தமிழால் வெற்றியடைந்த டிஸ்கவரி சேனல்.



உலகத்தின் அதிசயங்களை வீட்டு வரவேற்பறைக்கு கொண்டு வந்து காட்டிய டிஸ்கவரிச்சேனல் இப்போது 24 மணி நேரமும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்து வருகிறது.


வெறும் படக்காட்சிகளை அன்னாந்து பார்த்தவர்கள் டிஸ்கவரியின் கையைப் பிடித்து எம் தமிழர்கள் நடந்து செல்கிறார்கள். பார்வையாளர்களை அதிகம் கூட்டியுள்ளது.
குறிப்பாக பியர்ஸ் கிர்யல்ஸ் (Bear Grylls ) நடத்தும் மனிதனுக்கும் இயற்கைகும் (Man VS Wild ) இடையே உள்ள போராட்டத்தை யதார்த்தமாக காட்டுகிறது. பியர்ஸ் 23ம் வயதிலேயே கின்னஸ் சாதனையை எவெரெஸ்டு சிகரத்தில் ஏறி வெற்றியை ஈட்டியவர். இவர்தான் இத்தொடரின் நாயகன்.இங்கே சொடுக்க அவரின் இணையத்தில் வீடியோவை பார்க்கலாம். கிராமப்பகுதியில் இளைஞர்கள் மத்தியில் இவர் பிரபலம்.

ஏனென்றால் தமிழில் இவர் பேசும் போது காது கொடுத்து கேட்கச் செய்கிறது, பார்க்கச் செய்கிறது. வெற்றியும் அடைந்து இருக்கிறது. ஆம் முதலில் சில மணி நேரங்களே ஒலிபரப்பு செய்து வந்த டிஸ்கவரி இப்போது 24 மணி நேரம் ஒளிப்பரப்பு செய்கிறது.
தனித்து விடப்பட்ட நிலையில் இயற்கையை எப்படி எதிர் கொள்வது என்பதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கம். ஆனால் வானவியல், புவியியல், விலங்கியல், தாவரவியல்,சுற்றுச்சூழல் போன்ற செய்திகளை காட்சியமைப்போடு சொல்லுவதால் பார்வையாளர்காள் கூடுகிறார்கள்.
இதன் பாதிப்பு பாருங்கள் என் வீட்டுப்பிள்ளைகள் ஓணானை பிடித்து விளையாடுகிறார்கள். பாம்பை பிடிக்காமல் இருந்தால் சரி. இந் நிகழ்வை பொங்கல் தினத்தன்று எடுக்கப்பட்டது. எடிட்டிங் என்னுடையது.
தமிழால் முடியும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். தமிழால் வெற்றியடைந்து இருக்கிறார்கள். வாழ்த்துவோம்.

4 Response to தமிழால் வெற்றியடைந்த டிஸ்கவரி சேனல்.

January 19, 2010 at 9:58 AM

அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது என் அக்கா பையன்கள் இதில் மூழ்கியிருப்பது கண்டு வியந்தேன்.

CN பார்த்து கொண்டிருந்தவங்கள் இப்போது டிஸ்கவரிதான்.. அருமையான சானல் அதுவம் எம் தாய்மொழியில் வாழ்க!

January 20, 2010 at 1:16 AM

very gud post
i am also fan of this programme


karurkirukkan.blogpsot.com

February 1, 2010 at 6:12 PM

I am a very big fan of tamil discovery channel

July 19, 2011 at 2:05 AM

அருமையான சேனல் இதுதான் என்று வீட்டில் உள்ள்ளவர்கள் அனைவரும் வியக்கும் படி மொழிபெயர்ப்பு சரியான அளவில் பரிமாற படுகிறது. நமது மொழி மீதான அக்கறை வெளிநாடுவாழ் தமிழர்களும் உள்ளது என்பது பெருமிதம் கொள்ளசெய்கிறது

--
ரமேஷ்

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger