இருவரும் ஒருவரே!‍ : விமுனா மூர்த்தி கவிதை


ஊழல் புரிவதில்
உத்தமர் நாங்கள்;
கருத்திலும் செயலிலும்
கை கோப்பது இயற்கை;

இலங்கை
இராஜ பக்சே
இலங்கைத் தமிழரை
ஒடுக்குதல் போல
தமிழகத் தமிழரை
ஒடுக்கிய என்னை
பிரித்துப் பார்ப்பது
பேதைமை, பேதைமை!

ஊழலில் கூட
உத்தமம் என்பது
கண்டு பிடித்தால்
திருப்பித் தருவது !

“ஹம்பந் தோட்டா”
ஊழல் மூலம்
அடைந்த பணத்தைத்
திருப்பிச் செலுத்திய
பெருமை மிகவர்
இராஜ பக்சே!

“டான்சி நிலத்தைத்”
திருப்பித் தந்து
ஊழலில் நானும்
புரட்சி செய்ததை
உலகே அறியும் ;

பத்திரிக்கை
ச் சுதந்திரம்
பறிப்பதில் கூட
ஒற்றுமை நிலவும்
எங்களுக் குள்ளே;

பரஸ்பரம் நாங்கள்
அழைப்பு விடுப்பதும்,
நன்றி கூறலும்
வியப்பே இல்லை !

(செய்தி ஆதாரம் : தி சண்டே இண்டியன் )

-விமுனா மூர்த்தி

தமிழருக்கே உரிய திருநாள்- தந்தை பெரியார்.

பொங்கல் என்பது- தமிழனுக்கு பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை.

இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை அவ்வாண்டு முதல் தடவையாக சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பது தான் பொருள் . இது தமிழனுக்கே (விவசாயிக்கே ) உரியதாகும்.

நமது மற்ற பண்டிக்கை என்பவை எல்லாம் ஆரிய மத சம்மந்தமான கதைகளை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும்.

இது விவசாயிக்கு உரிய பண்டிகை ஆனதினால்தான் – முதல்நாள் தானியம் சமைக்கும் பண்டிகையும், அடுத்தநாள் விவசாயிக்கு முக்கியமான- இன்றியமையாததுமான கால்நடை ஜீவன்களை பாராட்டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற நிகழ்ச்சியையும் ஒரு பண்டிகையாக ஏற்பாடு நிகழ்ச்சிகளுக்குப் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல் பண்டிகை என்று பெயர் வழங்கப்பட்டு வருகிறது.
- தந்தைப் பெரியார் ( விடுதலை 14.1.1972)

என் சவக் குழியைத் தேடாதே !

அந்த யுத்தக் களத்திலிருந்து
வாயில் நுரைத்தள்ள
மூச்சு இரைச்சலுடன்
தனியாக வரும் என் குதிரைக்கு
அம்மா !
தண்ணீர் கொடு !
அதன் முதுகைத் தடவிக் கொடு !

அது-
இன்னொரு வீரனுக்குப்
பயன்படட்டும்.

திரும்பி வந்த குதிரைமேல்
என்னைக் காணாமல்
கண்ணீர் சிந்தி
என் சவக் குழியைத் தேடாதே !


சுதந்தரம் அடைந்த இந்நாடு
உன் மைந்தனின்
இன்னொரு வடிவமன்றோ !

-ஜீர் கஸ்ட்டேலன்
க்ரோஷியன் கவிஞர்.

(சிந்தனையாளன் –பொங்கல் மலர் 2009 )

‘பார்ப்பனர்கள் போற்றாத உழவர் திருநாள்’




பொங்கல் விழா உழைப்போடு சம்பந்தப்பட்டது. உழவுத்தொழிலை முதன்மைப் படுத்தி கொண்டாடும் விழா சிறப்பாக சிற்றூர்களிலேயே கொண்டாடப்படுகிறது.மனித உழைப்புக்குத் துணையாக இருக்கும் உழவுத்தொழிலில் தொடர்புடைய விலங்குகளுக்கு மறியாதை கொடுக்கும் விழா. நிலவுடைமை சமூகம் முதற்கொண்டே எற்பட்ட உழைப்பு பிரிவினையில் நில உடைமயாளர்கள் ஆண்டாண்களாகவும் விவசாய கூலிகள் அடிமைகளாகவும் உழைப்பை அடிப்படையாகவே சாதியப்பிரிவுகள் தோன்றியதாக சமூக வரலாறு கூறுகிறது. வர்க்கமும் சாதியமும் பின்னிப்பினைந்து இருந்துவருகிறது. இச்சமூகத்தை ஆய்ந்த அறிஞர் அண்ணல் அம்பேத்கர் சொல்லுவார். உடலுழைப்பில் ஈடுபட்டோர் சூத்திரர்களாகவும் ஆதி சூத்திரர்களாகவும், மூளையுழப்பில் ஈடுபட்டோர் நில உடைமையாளர்களாகவும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். நிலம் மற்றும் உழைப்புக் கருவிகள் இவர்களிடமே இருந்தத்து. வெறும் உடலுழைப்பை மட்டுமே நம்பி வாழ்கையை ஓடும் தலித்மக்கள் மற்றும் பிற்பட்டோரும் இவ்விழாவை கொண்டாடுவோராக இருந்துள்ளனர். காளை மாடு விரட்டுதல், சல்லிக்கட்டு போன்ற வீரதீர விளையாட்டுகள் உடலுழைப்பை சார்ந்தே வந்துள்ளது. மூளையுழப்பில் ஈடுபட்டோர் உழைப்போடு சம்பந்தமே இல்லாமல் நிலத்தை கையில் வைத்துக்கொண்டு சமூகத்தில் உயர்நிலையில் இருந்துவந்துள்ளார்கள். இன்று கூட பல சிற்றூர்களில் பாப்பாரத்தெரு தனி தெருவே இவர்களுக்காக இருக்கிறது. பெரும்பாலும் உயர்கல்விபடித்து உயர்பதவிகளில் இருப்பதால் அவர்கள் வாழ்ந்த இடங்கள் காட்சி பொருளாகவே இன்றும் உள்ளது. மாநகரங்களிலும் வெளிநாடுகளிலும் அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.எனென்றால் அவர்களுக்கு அறிவு உள்ளது என்றோ மற்றவர்களுக்கு அறிவு இல்லை என்றோ ஆகாது. அவர்களின் வேலையே படிப்புடன் சம்பந்தப்பட்ட்து, மந்திரத்துடன் சம்பந்தப்பட்ட்து. இதில் வியர்வை கிடையாது. உடலுழைப்பு கிடையாது. இதனாலையே அவர்கள் பொங்கலை கொண்டாடுவதில்லை, மதிப்பது இல்லை.எனென்றால் இவ்விழா உழைப்போடு தொடர்புடையது. நிலம் சார்ந்தத்து. தொழில் சார்ந்த்து. பார்ப்பனர்கள் கொண்டாடும் விழா தீபாவளி. அரக்கர்களை (உழைப்பை கொண்டவர்கள், கருப்பு மனிதர்கள் ) கொன்றதை மகிழ்ந்து கொண்டாடும் விழா தீபாவளி.

உழவை மறந்தவர்களை நினைவில் வைத்துக் கொள்வோம்.
சாதியத்தை மறுக்க வேற்றுக்க உழவர்தினத்தை கொண்டாடுவோம்.
உழைப்பைப் போற்றும் பொங்கலைப் போற்றுவோம்.

ஆறு கோடி தமிழர்களும் வெட்கி தலை குனிந்து….

ஆறு இலட்சம் தமிழர்கள் வாழ்க்கையே கேள்விகுறி…

கிளிநொச்சி மீதான இராணுவத் தாக்குதலால் அம்மக்கள் ஊரை விடே இடம் பெயர்ந்திருக்கிறார்கள். முட்களில், புதர்களில் மொத்தமாக காடுகளில் வாழ்ந்து கொண்டிருகிறார்கள். சொந்த நாட்டிலேயே வான் தாக்குதல் நடக்கும் கொடுமை ஈழத்தில் மட்டுமே நடக்கிறது. காஸாவின் மீது நடக்கும் வன்தாக்குதல்களை எல்லா நாடுகளும் கண்டித்துவிட்டன. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மனித உரிமை மீறல் காசாவில் மட்டுமே தெரிகிறது. குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், வயதானோர் காடுகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் நிமிடத்திற்கு நிமிடம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பு போர் நிறுத்தமே. இல்லையென்றால் ஈழத்தமிழினமே பூண்டோடு அழிபடும் நிலைமை.

விடுதலை சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன் கூறுவது போல “ரா “ உளவு அமைப்பின் விமானம் முல்லைத்தீவு மற்றும் கடலோரங்களில் சென்று கூடிக்கொடுக்கும் பணியையே செய்து வருகிறது. நாம் கேட்பது உதவி அவர்கள் செய்வது ‘உபத்திரம் ??’.

சென்னை செய்தியாளர்களிடம் டாக்டர் இராமதாஸ் குறிப்பிட்டர்.

ஆறு கோடி தமிழர்களும் வெட்கி தலை குனிந்து நிற்கிறோம். தமிழர்களின் சுயமரியாதை, தன்மானம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசையும், மக்களையும் மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டது.


ஒரு மருத்துவரை உருவாக்க ரூ 1.72 கோடி செலவு…

இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனமான தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மருத்தும் படிப்பதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு கோடியே 72 இலட்சம் ரூபாய் செலவிடப்படுவதாக ஆய்வில் தெரியவந்திருகிறது. ஆனால் அரசின் செலவில் மருத்துவம் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவுக்கு சேவை செய்யாமல் அதிகம் ஊதியம் ஈட்டும் நோக்குடன் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவதாக அவ்வாய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் பற்றாக்குறை

இந்தியாவில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவதால் இந்தியாவில் மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருகிறது.

அமெரிக்காவில் 10 ஆயிரம் மக்களுக்கு 548 மருத்துவர்கள் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் பேருக்கு 249 மருத்துவர்கள்.

கனடாவில்10 ஆயிரம் பேருக்கு 209 மருத்துவர்கள்.

இங்கிலாந்தில் 10 ஆயிரம் பேருக்கு 166 மருத்துவர்கள்.

ஆனால் இந்தியாவில் 10 ஆயிரம் பேருக்கு ஒரே மருத்துவர்தான்

உள்ளார்.

(செய்தி ஆதாரம் 09.01.2009 தமிழோசை நாளிதழ்)

அரசதிகாரம்+ஊழல்+முதலாளிதுவ சார்பு = இடது கம்யூனிஸ்ட் தோல்வி


கம்யுனிஸ்டுகள் ?! மக்களுக்காக போராடுவார்கள். தங்கள் உயிரை தியாகம் செய்வார்கள் என்பது அந்தகாலம். இப்போது கதையே வேறு. போராடும் மக்களின் உயிரை எடுப்பது இந்த காலம்.. நான் சொல்லுவது மேற்கு வங்க மாநிலத்தை ஆட்சி செய்யும் கம்யுனிஸ்டுகளை சொல்லுகிறேன். மக்கள்தான் வரலாறு. வரலாற்றை படைப்பவர்களே மக்கள் தான். நந்தி கிராம் மக்கள் இதை செய்திருக்கிறார்கள்.
நிலமல்லா உழவர்களுக்காக போராட வேண்டியவர்கள், இருகிற விளை நிலங்களை முதலாளிகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்து இருகிறார்கள். பாராளுமன்ற போலி ஜனநாயகத்தை தோலுரிக்க வேண்டியவர்கள் அங்கேயே குடியிருக்கிறார்கள். நோக்கம் ஒன்றே ஒன்று. பாராளுமன்ற அரசதிகாரம். அதற்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

நந்திகிராம் மக்கள் விளை நிலங்களை இழந்தவர்கள், போராடினார்கள்.
தடியடி-
துப்பாக்கிச்சூடு-
சிறைக்கொடுமை-
மக்கள் அஞ்சவில்லை. தொடர்ந்து போராடுகிறார்கள்.

உலகமே செஞ்சட்டைக்காரர்களின் தொழிலாளர் விரோத செயலை கண்டு திகைத்தது. நந்தி கிராம் வன்முறையில் 2007ஆம் ஆண்டு மார்சு மாதத்தில் போலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெரோசாபீவி மகன் கொல்லப்பட்டார்.

பெரோசாபீவி யார் ?

நந்திகிராம் சிறப்பு பொருளாதாரத்தை எதிர்த்து நடந்த போரட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் பெரோசாபீவி மகன் கொல்லப்பட்டார். மகனை இழந்த அவர் அஞ்சாமல் தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு எதிராக போராடி வருகிறார். எதிர்கட்சியாக செயல்பட்டு வரும் திரிணாமூல் காங்கிரஸ் இவரை அரவணைத்து இடைத் தேர்தலில் போட்டியிடச் செய்தது. மாபெரும் வெற்றியை அம்மக்கள் அவருக்கு அளித்துள்ளார்கள்.

பெரோசாபீவி 93,002 வாக்குகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பரமானந்த பாரதி 53,473 வாக்குகள்

சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் நந்திகிராம் மக்கள் வெற்றி பெறச் செய்திருகிறார்கள். வெற்றியை நந்திகிராம் வன்முறையில் கொல்லப்பட்டவர்களுக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார். நந்திகிராம் மக்களின் நலனை பாதுகாக்கவும் , உரிமைகளை மீட்டுத் தரவும் தாம் பாடுபடப் போவதாக பெரோசாபிவீ கூறியுள்ளார்.

ஆளும் அதிகாரமும் எங்களுக்குத் தேவை - பிரெக்டின் கவிதை

எப்பொழுதெல்லாம் எங்கள்

மேலாடை கந்தலாகிறதோ,

அப்பொழுதெல்லாம் நீங்கள் 

ஒடி வந்து முழங்குகிறீர்கள்

 

‘ இது இனியும் நீடிக்கக் கூடாது

முடிகின்ற எல்லா வழிகளிலும் 

உதவி செய்வோம்.

நீங்கள் உற்சாகமாக

எஜமானரிடம் ஓடுகிறீர்கள். 

நாங்கள் காத்துக்

கொண்டிருந்தோம்.

நீங்கள் வெற்றிகரமாக

எங்களுக்கு பெற்று வந்ததைக்

காட்டுகிறீர்கள்,

ஒரு துண்டுத் துணியை !

 

நல்லது ; துண்டுத்

துணி சரிதான்.

ஆனால்,

முழு ஆடை எங்கே ?

 

எப்பொழுதெல்லாம்

பசித்தீயால்

கருகிக்  கரைகிறோமோ

ஓடி வந்து முழங்குகிறீர்கள்.

 

‘இது இனியும் நீடிக்கக் கூடாது

முடிகின்ற எல்லா வழிகளிலும் 

உதவி செய்வோம் 

உற்சாகம் நிரம்பியவர்களாய்

நீங்கள்

எஜமானரிடம் ஓடுகிறீர்கள் ;

நாங்களோ

பசித்தீயில் கருகியபடி

காத்துக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள்

திரும்பி வந்து வெற்றிகரமாக

எங்களுக்குப் பெற்று

வந்ததைக் காட்டுகிறீர்கள்.

நாலு பருக்கைகள்.

 

நல்லது ; பருக்கைகள் சரிதான்.

ஆனால் முழுச்சாப்பாடுஎங்கே?

 

எங்கள் தேவை

துண்டுத் துணி அல்ல;

முழு ஆடை.

பருக்கைகள்;

முழுச்சாப்பாடு.

ஒரு வேலை மட்டுமல்ல :

முழுத் தொழிற்சாலையும்

எங்களுக்குத் தேவை.

நிலக்கரி, தாதுப் பொருள்,

உலோகக் கனி

அத்தனையும்

எங்களுக்குத் தேவை.

எல்லாவற்றையும் விடமேலாக

நாட்டினை

ஆளும் அதிகாரமும்

எங்களுக்குத் தேவை.

நல்லது

இவ்வளவும்

எங்களுக்குத் தேவை.

ஆனால்

நீங்கள் கொடுப்பது என்ன?

 

-பிரெக்ட்

போலியோ சொட்டு மருந்து -வதந்தி பரப்பும் ஊடகங்களின் மீது நடவடிக்கை- உடனடித் தேவை.

கடந்த ஆண்டு திசம்பர் 21ம் தேதி தமிழகம் முழுவதும் இளம்பிள்ளை வாதம் ஒழிப்பு சொட்டுமருந்து 5வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போடப்பட்டது. இதில் சில குழந்தைகள் இறந்து விட்டதாக  ஒரு தொலைக்காட்சி திரும்ப திரும்ப செய்தியை ஒளிபரப்பியது.

செய்தியின் தாகம்

பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை கள ஊழியர்களுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் பெறும் பிண்ணடைவு ஏற்படது.

சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினர் மருத்துவமணையை முற்றுகை இட்டனர். கிராமங்களில் மாட்டு வண்டி, டிராக்டர் வண்டிகளில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சுகாதார நிலையங்களுக்கு சென்றனர்.

14 ஆண்டுகாலமாக நடைபெறும் இத்திட்டத்தில் தவறான செய்தியால் சுமார் 4.5 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளவில்லை. தமிழகத்தில் கடந்த நான்காண்டுகாலமாக ஒரு குழந்தைக் கூட இந் நோயினால் பாதிக்கப்படவில்லை. நோயொழிகும் நிலையில் தமிழகம் உள்ளது, ஆனால் பிகார் உ.பி போன்ற சில வட மாநிலங்களில் இந்நோய் காணப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே இச் சொட்டுமருந்து போடும் நிலை தொடருகிறது.

குறிப்பாக இச்சொட்டுமருந்து போடுவதால் எந்த பின்விளைவுகளும் ஏற்படுவதில்லை. அரசுதரப்பு மருத்துவமனணைகளில் தான் தொடர் குளிர் நிலையில் (Cold Chain Maintain) சரியாக முறையாக கடைப் பிடிக்கப்படுகிறது.

இளம்பிள்ளை வாதம் ஒழிப்பு திட்டத்தின் பயனாக  இளம்பிள்ளை வாத உடல் ஊனமுள்ள குழந்தைகளை இப்போதெல்லாம் காணமுடியாது.

அப்பட்டமான மட்டரகமான அரசியல் நோக்கத்தின் வெளிப்பாடே இது. ஓட்டு பொறுக்கும் அரசியல், மலிவான நோக்கமற்ற கொள்கை, நாற்காலி கனவு மெய்ப்பட என்ன வேண்டுமானாலும் செய்யலாம், செய்தியாகலாம் என்பது தமிழகத்தின் வருங்கால சந்ததியை இருளில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

இதனை கருத்தில் கொண்டு நடுவண் நலவாழ்வு அமைச்சர் மரு. அன்புமணி இராமதாசு அவர்கள் சென்னையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் வதந்தி பரப்பும் ஊடகங்களின் மீது நடவடிக்கையை வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை, சமூக மேம்பாடு கருத்தில் கொண்டே செயல்பட வேண்டும்.

அப்பட்டமான மட்டரகமான செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் மீது கடும் நடவடிக்கையை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

அய்யாவை நம்பினோம்






அதிகம் படிக்காத
அய்யாவை
நம்பினோம்
நமக்குப்
பல்கலைக் கழகங்கள்
கிடைத்தன !

பல்கலைக் கழகங்களில்
படித்த
இவர்களை
நம்பினோம்
நமது
அறிச்சுவடிகளும்
தொலைந்து போயின !

-கவிஞர் அறிவுமதி

‘டெஸ்மா’ ‘பொடா’வின் தேச நாயகி

புரட்சியின் நூலகம் போயஸ் தோட்டமா ?
புவியில் முளைத்த ஒரு புல்லும் ஏற்குமா ?
வறட்சியில் குடிக்கக் கூவம் நீரா ?
வறுமையில் இரப்பதைச் சரியென் பீரா ?

‘டெஸ்மா’ ‘பொடா’வின் தேச நாயகி
டெல்லிக் கனவில் உறங்கும் பூதகி
பஸ்மா சூரனின் இன்றைய மாதிரி
பாதம் சுமக்கவா புதிய கூட்டணி ?

அரசு ஊழியர் உரிமை பறித்ததும்
அடி பணிந்தோர் முதுகில் உதைத்ததும்
முரசு அறைந்தது சொல்லவும் வேண்டுமா ?
முணுமுணுப்பொலியே உம்காதைத் தீண்டுமா ?

தொழிலாளர் நலனைத் துவட்டி எடுத்ததும்
தோழமை உணர்வை உண்டியல் என்றதும்
எழுத்தாய் ஈரமாய் இன்னமும் உள்ளதே!
ஏனிந்த மாற்றம், புரியவில்லையே ?

சேதுக் கால்வாய் தடைக்கல் மீது
சினத்தைப் பொழிந்ததில் அர்த்தம் ஏது?
தீதும் நன்றும் எடுத்து உரைப்பினும்
திரும்பிப் பார்ப்பரோ மக்களிப்போது ?

சிந்தனை புதிதாய்த் துளிர்த்திடல் வேண்டும்
செய் தக்க எண்ணுக தோழர்களே !
நிந்தனை புரியும் நிலையிலும் கூட
நீர்த்திடல் வேண்டாம் மார்க்சின் மகத்துவம் !

- விமுனா மூர்த்தி

(நன்றி :எதிரொலி நாளிதழ் - 08.01.2009 அன்று வெளியான கவிதை)

விமுனா மூர்த்தி தொழிலில் மருத்துவர். பகுத்தறிவு, பொதுவுடைமை,சமூகநீதி, தமிழ்த்தேசியம் ஆகிய தளங்களில் இவர் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்கா. அப்பணியில் அவரின் கவிதை பதிவின் மாதிரியே இப்பா.

அடுத்த வீட்டில் இழவு விழுந்தால் நமக்கென்ன?

பக்கத்து வீட்டில்
நடைபெறும் அநீதியை
கேட்காதே.
அது
அவர்கள் பிரச்சனை.
எட்டுலகத்திற்கு அப்பால் நடக்கும்
அநீதியை
மேடை போட்டு முழங்கு.
மனித உரிமை மீறல் எனச்சொல்.

பக்கத்து வீட்டில்
நடக்கும் அநீதியை கேட்டால்
பயங்கரவாதம் எனச்சொல்.

கேட்கும் கூக்குரலை
கேட்காதது போல நட..
அதை
கேட்டால்…
பார்த்தால்…
கண்ணீர்விட்டால்…
பிரிவினைவாதி முத்திரை குத்து

இருக்கவே இருக்கிறது
வார்த்தைகள்

பயங்கரவாதி
தீவிரவாதி

அடுத்த வீட்டில் இழவு விழுந்தால் நமக்கென்ன?

மனித உரிமைப் பற்றி பேச
அத்துமீறல் எழுத எவ்வளவோ இருக்கிறது ?

காகிதப் புலிகளுக்கு கொண்டாட்டம் ?

கிளிநொச்சி விழுந்ததில் சிங்கள பேரினவாத அரசு மகிழ்ந்ததோ இல்லையோ,இங்குள்ள சில மரத் தமிழனுக்கு மகிழ்ச்சியே. தினமும் மலச்செய்தியை வெளியிடும் நாளிதழும் இச்செய்தியில் மிகிழ்ந்து போய் உள்ளது. கொரில்லா போர் உத்தியில் பின்வாங்கல் ஒரு செயல் தந்திரமே!. பாவலர் காசி ஆனந்தன் சொல்வது போல சொல்லுவோம்.
ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்.

“அன்புள்ள” புஷ் அவர்களுக்கு,

ஈராக் செருப்பு வீச்சு நிகழ்வுக்குப் உங்களுக்கு கடிதமொன்று எழுத நினைத்து காலம் கழித்து எழுதுகிறேன். ஊடகங்கள் இப்போதெல்லாம் உடனுக்குடன் விரும்பியோ விரும்பாமலோ அனைத்து காட்சிகளையும் காட்டிவிடுகின்றன. தொலைக்காட்சியில் உங்கள் மீது வீசப்பட்ட செருப்புவீச்சு உலகமெங்கும் பேரதிர்வை உண்டாகியது. [சதாம் தூக்கிலிடப்பட காட்சியும் இதே அதிர்வைத் தான் உண்டாக்கியது]. ஆனால் புஷ் அவர்களே உங்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த செருப்பு வீச்சை நியாயப்படுத்தி பேசவரவில்லை. செருப்பு வீச்சு செய்த செய்தியாசிரியர் கதாநாயக முத்திரை பெற்றுவிட்டார். அளப்பரிய துணிவுள்ள நாயகனாக சித்தரிகப்படுகிறார். பல கோடிகள் பரிசை அச்செருப்பு பெற்றுள்ளது. 20 வயதுக்குட்பட பல பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள முன் வந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இது எதை வெளிப்படுத்துகிறது. புஷ் மீதான தாக்குதலாக உலகம் இதை பார்க்கவில்லை. அமெரிக்க வல்லரசின் மீதான தாக்குதலாக பாவித்தே இதை காண்கிண்றனர். உலகத்தில் எங்கெல்லாம் அநீதகள் [!?] நிகழ்கிறதோ அங்கெல்லாம் உங்கள் அமெரிக்க போலிஸ்காரன் தான் நுழைந்து நீதியை நிலை நாட்ட வேண்டும். உங்கள் நாட்டாமை தனத்தின் விளைவுகளை பல நாடுகளில் பார்த்துள்ளோம். இப்போதைக்கு ஈராக்கில்,உங்களிடம் இல்லாத உலகை அச்சுறுத்தும் பல நவீன ஆயுதங்களை கைப்பற்றி காத்துள்ளீர்.

ஒன்று தெரியுமா புஷ் அவர்களே அங்கு வீசப்பட்ட குண்டுகளின் செலவில் அந்த பாலை பூமியையே தேனாறு ஓடும் சொர்கமாக்கியிருக்கலாம். உங்கள் நாட்டில் நிகழ்ந்துள்ள பொருளாதாரச்சரிவை சரி செய்திருக்கலாம். அமெரிக்காவில் உணவுவிலை உயர்ந்தால் இந்தியர்கள் அதிக உணவு [?!] சாப்பிடுவதால் வந்த வினை என்று கூறிய மாபெரும் பொருளாதார வல்லுநர் அமெரிக்க வல்லரசின் அதிபர்தானே நீங்கள். ‘காத்ரினா புயல் ‘ தாக்கிய போது வல்லரசு அமெரிக்கா பட்ட பாட்டை பார்த்தோம். உங்கள் மூத்தோர் சீனியர் புஷ், கிளின்டன், ரீகன் போன்ரோர் ஏகாதிபத்தின் நாயகர்களாக காட்டிய விதத்தை மூன்றாம் உலக நாடுகள், வளரும் நாடுகள் மறக்குமா ?. வன்முறையை உலகமெங்கும் வியாபாரம் செய்யும் தொழிலைத் தானே அமெரிக்க வல்லரசு செய்துவருகிறது என்பதை இக்கடிதம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

பராக் ஒபாமா அடுத்த அதிபர் ஆகிறார். ஊடகங்கள் புதிய ஓளியாக ஒபாமா திகழ்வார் என்று செய்தியை பரவலாக சொல்லப்பட்டுகிறது. உங்களுக்கும் ஒபாமாவுக்கும் உள்ள வேறுபாடு ஒன்று மட்டுமே நீங்கள் சிவப்பு அவர் கருப்ப மட்டுமே. ஆனால் உண்மைமுகம் அமெரிக்க வல்லாதிக்க குணத்தின் முகமுடியே நீங்கள். தண்ணீர் பஞ்சம் உள்ள குக்கிராமத்திலும் உங்கள் கோக்கும் பெப்சியும் தங்கு தடையின்றி கிடைப்பதே ஏகாதிபத்தியத்தின் புனித வேலையலல்லவா ?

மூன்றாம் உலக நாடுகள் உங்களின் கையாலாக இருக்கும் வரையில் அந்நாட்டின் இறையான்மையை போற்றுவீர். வல்லாதிக்க சுரண்டலை எதிர்த்தால் … அதை நசுக்க கியுபா மாதிரி மற்றும் ஈராக் மாதிரியான புனித போரை துவங்குவீர் என்பதை அறிவேன்.

எங்கள் ஊர்களில் பெரிய போக்கிலிகளைஎதிர்க்க மண் தூற்றுவார்கள். அது போலத்தான் செருப்பு வீச்சு நிகழ்வும்.
Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger