கடந்த பதிவில் ஒளீறும் எழுத்துருக்களைப் பற்றிச் சொல்லியிருந்தேன்.
இன்று படங்களை உள்வாங்கிய எழுத்துருக்களை உருவாக்குவதுப் பற்றிப் பார்ப்போம்.
பார்க்க பிரமிப்பு ஏற்படுத்தும் இப்படைப்பை தோற்றுவிப்பது மிக எளிது. கொஞ்சம் உள்வாங்கினால் என்னை விட சிறப்பாகச் செய்வீர்கள்.
சரி பயிற்சிக்கு செல்வோம்.
படம்.1.
போட்டோசாப்பில் புதிய 800க்கு 600 பிக்சல் கொண்ட கோப்பை திறந்து கொள்ளுங்கள்.
நான் நன்றி என்ற எழுத்தில் ந மட்டும் பெரிய எழுத்தாக்கியுள்ளேன்.
திறந்து கொண்ட கோப்பில் டூல் பாரில் T என்ற கருவியையோ அல்லது கீ போர்டில் டீயை அழுத்தினாலோ எழுத்து பதிவு செய்ய கோப்பு தயாராகிவிடும்.
படம்.2.
குழந்தை படத்தை உள்ளே பொருத்தப் போகிறேன்.
டெக்ஸ்ட் லேயரில் இருக்குமாரு பார்த்துக் கொண்டு பேஸ்ட் செய்யுங்கள்.
ந என்ற எழுத்தின் மீது இப்போது படம் உள்ளது.
படம்.3.
இந்த படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ள இடத்தில், அதாவது டெக்ஸ்டு லேயருக்கு மேல் உள்ள நாம் படம் ஒட்டியுள்ள இரண்டுக்கும் இடையில் அல்டர் (Alt) கீயை அழுத்திக் கொண்டே உங்கள் கர்சரை அங்கு கொண்டு செல்லுங்கள் . கருப்பான வண்ணத்தில் வட்ட தோற்றம் வரும் போது கிளிக் செய்யுங்கள். இது தான் கவனமாக செய்ய வேண்டிய நிலை.
கிளிக்கானவுடன் படம் எழுத்தின் உள்ளே சென்றுவிடும். 95 % பணியை நாம் முடித்துவிட்டோம்.
படம் .4.
லேயர் விண்டோவின் கீழே படத்தில் காடிய f காட்டிய இடத்தை கிளிக் செய்யவும்.
நாம் 3டி எபெக்ட் கொடுக்க டெக்ஸ்ட் லேயர் தேர்வாகியுருக்க வேண்டும். கவனம்.
லேயர் ஸ்டெயில் விண்டோ தோன்றியவுடன் பெவல் ,எம்போஸ் தேர்வு செய்ய கட்டத்தில் டிக் செய்யவும். இப்போது எழுத்து மாற ஆரம்பிக்கும்.
எப்படி பெவல் எம்போஸ் தோற்றம் வரும் என்பதை சிறிய சதுரம் அய்கான் மாற்ற வடிவத்தை காண்பிக்கும்.
பிடிக்கும் வரை மாற்றம் செய்து பாருங்கள்.
முடிந்த்து. சேமித்துக் கொள்ளுங்கள்.
போட்டோசாப்பில் இப்படித்தான் என்று ஏதுமில்லை. அப்படி யாராவது சொன்னால் புருடா விடுகிறார்கள் என்று பொருள்.
மாதிரிப் படங்களை செய்து காட்டியுள்ளேன். பயிற்சியில் இதைவிட நீங்கள் சிறப்பாக செய்வீர்கள்.
தோழமையுடன்...
விடைபெறுகிறேன்.
1 Response to விருப்பமான படங்களுடன் எழுத்துருக்கள்- போட்டோசாப்.
மிகவும் பயனுள்ள பதிவு. மிகவும் நன்றி.
Post a Comment