எளிதான சுவர் விளம்பரம் – போட்டோசாப்.

  மாதிரி படங்கள் இம்முறையில் உண்டாக்கப்பட்டவையே. சென்னை அண்ணா சாலையில் உள்ள எல் ஐ சி கட்டிட்த்தில் படங்களை ஒட்டி வடிவமைத்துள்ளேன்.
நான் பார்த்த உயரமான கட்டிடம் இதுதான்?!.
அதில் ஏறி விளம்பரம் செய்ய முடியுமா ?
முடியும் என்கிறது போட்டோசாப்.
இவ்வசதியை சி எஸ் 2 மற்றும் அதற்கு மேல் உள்ள பதிப்பில் தான் இவ்வசதியை கொடுக்கிறார்கள். போட்டோசாப் 7இல் போய் யாரும் தேட வேண்டாம்.


படம்.1. கற்களால் கொண்ட சுவர் கொண்ட படத்தை திறந்துள்ளேன்.
முதலில் அதற்கு ஒரு லேயர் திறந்துள்ளேன்
 (Shift +Ctrl+N)
பிறகு பில்டரில் வானிசிங் பாய்ண்ட் கருவியை தேர்வு செய்ய படத்தில் காட்டியுள்ளபடி விண்டோ தோன்றும்.
அதில் மெஸ் வடிவத்தில் உள்ள கிரியேர் பிளான் கருவியை தேர்வு செய்து எங்கு படத்தை ஒட்டப்போகிறோமோ அங்கு ஒரு சதூரத்தை/செவ்வக வடிவத்தை உண்டாக்க வேண்டும்.
படம்.2.
சேகுவேரா படத்தை தேற்வு செய்து ஒட்டியுள்ளேன். ( வானிசின்க் கருவியை தேர்வு செய்யும் முன் நாம் தேவையான படத்தை காப்பி செய்து இருக்க வேண்டும்).
படம்.3.
வானிசிஞ் விண்டோவில் பிரஷ் கருவிக்கு கீழே உள்ள எடிட் பிளான் கருவியை தேர்வு செய்து டிராக் செய்து கட்ட வடிவத்தில் போடுங்கள்.
கட்டத்தை விட  படம் பெரிதாக இருத்தால் மூலையில் அழுத்தி வடிவத்துக்கு இழுத்துவாருங்கள்.
ஓகே கொடுக்க வேண்டியதுதான் பாக்கி.

படம்.4.
லேயர் விண்டோவில் ஓவர் லே தேர்வு செய்ய பிண்ணனி வடிவில் படம் தோன்றும். ஒபாசிட்டி குறைத்து தேவையான விளைவு தோன்றியதும்.
சேமிக்க வேண்டியத்தான்.

11 Response to எளிதான சுவர் விளம்பரம் – போட்டோசாப்.

April 3, 2010 at 7:53 PM

நன்றி சிறந்த தகவல்

April 3, 2010 at 8:13 PM

@ஆகில் αακιλ

கருத்துக்கு நன்றி ஆகில். தொடர்ந்து பதிவை பாருங்கள்.

April 3, 2010 at 11:36 PM

நல்ல பதிவு தோழமையுடன் mullaimukaam.blogspot.com

April 4, 2010 at 1:52 AM

thanks a lot

April 4, 2010 at 3:19 AM

மிகவும் அருமை சார். போட்டோஷாப்பில் தெரியாத பல விஷயங்கள் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றீ சார். தொடருங்கள் உங்கள் பங்களிப்பை.

அப்ரின்

April 4, 2010 at 3:33 AM

@SUNDER
கருத்துரைத்த தோழர்கள்,
சுந்தர், யோகா, அப்ரின் ஆகியோருக்கு என் நன்றிகள்.

April 4, 2010 at 7:39 AM

எப்படி சேகுவரோ படத்தை தேர்வு செய்து ஒட்டினீர்கள் என்று விளக்கமாக சொல்லமுடியுமா? இந்த படிமுறையை செய்ய முடியவில்லை நிறைய முயற்சி செய்து களைத்துவிட்டேன்.வாநிசின்க் கருவியினுள் சேகுவாரோ படத்தை என்னால் அசைக்க முடியவில்லை.

April 4, 2010 at 8:42 AM

@eelawin

தோழருக்கு,
இதுப்பற்றிய வீடியோ உருவாக்கி வருகிறேன். விரைவில் இணைப்பேன். பலரின் சந்தேகங்களுக்கு இவ்வீடியோ உதவி செய்யும் என்று நம்புகிறேன்.

Anonymous
April 12, 2010 at 11:17 AM

@தோழன்

தோழரே உங்கள் வீடியோ விளக்கத்திற்க்கு நன்றி ஆனாலும் என்னால் இன்னும் மேலே குறிப்பிட்ட படிமுறையை செய்யமுடியவில்லை முயற்சி செய்து களைத்துவிட்டேன்.நீங்கள் வநிஷிங் கருவியினுள் எப்படி சேகுவரோ படத்தை ஒட்டினீர்கள் என்பதை விளக்குங்கள் தெரிந்துகொள்லாவிட்டல் தலை வெடிக்கும் போல உள்ளது .நான் முதலே காப்பி செய்தும் என்னால் ஒட்ட முடியவில்லை.நீங்கள் சேகுவரோ படத்தை போடோஷோப் உள்ளே வைத்து காப்பி செய்தீர்களா அல்லது வெளியே வைத்து காப்பி செய்தீர்களா? எப்படி அந்த படத்தை காப்பி செய்வது என்பதை கூறுங்கள் தயவுசெய்து

Anonymous
April 12, 2010 at 11:18 AM

தோழரே உங்கள் வீடியோ விளக்கத்திற்க்கு நன்றி ஆனாலும் என்னால் இன்னும் மேலே குறிப்பிட்ட படிமுறையை செய்யமுடியவில்லை முயற்சி செய்து களைத்துவிட்டேன்.நீங்கள் வநிஷிங் கருவியினுள் எப்படி சேகுவரோ படத்தை ஒட்டினீர்கள் என்பதை விளக்குங்கள் தெரிந்துகொள்லாவிட்டல் தலை வெடிக்கும் போல உள்ளது .நான் முதலே காப்பி செய்தும் என்னால் ஒட்ட முடியவில்லை.நீங்கள் சேகுவரோ படத்தை போடோஷோப் உள்ளே வைத்து காப்பி செய்தீர்களா அல்லது வெளியே வைத்து காப்பி செய்தீர்களா? எப்படி அந்த படத்தை காப்பி செய்வது என்பதை கூறுங்கள் தயவுசெய்து

April 12, 2010 at 6:06 PM

@Anonymous

தோழருக்கு,

போட்டோசாப்பில் சென்றவுடன் முதலில் இரண்டு படத்தையும் திறந்து கொள்ளுங்கள். ஒட்டும் படம் ஒன்று, மற்றொன்று ஒட்டப்பட வேண்டிய படம்.

எந்த படத்தை ஒட்ட வேண்டுமோ அப்படத்தை முதலில் போட்டோசாபிலேயே காப்பி செய்யுங்கள். பிறகு நாம் எந்தப்படத்தில் ஒட்டப்போகிறோமோ அப்படத்தின் புதிய லேயரில் வழியாக வானிசிங் கருவியினுள் சென்று ஒட்டுங்கள். அதாவது Ctrl + V (Paste) பேஸ்டு செய்யுங்கள். முடிந்தது. முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

இதை உங்கள் பதிவில் இணைக்க...