ஸ்லைடு ஷோ வை இணைப்பது எப்படி?

மேலே உள்ள ஸ்லைடு ஷோ போல இணைப்பது எளிது.

இவ்வசதியை http://www.slide.com/ இணைய தளம் செய்து கொடுக்கிறது. உங்களுக்கு விருப்பமான படங்களை பதிவேற்றுங்கள்.

வண்ணம், வடிவமைப்பு, டிஜிட்டல் சுழர்ச்சி முதலியவற்றை சேர்ப்பித்து கோடை கேளுங்கள். மின் அஞ்சல் தகவல் கேட்கும். கொடுத்தவுடனையே எச்டிஎம்மெல் ( HTML ) கோடை கொடுக்கும்.

உங்கள் இணைய பக்கத்தில் பதிவு செய்து சேமியுங்கள்.

உங்கள் விருப்பமானவர்களுக்கும் இணைய முகவரியை அணுப்பி வாழ்த்தும் தெரிவிக்கலாம்.

உங்கள் பிளாகுக்கு புதுச் சட்டையை மாட்டுங்கள்.

நீங்கள் பார்க்கும் என்னுடைய பதிவின் சட்டையை புதியாக 2 நாட்களுக்கு முன்தான் மாட்டினேன்.

புதியவர்களுக்காக இப்பதிவு. இது பழைய கதையல்லாவா என்பவர்களுக்கு அல்ல இது.

சரி.

சட்டையை வாங்கும் போது என்ன செய்வோம். நல்ல கடையை பார்ப்போம். பிடித்த வண்ணம், டிசைன், அதுவும் ஆயத்த ஆடையாக இருந்தால் அளவு முக்கியம்.

இப்படித்தான் நாம் பிளாகுக்கான சட்டையை மாட்டப்போகிறோம்.

கீழே முகவரிகளுக்கு செல்லுங்கள். சட்டை இலவசமாக கிடைக்கும்.

http://mashable.com/2008/05/17/70-plus-new-and-beautiful-blogger-templates/

http://freetemplates.blogspot.com/

http://dzineblog.com/2009/06/fresh-and-beautifull-blogger-templates.html

டெமோவும் தருவார்கள் .சொடுக்கி பாருங்கள். டிசைன் பிடித்து இருக்கிறதா? நல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

சிலர் நோட் பேடில் கோப்புகளை தருவார்கள்.

சிலர் சுருக்கி சிப் கோப்புகளாக தருவார்கள். அதை விரிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

அப்போது கிடைக்கும் போல்டரில்

XXXXXX.xml(xml Document) என்ற பெயரில் கோப்பை தருவார்கள்.

இக் கோப்பைதான் நாம் சட்டையாக மற்றப் போகிறோம். இதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

ஒன்றல்ல 3 அல்லது 4 ஆக இருக்கட்டும். பொருத்திய பிறகு பிடிக்க வில்லை என்றால் மாற்றிக்கொள்ளலாம்.

பணிக்கு செல்வோம்.

பிளாகின் உள்ளே செல்லுங்கள்.

1.முதலில் லேவுட் (Layout)

2.பிறகு Edit HTML க்குச் செல்லவும்.

நாம் பிளாகில் போட்டு வைத்துள்ள கேட்ஜஸ்கள் எல்லாம் மாற்றும்போது அம்போதான். பயப்பட வேண்டாம். ஒரு வேர்ட் பைலில் அதனை உரிய தலைப்பிட்டு சேமிக்கவும்.

நாம் புதிய சட்டையை மாட்டும் போது பழைய டிசைன் எல்லாம் போய்விடும். அதற்குதான் பாதுகாப்புக்கு பிளாகில் ஒரு நல்வசதியை தந்துள்ளார்கள்.

Download full Template இதை சொடுக்கி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

பிறகு....

இதற்கு கீழே பாருங்கள்.

Chose File என்ற இடத்தில் நீங்கள் பதிவிறக்கம் செய்துள்ள xxxxxxx. Xml கோப்பை பதிவேற்றுங்கள் (Uplod) என்ற இடத்தில் சொடுக்கி பதி வேற்றுங்கள்.

இப்போது சேமியுங்கள்.

உங்கள் பதிவு அமைப்புகள் காணாமல் போகும் என்ற எச்சரிக்கைச் செய்திவரும். பயம் வேண்டாம்.

நாம் தான் முன் கூட்டியே அதை சேமித்துள்ளோமே (மறக்க வேண்டாம் எல்லா கெட்ஜுகளையும் சேமியுங்கள்.)

பிறகு view blog சொடுக்கி பாருங்கள். பிடித்திருந்தால் நல்லது இல்லை என்றால் மீண்டும் புதிய டெம்ப் லெட் கோப்பை பதிவேற்றி பாருங்கள். இந்த புத்தாண்டுக்கு உங்கள் பதிவு புது சட்டை மாட்டட்டும்.

.............. பின்னூட்டம் போடலாமே

மாலை சூரிய அமர்வில் கேமராவுடன் ஒரு நாள்.

டிஜிட்டல் கேமிரா வாங்கிய புதிது. என் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்களுடன் பக்கத்தில் இருந்த ஏரிக்கரையில் செல்லவிட்டு படக்காட்சிக்களை பதிவு செய்தேன். பிறகு கணினியில் கொஞ்சம் வண்ணம் ஏற்றிய படங்கள் தான் இது. இப்படங்கள் எடுத்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது.ஊரைவிட்டு ஓடியவன்.... கவிதை


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்

காலனிப் பெண்ணுடன் ஓடியவன்

திரும்பி வருகிறேன்.

ஒத்தையடிப்பாதைகள் சிமெண்டு சாலைக்கு

மாறி இருக்கிறது.

மாடி கட்டிடமாக உயர்ந்துள்ளது

நான் படித்த பஞ்சாயத்துப் பள்ளி..

இறவைக் கிணறு மேல் நிலைத் தொட்டியாக

மாறியுள்ளது.

கட்சிக் கொடிகளைவிட

சாதிக் கொடிகள் உயரத்தில்..

நான் பார்த்த செங்கொடிகள்

கருப்புக்கொடிகள் எங்கே?

வெறுங்காலுடன் ஒடியவன்

ஷூவுடன் நடந்துவருகிறேன்.

ஊரில் இருந்த பெரியார் சிலை அதே இடத்தில்

உடைபட்டு கிடைக்கிறது.

தலையில் காகத்தின் எச்சங்கள்...

காலனிக்கு வெளியே

அம்பேத்கர் கம்பிவேளிக்குள் சிறைப்பட்டுள்ளார்...

எல்லாமே மாறி இருக்கிறது.

இடுகாட்டில் நடப்பது போல

நடந்துபோகிறேன்....

.

எல்லாமே எளிதாக இருக்கிறது... ஆனால்


எப்படியோ... வாழ்வது

மிக எளிதாக இருக்கிறது.

மற்றவர்களை விரும்புவதும்

மிக எளிதே..

வாய்விட்டு சிரிப்பதும் மிக மிக

எளிதே...

வெல்வதும் எளிதே...

ஆனால்

எளிமையாக வாழ்வது

எளிதாகவே இல்லை.

புதியவர்களுக்காக - ஜீமெயில் வடிவமைப்பை மாற்ற

ஜீமெயிலை திறந்து செட்டிங்குக்குள் செல்லுங்கள்- படம் :1

கடைசியாக உள்ள தீமை சொடுக்கி உங்களுக்குப்பிடித்த வடிவமைப்பை சொடுக்குங்கள். படம் :2

அவ்வளுவுதான்... மாறிவிட்டது.


எலும்புகளை மெலிவாக்கும் செல்போன்கள்நீங்கள் செல்போன் உபயோகிப்பவராகவே இருப்பீர் !

அதுவும் இடுப்பில் கட்டும் பெல்டில் செல்போன் வைப்பவரா? இது உங்களுக்கான செய்தியே !.

செல்போன்களில் வெளிப்படும் மின் காந்த அலைகளின்(electromagnetic) வெளிப்பாட்டில் எலும்புகளின் அடர்த்தியில் மெலிவு (Osteoporosis) ஏற்படுவதாக கூறுகிறார்கள். அதுவும் இடுப்பெலும்பு வளையம் (pelvis Area ) பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது. சுலிமான் டெமிரில் பல்கலைக்கழகம், துருக்கியைச்சார்ந்த டாக்டர் டோல்கா மற்றும் அவரது குழுவினர் செய்த ஆய்வின்படி செல்போன்களில் வெளிப்படும் மின் காந்த அலைகளின் வெளிப்பாடு எலும்பை பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

சுமார் 150 ஆண்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். அவர்களை எக்ஸ் ரே அப்சார்ப்மெட்ரி(Dual-X-ray absorptiometry) மூலம் அளவீடு செய்து எலும்பு மெலிவு பாதிப்புக்கு உள்ளாவதை கண்டறிந்துள்ளார்கள்.

ஒரு செல்போன் பயன்படுத்துவோர் தினம் 15 மணி நேரம் உத்தேசமாக 6 ஆண்டுகள் பயன்படுத்துவதின் மூலம் இப்பாதிப்புக்கு உள்ளாவதாக இவ்வாய்வு கூறுகிறது.

செல்போன் உமிழும் மின் காந்த அலைகள் இந்த எலும்பு மெலிவு தாக்கத்தை உண்டுபண்ணுவதாக கூறுகிறார்கள்.

இருந்தும் இம்முடிவுகள் துவக்க நிலையில் உள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை என்று நாம் மறுக்கமுடியாது. இவ்வாய்வு செப்டம்பர் மாத-The Journal of Craniofacial Surgery இதழில் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு அறிவியல் சார்ந்த நுட்ப பயன்பாட்டில் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகும் செய்தி இருக்கவே செய்கிறது.

ஜி மெயிலில் தானாகவே பதில் அளிக்கும் வசதி.
விடுமுறையில் செல்கிறீர்கள்.

ஒரு வாரத்திற்கு உங்களால் மின் அஞ்சலை பார்க்க முடியாத சூழல்.

இருந்தலும் வரும் மின் அஞ்சலுக்கு உங்கள் சிரமத்தை, பிரச்சனையை அஞ்சல் அனுப்பியவருக்கு சொல்ல வேண்டும்.

கவலை வேண்டாம். ஜீ மெயில் அப்பணியை ஜி மெயில் செய்யும்.

முதலில் உங்கள் ஜீ மெயிலை திறந்து கொள்ளுங்கள்.

படம் :1

செட்டிங் (Settings ) செல்லுங்கள்

படம் :2

ஜெனரல் (General) டேபை சொடுக்குங்கள்.

படம் : 3

Vacation responder பிரிவில் Vacation responder on செய்யுங்கள்.

வழக்கம் போல

Subject: and Message: உங்கள் கருத்தை பதிசெய்து

Only send a response to people in my Contacts என்ற கட்டத்தில் டிக் செய்யுங்கள்

மாற்றத்தை சேமித்து விடுப்பில் செல்லுங்கள்.

நீங்கள் பதிவு செய்த உங்கள் கருத்தை எண்ணத்தை பதிலாக ஜி மெயில் அனுப்பிக்கொண்டே இருக்கும்.

தமிழ் பேசும் டிஸ்கவரி சேனல்.அறிவியல், இயற்கை, கண்டுபிடிப்புகள், மருத்துவம், உயிரியல், விலங்கியல், மருத்துவம் என்ற விஞ்ஞான சிகரங்களின் எல்லைகளை டிஸ்கவரிச் சேனல் ஆங்கிலத்தில் வழங்கிவந்தது. காட்டுவிலங்கிகளின் அதிசய வாழ்க்கையை படக்காட்சியை மட்டும் பார்த்து அதிசயித்த தமிழுலகம் இப்போது தன் மொழியிலேயே இந் நிகழ்சிக்களை பார்க்கிறது. டிஸ்கவரி சேனல் தமிழில் மொழிமாற்றம் செய்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி செய்து வருகிறது. நான் சென்ற வீடுகளில் எல்லாம் இச் சேனல் ஆர்வத்தோடு பார்ப்பதாக கூறினார்கள். மொழியாக்கம் தமிழ் மொழியில் செய்யும் போது கல்வி, சமூக நிலையில் கீழ் உள்ளவர்களின் வீடுகளில் எல்லாம் இவ்வூடகம் செல்கிறது. சினிமாவை பற்றியே உலகமாக இருந்த தொலைக்காட்சி ஊடகம் இப்போது விஞ்ஞானத்தின் கதவுகளை திறந்து விட்டுள்ளது. இப்போது கூட இப்பதிவை எழுதிக்கொண்டு இருக்கும் போது கொரியா நாட்டில் அதிவேக தொடர்வண்டி தடத்தை கட்டியமைக்கப்பட்டது பற்றிய நிகழ்ச்சி. அதாவது 70 சதவீத மலைகளே உள்ள கொரியாவில் மலைகளை குடைந்து தொடர்வண்டி பாதை அமைப்பது .... என்ன சிறப்பு தெரியுமா? முன்பு ஊமைப்போல சில வார்த்தைகள் மட்டுமே புரிந்து படம் பார்த்த அனுபவத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

என் துனைவியார் மகன்கள் எல்லோரும் சினிமா சேனல்களுக்கு தாவாமல் பார்ப்பது அடிக்கடி நிகழ்கிறது. தாய்த்தமிழ் மொழியில் கிடைக்கும் அறிவியல் மக்களின் மூளையில் உரிமையோடு சென்று உட்கார்ந்து கொள்கிறது.

உலங்குவானூர்திகளின் தர வரிசையை சொல்லும் ஒரு நிழ்ச்சி (Countdown of Helicopters ) ஓட்டுநர்களுக்கு புரியவேண்டிய நிகழ்ச்சி ஒட்டு மொத்த குடும்பமே நிகழ்ச்சியை பார்க்க வைத்து உள்ளது.

இன்னொரு நிகழ்ச்சி இயற்கைக்கும் மனிதனுக்கும் (Man vs Wild )நடக்கும் சாகச நிகழ்ச்சியை காட்டும் காண்பொலியை தமிழில் பார்க்கும் போது மெய்சிலிர்கிறது. ஆனால் முன்பு அப்படியில்லை வெறுமனே சர்க்கஸ் பார்ப்பது போல இருக்கும். இதை உடைத்து இருக்கிறது டிஸ்கவரி. ஆம் வியாபாரம் நோக்கில் இருந்தால் கூட தாய் மொழியில் தொலைக்காட்சி ஊடகம் நிகழ்சிகளை தரும் போது பெறும் பெரும்பான்மை மக்களைச் சென்று அடைகிறது என்பது தான் உண்மை.

அனைத்து துறைகளும் தமிழில் கிடைத்தால் உழைக்கும் மக்களே பயன் பெறுவர். இப்போது டிஸ்கவரி தொலைக்காட்சி ஊடகத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

தேசியக் கொடி இப்படித்தான் மதிப்பார்களோ ?


தன்னை கடவுளாக கூறும் மாதாஜி நிர்மலா தேவிதான் இவர்.

வட நாட்டு அரசியல் தலைவலர்களுக்கு வழிகாட்டி ?

என் மகனின் சின்ன விளையாட்டு – வீடியோ.

இவர் 8ம் வகுப்பு படிக்கிறார். பெயர் திலீபன். அடிக்கடி செய்யும் விளையாட்டே இது. நான் அவ்வப்போது செய்யும் பதிவை பார்த்து இவ்விளையாட்டையும் பதிவாக்கச்சொன்னான்.

நன்றாக இருந்தால் கருத்துரைக்கவும்.

அவனின் விருப்பமும் இதுவே.

புத்திசாலியான மோசமான கொசுக்கள்.

இக் கொசுவின் பெயர் தான் ஏடீஸ். இவர் டெங்கு,சிக்குன்குனியா போன்ற நோய்களை பரப்புவார். இவறின் குணங்கள் வித்தியாசமானது. மற்ற வகை கொசுக்களிடமிருந்து வேறுபட்டது.

இக்கொசுக்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் பழக்கம் கொண்டவை.

நான் 2005ம் ஆண்டில் எடுத்த படத்தை கொண்டு விளக்க முயல்கிறேன். காலை வேலையில் எதிர்வீட்டு பையனுடன் பேசிக்கொண்டு டிஜிட்டல் கேமிராவில் படம் எடுத்துக் கொண்டு இருந்த போது ( படம் 1) நேரம் 7.55 மணித்துளிகள். படத்தில் பதிவாகியுள்ளது சரியான ஆவணமாகியுள்ளது. இந்த ஏடிஸ் வகை கொசு அவனது கன்னத்தில் கடிப்பதை பார்த்து அதையும் கிளிக் செய்தேன்( படம் 2) நேரம் : 08.04. பையனும் ஒத்துழைப்பு கொடுத்தான். அவன் அசையேவே இல்லை.

படம் (3) கொசுவை அடித்து ஆய்வு செய்தேன். இது ஏடிஸ் அல்போபிக்டஸ் வகையை சார்ந்த்து. பெரும்பாலும் கிராமப்பகுதியில் காணப்படும்.

சரி. செய்திக்கு வருவோம்.

புலிக்கொசு

பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் பழக்கம் கொண்ட இவ்வகை ஏடிஸ் கொசுக்களை ஆங்கிலத்தில் Day Biter அழைப்பர். புலிக்கொசு என்ற பெயரும் இதற்கு உண்டு. சூரியன் உதித்தும்,மறையும் இரண்டு மணிநேரத்திற்கு முன்பு தான் கடிக்கும் நேரமாகும். அப்போது தான் மிக மிக சுறுசுறுப்பாக இருக்கும். இரவில் என்ன செய்வார் இவர் ஓய்வுதான்.

மனித இரத்தமே பிடிக்கும்.

இன்னொரு முக்கிய செய்தி மனித இரத்தத்தையே விரும்பி குடிக்கும். அதனால் மனிதன் குடியிறுப்பு எங்கு உள்ளதோ அங்குதான் இருப்பார். சுமார் 50 முதல் 200 மீட்டருக்குள்ளேதான் இவரின் வளர்மிடங்கள் இருக்கும். பசித்தாலும் புலி புள்ளை தின்னாது என்பார்கள். இவர் பதித்தால் மனித இரத்தத்தையே குடிப்பார்.

வளர்மிடங்கள்.

நவீன உலகோடு சம்மந்தப்பட்டது. பிளாஸ்டிக் டிரம், சிமெண்ட் தொட்டிகள், பழைய டயர்கள், தூக்கி எறியப்பட்ட டப்பிகள், உடைந்த பானைகள், தேங்காய் ஓடு, மர பொந்து, பாலித்தின் கவர் போன்ற இடங்களில் நீர்த்தேங்கியுள்ள இடத்தில் இவரின் வளரும் இடமாகும். எல்லோர் வீட்டிலும் மிக்சி கிரைண்டர் வந்து விட்டது. அதனால் நமது பாரம்பரிய ஆட்டுக்கல் வீட்டிற்கு பின் பக்கம் சென்றுவிட்டது. அதில் தேங்கும் நீரிலும் இவர் வளருவார்.

இவரை வராமல் செய்ய வேண்டுமென்றால் மேற்கண்ட இடங்களில் நீர்த்தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாமே நமது நவீன வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது.

முட்டையின் உயிர்ப்புத்தன்மை.

ஏடிஸ் பெண் கொசுக்கள் போடும் முட்டைகள் மேற்கண்ட நீர் நிலைகளின் ஈரப்பதம் உள்ள ஓரப்பகுதியில் இம்முட்டைகள் ஒட்டிக் கொண்டு இருக்கும். ஒரு வேளை நீர் காய்ந்து விட்டாலோ அல்லது இல்லாமல்போனாலோ இம்முட்டைகள் காய்ந்த நிலையிலும் உயிர்ப்பு தன்மையோடு இருப்பது இக்கொசுவின் சிறப்புக்குணம்.

எப்படி இக்கொசுக்களை அழிப்பது ?

எளிது. ஏடிஸ் கொசுக்கள் வளருமிடங்கள் வீட்டைச் சுற்றி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உலகத்தில் பெறும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது டெங்கு. டெங்கு இரத்த ஒழுகல் மற்றும் டெங்கு அதிர்சியால் ஏற்படும் உயிரிழப்பு அதிகம். ஏடிஸ் கொசுக்களின் பரவலை பாருங்கள் இந்த உலகப்படத்தில்.

ஆனால் டெங்குவினால் வரும் பாதிப்போ அதிகம்.

ஏடிஸ் கொழுக்களை அழிப்பது எளிது.

கல்வி சார்ந்த பவர் பாயிண்ட் இலவசமாகத் தரும் வலையிதழ்
கல்வி கற்றுணர்தலில் படக்காட்சிகளுடன் விளக்குவது,பயில்வது மிக எளிது. எளிதில் விளக்குவதும் விளங்குவதும் கணினியில் இந்நுட்பம் பயன்படுதப்படுகிறது.
பவர்பாயிண்டை (படக்காட்சியமைப்பில்) நாம் உருவாக்க பொருத்தமான படங்களைத் தேட வேண்டும் அதற்கான விளக்க சொற்றொடர்களை உள்ளே இணைப்பது சாதாரண பணியில்லை.
இதை எல்லாம் ஆயத்த ஆடையைப்போல தேவையான பவர்பாய்ண்டை இலவசமாகத் தரும் வலையிதழே இது.
www.pptpoint.com
எல்லாம் இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறார்கள். உங்களுடைய பெயர் மின் அஞ்சல் முகவரி எல்லாம் கேட்பதில்லை.
நான் பதிவிறக்கம் செய்த நியுரான் பற்றிய பவர்பாயிண்டின் படமே இது.
பயன்படுத்திப்பாருங்கள் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

பாம்புடன் என் மகன்.


இதற்கு முன் பதிவில் பாம்புகளின் காணொலிக்காட்சியினை வெளியிட்டு இருந்தேன். கிராமம் சார்ந்த பகுதியில் இருந்த போது அவ்வப்போது பாம்புகள் திரியும். ஓடும். சாரைப்பாம்பை பிடித்து நிற்கும் என் மகன் அன்பு. ஆனால் அப்பாம்புகளை நான் அடிப்பதில்லை. ஒரு சிறிய டிஜிடல் கேமெரா இருந்த்தால் அந் நிகழ்வுகளை எல்லாம் நான் படமாக்கியுள்ளேன். ஒரு நல்லப் பாம்பு என் வீட்டினுள்ளேயே வந்து விட்டது. நான் என் அப்பாவின் உதவியுடன் படமாக்கினேன். குட்டி பாம்புதான். ஆனால் கோபத்தோடு சீறியது அச்சத்தையே தந்தது. அக்கோப்பு எந்த சிடியில் உள்ளது என்று தெரியவில்லை. கிடைத்தால் வெளியிடுவேன்.

பாம்புகளின் நடனம்- ஒரு வீடியோ பதிவு.


2006ல் என்னால் எடுக்கப்பட்ட வீடியோ. மாதம் நினைவில் இல்லை. பழைய சீடிகளை அடுக்கும் போது கிடைத்த்து. நான் குடியிருந்த பகுதியில் ஒரு புதரில் நடந்த பாம்புகளின் களியாட்டமே இந் நடனம். சாரைபாம்பும் நல்லப்பாம்பும் தான் இணையும் என்பார்கள். அறிவியல் பூர்வமாக இது உண்மையல்ல. சரையும் சாரையும் தான் இணையும். பார்க்க மிரட்சியைத் தரும் சாரைப்பாம்பு நச்சு இல்லாதது. விவசாயிகளின் நண்பன் என்பார்கள் சுற்றுச்சூழல்வாதிகள்.

பன்றிகாய்ச்சலை தடுப்பது எப்படி ? இந்திய அரசின் காண்பொலிகாட்சிகள்
செய்தியோடைகளை உங்கள் கணினி பக்கம் திருப்புங்கள்....


செய்திகளை ஒருங்கிணைந்து பெறப்படும் முறைமையே செய்தியோடை என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை RSS –Really Simple Syndication என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது.

பெரும்பாலான இணையத்தளங்கள்/வலையிதழ்கள் இவ்வசதியை அளிக்கின்றன. இதன் ஐகான் ஆரஞ்சு வண்ணத்தில் அளித்து இருப்பார்கள்.

செய்தியோடை என்பதுதான் என்ன?

இணையம் கடல் போன்றது. தளங்கள் எண்ணிலடங்கா. ஆனால் நாம் விரும்பிப்பார்க்கும் இணையத்தளங்களை வரிசைப்படுத்திவிடலாம்.

சிலர் புக் மார்க் செய்து படிப்பார்கள். நாம் பார்க்கும் தளங்களை எல்லம் பதிவு செய்து பார்ப்பது சாத்தியம் இல்லாத்து. அப்படிப் பார்த்தாலும் நாம் தேடும் தளங்களில் புதிய செய்திகள் இல்லாமல் இருந்தால் எரிச்சல் / சோர்வு ஏற்பட்டுவிடும்.

இப்பணிகளை எளிதாக்கும் பணியைதான் செய்தியோடை மென்பொருள்கள் செய்கிறது. கீழே உள்ள மென்பொருட்கள் இப்பணியை செய்கிறது.

http://www.feedreader.com/

http://www.feeddemon.com/

http://www.rssreader.com/download.htm

http://www.sharpreader.net/

http://rssbandit.org/

வண்ணமிடப்பட்டுள்ள மென்பொருட்களை நான் பயன்படுத்தியுள்ளேன். இரண்டுமே சிறப்பாக செயல்படுகின்றன. இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நான் டிவிஎஸ் 50 என்ற வலையிதழில் தான் இதன் பயன்பாட்டை அறிந்து கொண்டேன்.

படம் :1.

குறிப்பாக FEEED DEMON ல் செய்தியோடையை இணைக்க SUBSCRIBE கிளிக் செய்து செய்தியோடைகளின் முகவரிகளை இணையுங்கள்

சில மாதிரி செய்தியோடைகளின் முகவரிகள்.

தமிழ்மணம் : http://www.tamilmanam.net/feed

கூகிள் செய்திகள் : http://news.google.com/news?ned=ta_in&hl=ta&output=rss

தினமணி தலைப்பு செய்திகள் : http://www.dinamani.com/edition/rssSectionXml.aspx?SectionId=128

மற்றொரு முறை

ஆன்லைனில் கூகில் இவ்வசதியை தருகிறது.ஜி மெயில் கணக்கு வைத்து இருப்பவர்கள் செதியோடையின் வசதியை பயன்படுத்தலாம்.

படம்2ல் உள்ளது ஜி மெயிலின் செய்தியோடையின் தோற்றம்.

தமிலிஷ் இணைய செய்தியின் தொகுப்பு

செய்தியோடையின் பயன்பாடுகள்

காலம் விரயம் தவிர்க்கப்படுகிறது

விளம்பர எரிச்சல்

இணையத்தை தேடி அலைய வேண்டியதில்லை.

பயன்படுத்துங்கள். உங்கள் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதை உங்கள் பதிவில் இணைக்க...