அழுது கொண்டிருந்த
என் அம்மாவைப் பார்த்து விட்டுக் கேட்டான்.
ஆயா ஏன் அழுவுராங்கா?
தாத்தா அடிச்சிட்டாராம்.
ஏன் அடிச்சார்
ஆம்பிளைத்தனம் என்றேன்
அப்படின்னா
என்னால் பதில் சொல்லமுடியவில்லை.
சிறிது நேரத்தில்
அழுத மகளைப் பார்த்து கத்தினாள் மனைவி.
பொட்ட புள்ளைக்கு என்ன அவசரம்
தம்பி சாப்பிடட்டும்..
1 Response to ஆம்பிளைத்தனம்- கவிதை
very nice
sempakam
Post a Comment