்
என்றைக்கும் எஞ்சியிருக்கும்

இனி,
கைப்பையைத் திருட
அவன் துணியும் போதெல்லாம்
ஒருவேளை அது
என் பையாக
இருந்துவிடுமோ என்று
அஞ்சியே தீர வேண்டும்
அவன்.

- ஜெயபாஸ்கரன் (jayabaskaran_1960@rediffmail.com)

கிழிந்து போன நாட்குறிப்பில் இருந்து... கவிதை


சாதியை எதிர்க்க

வாழலாமென்றேன்

வேண்டாமென்றாய்..

நம் மரணத்தில் வாழ்கிறது சாதி...


கரையொதுங்கும்

தமிழக மீனவனின்

பிணத்தில்

தமிழக இறையான்மை....

சிரிக்கும்

சிங்களவனின்

முகத்தில் இந்திய இறையான்மை...

டெங்கு சிகிச்சை முறைகள்

Guidelines for Treatment of Dengue

வலைப்பதிவில் பிடிஎப் ,பவர்பாய்ண்ட் கோப்புகளை இணைக்க...








லைப்பதிவில் பல ஆவணங்கள் இணைக்க முயற்சித்து வேறு ஏதாவது வழிமுறைகள் உண்டா ? என்று பல கேள்விகள் நம்மையே கேட்டு இருப்போம்.

அதில் ஒன்று தான். பல ஆவணங்கள், கோப்புக்கள் கீழ்கண்ட வடிவத்தில் நம்மிடம் இருக்கலாம்.

அவ்வகைகள்...

Pdf

MS Off Doc.

MS Xls.Xlsx.

MS PPT

Open Office

Odt,odf,sxw,swi,ect,

Txt

இவ்வகை கோப்புக்களை நம் வலைப்பதிவ்பில் இணைக்க கீழ் கண்ட முகவரியின் பயன்பாட்டை நாம் பெற வேண்டும்.

http://www.scribd.com/

பதிவு செய்தல்

முதலில் வழக்கமாக இணையத்தளத்தின் பயனைப்பெற பதிவு மிக முக்கியமாகிறது.

படம்.1 மற்றும் 2.

நமது கோப்புக்களை உள்ளீடு செய்ய மூன்றாவது பட்த்திக் காட்டியவாறு அப்லோடு செய்ய சொடுக்கவேண்டும்.பார்க்க படம்.4ல் உள்ளவாறு தோன்றும்...

படத்தில் காட்டிய வாரு நம்து கோப்பை உள்ளீடு செய்யவேண்டும்.

I agree என்ற பெட்டியில் டிக் செய்து டாக்குமெண்டை அப்லோடு செய்ய சொடுக்கவேண்டும்.

படம்.5.

இந்த விண்டோவில் தோன்றும் தோற்றத்தில்

Describe Your Document

Title

Category

போன்ற பிரிவுகளை தேர்வு செய்திடல் வேண்டும்.

அடி கோடிட்ட குறியின் படி

Skip to My Docs

தேர்வு செய்ய சொடுக்க வேண்டும்.

படம்.6.

Skip to My Docs

தேர்வு செய்ய சொடுக்க வேண்டும். கீழ் கண்டவாறு தோற்றத்தை காண்கிறோம்.

இதில் நாம் உள்ளீடு செய்த கோப்புகள் எல்லாம் தெரிகிறது.. அதில் பல தேர்வுகள் உள்ளது .நமக்குத்தேவையானது.Share மஞ்சள் வண்ணமிட்டு காண்பிக்கப்பட்டுள்ள இட்த்தில் சொடுக்க நமக்குத்தேவையான கோடுகள் {Codes } கிடைக்கப்போகிறது

படம்.7.

ஷேர் பகுதில் நான்கு தேர்வுகள் உள்ளது . நமக்குத்தேவையானது. முதல் பிரிவில் உள்ளதே. அக்கோடுகளை காப்பி செய்து நமது பிளாக்கில் புதிய பதிவில் பேஸ்டு செய்து அப்லோடு செய்யுங்கள். அவ்வளவுதான்.

[விளக்கத்திற்காக நான் இப்போது ஒரு புதிய பிடிஎஃப் பைலை இணைத்துள்ளேன். பதிவின் பெயர் டெங்கு சிகிச்சை முறைகள் ஆங்கிலத்தில் இப்பதிவை சொடுக்கி பார்க்கவும்

http://komanivarma.blogspot.com/2009/06/blog-post_8236.html ]

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger