நாம் நிறுவனத்திற்காக அல்லது ஒரு செயல்முறைகளை படவிளக்கக்கோப்பாக (Power Point presentation ) தயாரித்து இருப்போம். நிறுவனத்திற்கோ அல்லது உயர் அலுவலருக்கோ காட்ட வேண்டுமானால், லேப்டாப், கணினி, புரொஜெக்டர் நுட்பங்களைத்தான் நாட வேண்டும்.
அத்துனை ஸ்லைடுகளையும் இமேஜ் வடிவத்தில் மாற்றலாம். அதாவது ஜேபிஜி,கிப்,டிப், (jpg, gif,tif,png ) கோப்பாக மாற்றலாம். இவ்வெளிய வசதியை எம் எஸ் பவர்பாய்ண்ட் செய்து தருகிறது.சேமிக்கும் போது (Save as ) செல்லும் போது வடிவம் என்று கேட்கும். அதாவது எந்த வடிவத்தில் வேண்டும் என்று கேட்கும். அப்போது பிரபல பட கோப்பான ஜேபிஜி வடிவத்தை தேர்வு செய்ய வேண்டும்.
அடுத்து எல்லா ஸ்லைடுகளையுமா அல்லது தனித்தனியாக மாற்ற வேண்டுமா என்ற கேள்விக்கு நமது தேர்வின்படி செய்து கொடுக்கும்.
பணிமுடிந்தது. அதை டிஜிட்டல் படமாக அச்சு எடுக்கலாம்.
No Response to "பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை இமேஜாக மாற்ற.."
Post a Comment