போட்டோஷாப். உங்கள் கையெழுத்தில்....






போட்டோஷாப்பில் எல்லாமே சாத்தியம். எழுத்துருக்களைக் கொண்டு படத்தை வடிவமைப்பது ஒரு வகை.

இன்று கூகுல் குரோமில் இலவச கருவிகள்









வழக்கம் போல கூகில் குரோமில் இணையத்தில் உலாவச் சென்றபோது ஒரு அறிவிப்பு.
இலவச நீட்சிகளை கருவிகளாக பயன்படுத்த அறிப்பு.

விருதுகளில்... பாலா.... ஆனால்...





அன்புள்ள பாலா...
வாழ்த்துக்கள்..
நான் கடவுள்படம் தேசிய விருதுகள் உங்களுக்கு வாங்கிக் குவித்துள்ளது. உங்களின் படங்களில் விருதுகளால் மட்டுமே நீங்கள் கோடம்பாக்கத்தில் இன்னும் தொலையாமல் இருக்கிறீர்கள்.

தமிழால் வெற்றியடைந்த டிஸ்கவரி சேனல்.



உலகத்தின் அதிசயங்களை வீட்டு வரவேற்பறைக்கு கொண்டு வந்து காட்டிய டிஸ்கவரிச்சேனல் இப்போது 24 மணி நேரமும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்து வருகிறது.

இப்படியும் வாழ்க்கை -படங்கள்






இரு வேறு உலகங்கள்...
இரு வேறு வாழ்க்கை....
மகிழ்சிகளின் எல்லை....
துயரங்களின் எல்லை....

என் வீட்டில் சூரிய கிரகணம்...படங்கள்....

அத்துனை ஊடகங்களும் 102 ஆண்டுகளுக்கு ஒரு முறை த் தோன்றும் கிரகணம் என்று செய்திகள் பரப்பின. வானவியல் அறிஞர்கள் இராமேஸ்வரம் கன்னியாகுமரிப் பகுதிகளில் குவிந்தனர். சென்னையில் பிர்லா கோளரங்கில் சென்னைவாசிகள் குவிந்தனர். ஆன்மீகவாதிகள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கோவில்களில் பூசை தள்ளிவைக்கப்பட்டு கோவிலே மூடப்பட்டு, தமிழகத்தில் கிரகணம் தோன்றிய நேரத்தில் உணவை தயாரிப்பதும் உண்பதும் தள்ளிவைக்கப்பட்டது.

என் வீட்டிலோ வேறு பொங்கலுக்கு சிறப்பான உணவு தயாரிக்கப்பட்டு வந்தது. தொலைக்காட்சி ஊடகங்கங்களில் கிரகணம் ஆரம்பித்துவிட்டதாக மிரட்டியது.

கிரகணத்தை வெறும் கண்களால் மட்டும் பார்க்கக் கூடாது , ஆனால் என் தந்தையாருக்கு ஒரு யோசனை . எக்ஸ் ரே தாளை நான்காக மடித்து பார்த்தார் பிரமாதம். வீட்டிலேயே எல்லோரும் பார்த்தோம். என் தம்பியோ மடிக்கப்பட்ட எக்ஸ் ரே தாளை பில்டர் போல வைத்து டிஜிட்டல் கேமிராவில் பதிவு செய்தான். அருமை. வீட்டிலேயே மக்கள் அறிவியல்...

இன்னொரு அதிசயமும் நிகழ்ந்தது.. அது.

வீட்டில் இருந்த மரங்களின் ஊடே வந்த நிழல்களில் கிரகனத் தோற்றம். ஒன்றல்ல பல நூறு வடிவத்தோற்றங்கள். இப்படங்கள் தான் நீங்கள் பார்ப்பது...

உணவு உண்டபடியே கங்கன கிரகணத்தை பார்த்தோம். அடுத்த நிகழ்வு சில நூற்றாண்டுகள் ஆகலாம்.

வீட்டிலேயே விஞ்ஞானக் கூடம்...





போட்டோஷாப்பில் கோட்டோவியம்- எளிய முறை








என்னதான் டிஜிட்டல் மாற்றங்கள் வந்தாலும் ஓவிய பாணிக்கு தனி மதிப்புதான். வண்ண தூரிகையால் வரையப்படும் ஓவியமாகட்டும், கருப்பில் வரும் கோட்டோவியத்திற்கு தனி மறியாதைதான்.

சின்ன மூன்று மாற்றமே கோட்டொவியம் தயார்.

படத்தை போட்டோஷாப்பில் திறந்து கொள்ளுங்கள். உருவமாக இருந்தால் முகம் தெளிவாக இருப்பது நல்லது.

படம்:1 நான் திறந்து இருக்கும் படம். முன்னதாக இமேஜிக்கு சென்று

Image---Adjustments-----Bright/Contrast

வெளிச்சத்தை அதிகப்படுத்தி காண்ட்ராஸ்டை கூட்டுங்கள்.

பிறகு பில்டருக்கு செல்லவேண்டும்.

படம் : 2

Filter----Sketch-----Stamp

படம் : 3

ஸ்டேம் கருவிகுச் சென்றால்

Light/Dark Balance..

லைட்டை கூட்டி தேவையான அளவு கூட்டியோ குறைத்தோ ... இது உங்களின் ஓவியத்திறனை பொருத்தது.

படம் :4 இதில் சென்ற முறையில் செய்த மாற்றங்களோடு

படத்தில் உள்ளவாறு

Artistic ---Cutout

சொடுக்கினால்....

படம் : 5 இல் உள்ளது போல் தோன்றும் . தேவையான முடித்து கோப்பின் வடிவத்தில் சேமியுங்கள்..

கீழே இவ்வகையில் உண்டாக்கப்பட்ட மாதிரிப்படங்கள்..

பொங்கு..தமிழே பொங்கு...



தமிழினத்தை பேரம் பேசும்

கயவர்களைக் கண்டு..

பொங்கு... தமிழே பொங்கு...

அண்டை மொழி ஆக்கிரமிப்பாளர்களைக்

கண்டு பொங்கு... தமிழே பொங்கு...

போலி புரட்சிகளையும் புயல்களையும்

கண்டு பொங்கு... தமிழே பொங்கு...

திரைப்படமே ஊடக இலக்கியமாக காணும்

போக்கை கண்டு பொங்கு... தமிழே பொங்கு...

ஏகாதிபத்தியம் செய்யும் காலிகள்

இனத்தை அழிதொழித்த போக்கிலிகளைக்

கண்டு பொங்கு... தமிழே பொங்கு...

ஆன்மீகப் போர்வையில்

கயவாளித்தனம் செய்யும் பார்ப்பனிய குருக்களை

கண்டு பொங்கு... தமிழே பொங்கு...

தாய்மண்ணை விலைப் பேசும்

அரசியல் பேடிகளைக்

கண்டு பொங்கு... தமிழே பொங்கு...

போலி பொதுவுடைமைவாதிகள்...

மார்க்சியத்தை

சட்டமன்ற நாடாளுமன்ற கழிவில் புதைத்த

போலிகளைக் கண்டு பொங்கு... தமிழே பொங்கு...

பொது உரிமையற்ற சமுகத்தில்

புதுமைசெய்ய வரும் பெரியாரின் படையே..

சாதியத்தின் கூறுகளை உடைக்கும்

அம்பேத்கரின் படைப்பே...

வர்க்கமூலத்தை கண்டு சாதியத்தை உடைக்க

என் தமிழ்ச் சமூகமே

அடிமைதனத்தை உடைக்க வாராய். வாராய்..

காதலைப் பேசும் விளம்பரம்- வெற்றியடைந்த யுக்தி

சோப்பைப் பற்றி பேசும் பெண்கள், சமையலறை கறையைப்பற்றி அதிகமாக கவலைப்படும் குடும்பத்தலைவி, கணவரின் காலரில் உள்ள அழுக்கைப்பற்றியே 24மணிநேரம் யோசிக்கும் அன்பான குடும்பத்தலைவியாக பேசும் விளம்பரங்கள் சலித்துவிட்டது.

பல மாதங்களாக பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்து இன்றுதான் நேரம் இவ்விளம்பரம் நினைவுபடுத்தியது.

சரி விளம்பரத்திற்கு செல்வோம்.
கப் சாசரில் ஆவி பறக்க தேநீர்.
அவள்: சொல்லித்தான் தொலையுங்களேன்...
அவன்: (மிக மிக அமைதியாக, தேநீர் சாப்பிட்டுக் கொண்டே, சீரியசாக) I Love You. என்கிறான்
அவள் அதிர்ச்சியாக வெறித்து அவனைப் பார்க்கிறாள். சில வினாடிகள் ஓடுகிறது.
சிரிப்பு மெல்ல மெல்ல அறையில் ஒலிக்கிறது.
மெல்லிய காதலை பணமாகும் யுக்தியை நீங்களும் பாருங்களேன்...

இவர்கள் திருடினால் அது படைப்பு....



பல ஆண்டுகளாக திருட்டு டிவிடியால் தமிழ் திரையுலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரச்சனைகள் கிளம்புவது வழக்கம். இப்போது ஜக்குபாய் திரைப்படம் வெளியாகும் முன்பே இணையத்தில் வெளியாகியது. திருட்டு டிவிடியும் வெளியானதாக தயாரிப்பாளர் ராடான் நிர்வாக ராதிகா குற்றச்சாட்டு வெளியிட்டார். கூடவே முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் முன்னணியில் கண்ணீரை வெளியிட்டார். தன்னை இதைவிட “நடுத்தெருவில் சுட்டுக் கொன்று இருக்கலாம் என்று கதறியுள்ளார்.

"ரூ.15 கோடி சொத்தைத் திருடி விட்டார்கள் என்பதைவிட எங்களைக் கொன்றுவிட்டார்கள்' என்பதே உண்மை என்று படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறிய அதே மேடையில், நடிகர் ரஜினிகாந்த் ஜக்குபாய் திரைப்படத்தில் தான் நடிக்க முடியாததைச் சொல்லும்போது, "ரவிக்குமார் எனக்கு வாசபி என்ற பிரெஞ்சு படத்தின் டிவிடியைக் கொடுத்தார். அந்தக் கதை நன்றாக இருந்தது. சூப்பர் கதை. ஜக்குபாய் படம் நன்றாக ஓடும். ராதிகா கவலைப்பட வேண்டியதில்லை' என்று கூறியிருக்கிறார்.

கமலோ தேசிய பற்றோடு ஒரு படி மேலே போய் திருட்டு டிவிடி பணம் தீவிரவாத்த்திற்கு செல்வதாக கூறியுள்ளார். இவர்கள் கதையை ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு கட்டிங், புட்டிங், குட்டிங்கோடு டிஸ்கஸ் செய்வார்கள். முடிந்தால் கதை லீக்காகிவிடும் என்று லண்டன், அமெரிக்கா என்று வெளிநாடுகளுக்குப் பறப்பார்கள்.

இவர்களின் கதையின் அடித்தளம் 4 பாட்டு, டிஜிட்டல் டெக், பீட்டர் ஹெயின்ச் சண்டைகாட்சிகள் ( மேட்ரிக்ஸ் படத்தில் இருந்து திருடப்பட்டது போல இருக்கலாம்).

தொடையை காட்ட எவ்வளவு ஆடையை குறைக்க முடியுமோ அதை செய்ய ஸ்டார் நாயகிகள் ரெடியாக இருக்கிறார்கள். பின்னால் ஆடும் குழு நடனக் குழுவினர் கூட முழு ஆடையில் தான் ஆடுவார்கள். நமது நாயகி மர்லின் மன்றோ ஸ்டெயிலில் பாவாடை பறக்க இன்னும் ஆடிக்கொண்டு கலைப்பணியை செய்ய வைப்பார்கள் முன்னணி இயக்குநர்கள்.

படம் ரிலிசுக்கு முன்னால் ஏதாவது தனியார் தொலைக்காட்சியில் நேரலையில் தோன்றி திரைப்பட ஆக்ககத்தில் தங்களின் வியர்வையின் வேதனையை தெரிவிப்பார்கள். கனவு நாயகிகள் அது வந்து வந்து என் இனர்ஜிகளை கொண்டு வந்த இயக்குனரை தங்லீசில் பேசுவார்கள். இதற்காக ரோம்ப ரொம்ப ஹோம் வொர்க் செய்ததாக நாயக நாயகிகள் கூறுவார்கள். நாயகர்கள் 6 பேக் காட்டுவார்கள். ஏதாவது சேனல் இப்படத்தை டிரைலரைப் போட்டு போட்டு சூடேற்றுவார்கள்.

இதுதான் நமது சினிமா. விதிவிலக்காக பசங்க, 9 ரூபாய் நோட்டு, அழகி போன்றப் படங்கள் தலையை காட்டும். இதையும் மக்கள் பார்க்கத்தான் செய்தார்கள்.

ஆனால் நட்சத்திர இயக்குனர்கள் சொல்வது , மக்கள் பார்க்கிறார்கள் ரசிக்கிறார்கள் என்று கூறுவார்கள்.

ரஜினி ஓர் உண்மையை கூறியுள்ளார் அவரை பாராட்டலாம். ஜக்குபாய் படம் எங்கே சுட்டது? வாசபி என்ற பிரஞ்சுபடம். அந்த டிவிடியை தான் உல்டா பண்ணி படம் எடுத்து இருக்கிறார்கள். இது திருட்டுத் தொழில் இல்லையா? கலைச் செல்வி ராதிகா என்ன பதில் சொல்லுவார்.

இதற்காக நாம் திருட்டு டிவிடி நுட்பத்தை ஆதரிக்கவில்லை. ஸ்டார் வேல்யு உள்ள நுட்புனர்கள் மட்டுமே திரையுலகம் இராஜலோக வசதியை தருகிறது. மற்ற இரண்டாம், மூன்றாம் நுட்புனர்கள் படியேறி ஏறிதான் ஊதியம் பெற வேண்டும்.

இப்படிப் பட்ட வியர்வையை மதிக்காத நட்சத்திர தமிழ்சினிமா, தமிழ் மண்ணில் காலூன்றாத தமிழ் சினிமா,என்னதான் உயர் கணினி நுட்ப காட்சிகளை படமாக்கினாலும் கசியவே செய்யும்...

திருட்டு டிவிடி மட்டுமல்ல... கதைக்கூட திருட்டுதான்... இவர்களை யார் சுடுவது?

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger