ஸ்லைடு ஷோ வை இணைப்பது எப்படி?

மேலே உள்ள ஸ்லைடு ஷோ போல இணைப்பது எளிது.

இவ்வசதியை http://www.slide.com/ இணைய தளம் செய்து கொடுக்கிறது. உங்களுக்கு விருப்பமான படங்களை பதிவேற்றுங்கள்.

வண்ணம், வடிவமைப்பு, டிஜிட்டல் சுழர்ச்சி முதலியவற்றை சேர்ப்பித்து கோடை கேளுங்கள். மின் அஞ்சல் தகவல் கேட்கும். கொடுத்தவுடனையே எச்டிஎம்மெல் ( HTML ) கோடை கொடுக்கும்.

உங்கள் இணைய பக்கத்தில் பதிவு செய்து சேமியுங்கள்.

உங்கள் விருப்பமானவர்களுக்கும் இணைய முகவரியை அணுப்பி வாழ்த்தும் தெரிவிக்கலாம்.

உங்கள் பிளாகுக்கு புதுச் சட்டையை மாட்டுங்கள்.

நீங்கள் பார்க்கும் என்னுடைய பதிவின் சட்டையை புதியாக 2 நாட்களுக்கு முன்தான் மாட்டினேன்.

புதியவர்களுக்காக இப்பதிவு. இது பழைய கதையல்லாவா என்பவர்களுக்கு அல்ல இது.

சரி.

சட்டையை வாங்கும் போது என்ன செய்வோம். நல்ல கடையை பார்ப்போம். பிடித்த வண்ணம், டிசைன், அதுவும் ஆயத்த ஆடையாக இருந்தால் அளவு முக்கியம்.

இப்படித்தான் நாம் பிளாகுக்கான சட்டையை மாட்டப்போகிறோம்.

கீழே முகவரிகளுக்கு செல்லுங்கள். சட்டை இலவசமாக கிடைக்கும்.

http://mashable.com/2008/05/17/70-plus-new-and-beautiful-blogger-templates/

http://freetemplates.blogspot.com/

http://dzineblog.com/2009/06/fresh-and-beautifull-blogger-templates.html

டெமோவும் தருவார்கள் .சொடுக்கி பாருங்கள். டிசைன் பிடித்து இருக்கிறதா? நல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

சிலர் நோட் பேடில் கோப்புகளை தருவார்கள்.

சிலர் சுருக்கி சிப் கோப்புகளாக தருவார்கள். அதை விரிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

அப்போது கிடைக்கும் போல்டரில்

XXXXXX.xml(xml Document) என்ற பெயரில் கோப்பை தருவார்கள்.

இக் கோப்பைதான் நாம் சட்டையாக மற்றப் போகிறோம். இதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

ஒன்றல்ல 3 அல்லது 4 ஆக இருக்கட்டும். பொருத்திய பிறகு பிடிக்க வில்லை என்றால் மாற்றிக்கொள்ளலாம்.

பணிக்கு செல்வோம்.

பிளாகின் உள்ளே செல்லுங்கள்.

1.முதலில் லேவுட் (Layout)

2.பிறகு Edit HTML க்குச் செல்லவும்.

நாம் பிளாகில் போட்டு வைத்துள்ள கேட்ஜஸ்கள் எல்லாம் மாற்றும்போது அம்போதான். பயப்பட வேண்டாம். ஒரு வேர்ட் பைலில் அதனை உரிய தலைப்பிட்டு சேமிக்கவும்.

நாம் புதிய சட்டையை மாட்டும் போது பழைய டிசைன் எல்லாம் போய்விடும். அதற்குதான் பாதுகாப்புக்கு பிளாகில் ஒரு நல்வசதியை தந்துள்ளார்கள்.

Download full Template இதை சொடுக்கி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

பிறகு....

இதற்கு கீழே பாருங்கள்.

Chose File என்ற இடத்தில் நீங்கள் பதிவிறக்கம் செய்துள்ள xxxxxxx. Xml கோப்பை பதிவேற்றுங்கள் (Uplod) என்ற இடத்தில் சொடுக்கி பதி வேற்றுங்கள்.

இப்போது சேமியுங்கள்.

உங்கள் பதிவு அமைப்புகள் காணாமல் போகும் என்ற எச்சரிக்கைச் செய்திவரும். பயம் வேண்டாம்.

நாம் தான் முன் கூட்டியே அதை சேமித்துள்ளோமே (மறக்க வேண்டாம் எல்லா கெட்ஜுகளையும் சேமியுங்கள்.)

பிறகு view blog சொடுக்கி பாருங்கள். பிடித்திருந்தால் நல்லது இல்லை என்றால் மீண்டும் புதிய டெம்ப் லெட் கோப்பை பதிவேற்றி பாருங்கள். இந்த புத்தாண்டுக்கு உங்கள் பதிவு புது சட்டை மாட்டட்டும்.

.............. பின்னூட்டம் போடலாமே

மாலை சூரிய அமர்வில் கேமராவுடன் ஒரு நாள்.

டிஜிட்டல் கேமிரா வாங்கிய புதிது. என் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்களுடன் பக்கத்தில் இருந்த ஏரிக்கரையில் செல்லவிட்டு படக்காட்சிக்களை பதிவு செய்தேன். பிறகு கணினியில் கொஞ்சம் வண்ணம் ஏற்றிய படங்கள் தான் இது. இப்படங்கள் எடுத்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது.ஊரைவிட்டு ஓடியவன்.... கவிதை


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்

காலனிப் பெண்ணுடன் ஓடியவன்

திரும்பி வருகிறேன்.

ஒத்தையடிப்பாதைகள் சிமெண்டு சாலைக்கு

மாறி இருக்கிறது.

மாடி கட்டிடமாக உயர்ந்துள்ளது

நான் படித்த பஞ்சாயத்துப் பள்ளி..

இறவைக் கிணறு மேல் நிலைத் தொட்டியாக

மாறியுள்ளது.

கட்சிக் கொடிகளைவிட

சாதிக் கொடிகள் உயரத்தில்..

நான் பார்த்த செங்கொடிகள்

கருப்புக்கொடிகள் எங்கே?

வெறுங்காலுடன் ஒடியவன்

ஷூவுடன் நடந்துவருகிறேன்.

ஊரில் இருந்த பெரியார் சிலை அதே இடத்தில்

உடைபட்டு கிடைக்கிறது.

தலையில் காகத்தின் எச்சங்கள்...

காலனிக்கு வெளியே

அம்பேத்கர் கம்பிவேளிக்குள் சிறைப்பட்டுள்ளார்...

எல்லாமே மாறி இருக்கிறது.

இடுகாட்டில் நடப்பது போல

நடந்துபோகிறேன்....

.

எல்லாமே எளிதாக இருக்கிறது... ஆனால்


எப்படியோ... வாழ்வது

மிக எளிதாக இருக்கிறது.

மற்றவர்களை விரும்புவதும்

மிக எளிதே..

வாய்விட்டு சிரிப்பதும் மிக மிக

எளிதே...

வெல்வதும் எளிதே...

ஆனால்

எளிமையாக வாழ்வது

எளிதாகவே இல்லை.

இதை உங்கள் பதிவில் இணைக்க...