“லெப்டோஸ்பைரோசிஸ்” நோயை அறிவோம்.

பருவ மழை முன்னதாகவே துவங்கி விட்டதாக வானிலை மையங்கள் அறிவிக்கிறது. இக்கால நிலை மாறுபாட்டால் பல்வேறு நோய்கள் திடீர் நிகழ்வுகளாக தோன்றுகின்றன. இதில் சிக்குன்குனியா,டெங்கு,மலேரியா மற்றும் லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் நோயும் ஒன்று.

சமீப காலங்களில் இந்நோயைப்பற்றி விழிப்புணர்வு மருத்துவ துறையினரிடம் தோன்றியுள்ளது. இதனால் பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவ நிலையங்களில்  கண்காணிப்பு தோன்றியுள்ளது.

குறிப்பாக லெப்டோஸ்பைரோசிஸ் நோயை எலிக்காய்ச்சல் என அழைக்கிறார்கள்.எலிக்காய்ச்சல் என்ற பெயரிலேயே எலியின் மூலம் பரவுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

   லெப்டோஸ்பைரோசிஸ்ஒரு வகை  பாக்டீரியாவே !

இந்த பாக்டரியா பிரிவில் நோய்த்தொற்று  உண்டாக்கும் வகை   (Pathogenic ) மற்றும் நோய் உண்டாக்கா  வகை (Saprophytic) என வகைப்படுத்தலாம். இக்கிருமிகள் விலங்குகளின் சிறுநீரகத்தில்  உள்ள நுண்ணிய குழாய்களில் இயற்கையாகவே காணப்படும். ஈர சூழலில் சேறும் சகதியும் உள்ள சூழலே  இந்நோய் பரவ ஏதுவான சூழலாகும்.

இதன் அமைப்பிலுமே வித்தியாசம்

ஒரு ஸ்குரு நெட்டை மனதில் கொண்டு வாருங்கள். பிறகு அதை சுற்றுவது போல் மனதிலேயே காட்சிப்படுத்துங்கள். அதன் முனை மரக்கட்டையிலோ அல்லது சுவற்றிலோ  அழுத்தி சுற்ற சுற்ற உள்ளேச் சென்று விடும். இந்த பாக்டிரியாவும் ஸ்குரு/திருகு ஆணி போல சுற்றிக்கொண்டேதான் இருக்கும். இதை கருப்பு பின்னணியில் பார்க்கும் போது வெள்ளிக் கம்பிகள் அங்கும் இங்கும் சுற்றுவதை பார்க்கலாம்.

இயற்கை விருந்தோம்பி.

பெரும்பாலான முதுகெலும்பு விலங்குகளின் சிறுநீரில் இதை காணலாம்.  பெரும்பாலும் இக்கிருமிகள் இவ்விலங்குகளுக்கு எவ்வித பாதிப்பையும் எற்படுத்துவதில்லை.

இத்தனை பிரிவுகளா ?

சுமார் 200 பிரிவுகளில் 25 பிரிவுகள் மட்டுமே நோய் பரப்பும் தன்மையுடையது. ஒரு சமுகத்தில் லெப்டோ பெரும் நிகழ்வாக தோன்றி இருக்கும் போது ,தொற்று வகையில் எவ்வகை என கண்டறிவதே முக்கியமாகும்.

நோய்த்தொற்று குறித்து இரண்டு வகையாக லெப்டோஸ்பைரோசிசை பிரிக்கலாம்.

1.        லெப்டோஸ்பைரோசிஸ் இன்டிராகன்ஸ் (Lepto. Interogans )

2.       லெப்டோஸ்பைரோசிஸ் பைபிலெக்சா (Lepto. biflexa)

நோயின் அறிகுறிகள்.

·         காய்ச்சல் -7 முதல் 14 நாட்கள் வரை

·         தசைவலி

·         உடல் வலி

·         கண்கள் சிவந்து காணப்படுதல் (Conjuctival suffusion )

·         மஞ்சள் காமாலை

ஆனால் இந் நோய் மற்ற நோய்கள் போன்றும் குழப்பம் ஏற்படுத்தும். சொல்லப்போனால் டெங்கு போன்றோ மலேரியா மற்றும் மஞ்சள் காமாலை  போன்றோ தோன்றும்.

நோய் வளர்காலம்

லெப்டோ தோன்றி முதல் அறிகுறி தெரியும் காலத்தை  நோய் வளர்காலம் எனலாம்.  இந்நோயுக்கு வளர்காலம் 5 முதல் 14 நாட்களாகும்.

பரவும் விதம்.

மீண்டும் பழைய செய்திக்கு செல்வோம். விலங்குகளின் சிறுநீரில் இயற்கையாகவே காணப்படும். குறிப்பாக எலி,நாய், கால்நடைகள்,முயல், வெள்ளெலி போன்ற பாலுட்டிகளின் சிறுநீரகத்தில் இக்கிருமி இயற்கையாகவே காணப்படும். இவ்விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர்  மற்றும் சேறு சகதி போன்ற சூழலில் மனிதனுக்கு லெப்டோ வரும் வாய்ப்பை அதிகம் உண்டாக்குகிறது.

வீடுகளில் உள்ள எலிகள் பெரும்பாலும் சமையல் அறை, உணவுப்பொருள் சேமிப்பு அறைகளில் காணப்படும்.எலி அங்குமிங்கும்  தாவி ஓடும் போது  எலி சிறுநீர் கலக்க வாய்ப்பாக்குகிறது.

நோய் பரவும் விதத்தை காண்போம். திருகு ஆணி ஒன்றை மனதில் கொண்டு வாருங்கள் அது சுற்றுவது போல கற்பனைச் செய்யுங்கள்.

ஒரு பேச்சுக்கு நாம் குடிக்கும் நீரில், குளிக்கும் தண்ணீரில் லெப்டோகிருமி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த தண்ணீரை வாய் கொப்பளிக்கிறோம்.என்ன நடக்கும் ? திருகு ஆணிப்போல சுற்றிக்கொண்டு இருக்கும். மென்மையான உள் அன்னத்தில் இக்கிருமி பட துளைத்துக் கொண்டு உள்ளே சென்று விடும். பிறகு நோய் பாதிப்பு தான்.

பிறகு..

நமது சமூகச் சூழலில் பெண்கள் வீட்டு வேலை முழுவதையும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செய்வார்கள். பாத்திரங்கள் கழுவுவது,துணி துவைப்பது போன்ற வேலைகளில்  ஈடுபடுவதால் அவர்களின் கால்கள் கைகளில் விரல்களின் இடுக்குகளில் உள்ள தோல் மிருதுவாக இருக்கும். இந்நிலையில் லெப்டோ கிருமிகள் இப்பிளவுகள் வழியாக உள்ளே சென்று விடும்.

இதேபோல்..

கழிவுகளை துப்புரவு செய்யும் தொழிலாளர்கள், உழவுத்தொழிலாளர்கள், கரும்பு வெட்டுபவர்கள், மழைக்காலங்களில் ஈரப்பதம் மற்றும் ஈரம், சேறு சார்ந்த மண் பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கும், விலங்குகளோடு நெறுங்கியத்தொடர்பு கொண்டோருக்கும் இந்நோய் பாதிப்பு வர வாய்ப்புள்ளவர்கள்.

உடலில் எப்பகுதி மூலம் இக்கிருமி துளைத்துக் கொண்டு உள்ளே செல்லும் ?

மெல்லிய மிருதுவான தோலுள்ள பகுதிகளான மூக்கு, வாய் மற்றும் கண்கள்.  நீரில் றி மிருதுவான தோல் பகுதிகள் கால் மற்றும் கைகளில் விரல் இடுக்குகள்.

சிகிச்சை.

பரவலாக மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் டாக்சிசைக்கிளின்,பென்சிலின், அமாக்சளின் போன்ற மருந்துகளுக்கு கட்டுப்படும். இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சிகிச்சை மேற் கொள்ளவேண்டும்.

கிராமப்பகுதிகளில் மஞ்சள் காமாலை என்று தவறாக நினைத்து பாரம்பரிய வைத்தியம் செய்வார்கள். ஆனால் லெப்டோ இதற்கு கட்டுப்படாது. கல்லீரலை பாதித்த லெப்டோ இப்படியான அறிகுறிகளைக்காட்டும். இதனால் நிலைமை மோசமாகக்கூடும்.

தடுப்பு நடவடிக்கைகள்.

·         இந்நோயைப்பற்றிய குறைந்தபடச தகவலை தெரிந்துவைத்தல்.

·         மழைக்காலத்தில் இந்நோய் பரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் நமக்கு நோய் பற்றிய விழிப்புணர்வு அவசியம்.

விகடன் முகப்பு பக்கத்தில் என் பதிவுஇன்று விகடன் முகப்பு பக்கத்தில் என் பதிவு வெளியாகியுள்ளது. விகடனுக்கு என் நன்றிகள். கோடை வெயிலை எப்படி எதிர்கொள்வது? என்ற கட்டுரைதான் அது. முகவரி: http://www.vikatan.com/vc/2009/jan/vc.asp http://youthful.vikatan.com/youth/manivarmastory07052009.asp

படத்தை குணப்படுத்தும் அதிசயக் கருவி- போட்டோஷாப்

உடலில் பிரச்சனைகள், நோய் பாதிப்புகள் என்றால் நாம் மருத்துவரிடம்  செல்வோம். அவர் நோய் பாதிப்புகளை அறிந்து குணப்படுத்துவார்.

இதையே

போட்டோஷாப்  ஒரு மருத்துவரைப் போல செய்கிறது.

பார்க்க பிரமிப்பு செய்யும்  இப்பணிமிக மிக எளிது.

நாம் எடுக்கும் படத்தில்

அதாவது முகத்தில் வெட்டு காயம், வெட்டு வடு, முகப்பரு, சுருக்கங்கள்  உள்ளது. கவலையே வேண்டாம். ஒரு மருத்துவரைப் போல போட்டோஷா உதவியுடன் செயல்படப் போகிறீர்கள்.

படம் .1.

வெட்டு காயமடைந்த ஒரு நபரை திறந்துள்ளேன். பாருங்கள் எவ்வளவு ஆழாமான வெட்டு.

இதற்கு மருத்துவரானால் தையல் போடுவார்.. பிறகு களிம்பு மருந்து வைத்து கட்டுப் போடுவார்.

ஆனால்  போட்டோசாப் இதற்காக நமக்கு கொடுக்கும் கருவிதான் குணப்படுத்தும் கருவி.

Heal tool

இதை தான் நாம் பயன்படுத்தப் போகிறோம்.

 

படம்.2.

டூல் பாரில்  நான் குறியிட்டுள்ள கருவி தான் அது.

தோற்றமே ஒரு பேன்டேஜ் போன்ற தோற்றத்தில் அமைந்திருப்பதை பாருங்கள்.

அதை தேர்வு செய்ய Healing Brush tool (படம் .3.) அடிகோடிடப்பட்டுள்ளது .அதை தேர்வு செய்யவும்.

சரி. இப்போது  வெட்டுக் காயத்தை குணப்படுத்த வேண்டும்எப்படி..

வெட்டு காயம்பட்டவரின் தோலைத்தான் நாம் பொருத்தப் போகிறோம்.

வெட்டு காயம் பக்கத்தில் (படம்.2.) உள்ள பாதிப்பில்லாத தோலை Alt கீயை அழுத்தி ஒரே ஒரு கிளிக். பிறகு வெட்டுப்பட்ட இடத்தில் மௌசின் குறியை வைத்து அழுத்திய படி தேய்கவும்

காயம் மறைந்து தேர்வு செய்த தோலின் நிறம் வருவதைப் பாருங்கள்.

படம் .3.

அவரின் தோலை தேர்வு செய்து  ( Alt கீயை அழுத்தி ) காயத்தை குணமாக்க மறைந்து விட்டது.

பணி முடிந்து விட்டது. ஜேபிஜி (JPG)  கோப்பில் சேமியுங்கள்.

புகைப்பட கலையில் நீங்களும் ஒரு மருத்துவர் தான்..

 

இதை உங்கள் பதிவில் இணைக்க...