ஸ்டாம்ப் அளவில் படங்களை அச்செடுக்க... போட்டோசாப்

டிஜிட்டல் யுகமாகிவிட்டது. சாதாரன செல்பேசியில் கூட கேமெரா வசதி வந்துவிட்டது.
நாமெடுக்கும் படங்களை ஒரு கோப்பில் போட்டுவைப்போம். அத்துனை படங்களையும் அச்சிடுவது செலவீனம். அதற்காக சிறிய படவடிவில் எல்லா படங்களையும் ஒரே சீட்டில் அச்செடுக்கலாம்.

இதை போட்டோசாப் ஒரே சொடுக்கில் அதுவே செய்து தந்துவிடும். தொழில்முறையிலான படக்கலைஞர்கள் இவ்வசதியை பயன்படுத்துவர்.
செய்முறையினை பார்ப்போம்.
படம்.1.
பைலை (File ) சொடுக்க நீளும் விண்டோவில் ஆட்டோமெட்  கிளிக் செய்யுங்கள்.
படம்.2.
அதில் காண்டாக்ட் சீட் தேர்வு செய்யவும்.
படம்.3.
அதில் எந்த கோப்பை  அச்சிடப்போகிறோம்/
அச்சிடப்போகும் அளவு.
எத்துனை ரோ, காலம் (Row, Column )
படங்களுக்கு நாம் பெயர் தந்து இருப்போம் அல்லது கேமெராவே வரிசை எண் தந்து இருக்கும். அப்பெயர்கள் எந்த வடிவ எழுத்து, அளவு என்பதைக் கூட நாம் தேர்வு செய்யலாம்.
முடிந்தவுடன் ஓகே கொடுத்தவுடன் போட்டோசாப் மென்பொருள் அளவுக்கேற்றார் போல படங்களை அடுக்கும். அந்த சீட்டில் இடம் போதவில்லையானல் அதுவே வேறு சீட்டை தேர்வு செய்யும்.
நமது பணி சேமிப்பதுதான்.
மாதிரி படத்தை நான் காட்டியுள்ளேன்.

2 Response to ஸ்டாம்ப் அளவில் படங்களை அச்செடுக்க... போட்டோசாப்

Anonymous
March 18, 2010 at 9:49 AM

Please consider starting a new blog and moving tech posts to that blog.

June 9, 2010 at 10:16 PM

Your work is excellent. Consider to Write a Photoshop Technical Information Book (in Tamil).

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger