இணைய வாழ்விகளின் கனவு வாழ்க்கை.

இணையம் உலகத்தை சுருக்கிவிட்டது. இணைய வசதி கொண்ட ஒரு கணினி மூலம் உலகத்தினூடே பேசிடாலாம். இது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை . இந்திய மக்கள் தொகையில் 5 விழுக்காடுக்குக் குறைவாகவே இணைய பயன்பாட்டை உபயோகப்படுத்துகின்றனர். கொஞ்சம் வசதியானவர்கள் முதல் கணினி இணைய நுட்பக்கல்வி பயின்றோர் வரை இதை பெருமளவில் பயன்படுத்துவோராக உள்ளனர்.
மின் அஞ்சல், இணைய அரட்டை, பதிவுலகம் என்று  விரிந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் மின் அஞ்சலை திறந்து பார்ப்பது, கடிதம் கண்டவுடனேயே இணைய வேகத்திற்கு அவரின் மனதும் மறு முனைக்கு செல்கிறது. படபடப்பு, இனம் புரியாத உணர்வு இதை படிப்பதவர்கள் உணர்ந்துஇருப்பார்கள்.


சாட்டிங்கில் வயது மாற்றி பாலினத்தை மாற்றி பேசும்போது  ஆண் பெண்ணாகவோ, பெண் ஆணாகவோ மாறியே போகிறார்கள். 45 வயது நபர் 18-20 வயது ஆகிறார். புது இரத்தம் இணையம் அவருக்கு ஏற்றுகிறது. இது அப்போதைக்கு அவரை உச்சத்தில் கொண்டு செல்லும்.  இணையம் துண்டிக்கப்பட்டவுடன் இவரும் சட்டவுன் ஆகிவிடுவார். மன நிலை பிறழ்வு நிலைக்கு செல்ல ஆரம்பிக்கிறார். இது மன நிலை பாதிப்பே. போகப்பாக இவர்களின் விழுக்காடு அதிகமாகும்.
பதிவுலகம்.
பிளாகிங் என்று சொல்லப்ப்படும் கருத்தியலை ப்ரிமாறும் வலைப்பூ/வலையிதழ் பிரபலம்.
கருத்துச்சுதந்திரம் எல்லையில்லாத்து. பல பிரபலங்கள் இதை பயன்படுத்தி தாங்கள் தொடர்பை விரிவுபடுத்து கின்றனர். டிவிட்டர், ஆர்குட், பேஸ் புக் போன்ற சமூக தொடர்பு நலன்கள் குறிப்பாகச் சொல்லலாம். இதில் தீண்டாமை இல்லை, சாதி மதப்பாகுபாடு இல்லை, ஆனால் இவ்வாழ்க்கை தற்காலிகமானது.
முள்ளி வாய்க்காலில்  படுகொலை நிகழ்ந்து கொண்டு இருந்தபோது பலர் இணையத்தில் செத்து வீழ்ந்தனர். என்னை உட்பட.
யாதார்த்தம் வேறு : எதிர்பார்ப்பு வேறு
இதை பார்க்க தவறுபவர்கள் இணைய வாழ்விகளாகின்றனர். இணைய இணைப்பு கிடைத்துவுடன் இவர்களுக்கு உயிர் வந்துவிடும். பலரின் நிலை இது தான்.
ஈழப் படுகொலையில் இந்திய,தழக அரசுகளின் ,அரசியல் கட்சிகளின் போக்கு பெரும் விவாதப்பொருள் ஆக்கப்பட்டது.
ஆனால் இவ்விணைய பயண்பாடு இல்லாமல் போயிருக்குமானால் ஈழ மக்களை அப்படியே புதைக்குழியில் போட்டு மண்ணை மூடியிறுக்கும்.
புலம் பெயர்ந்த தமிழர்களின் எழுச்சி  ஆழிப் பேரலையாக உயர்ந்த்து. இது தான் உலகத்தின் பார்வையை ஈழத்தின் பக்கம் திருப்பியது.
ஆனால் ஈழத்தை இணையத்தில் பலர் அமைத்தனர், சண்டை போடுக் கொண்டனர், தமிழகம் எழுச்சியின் வடிவாக உள்ளதாக இணைய வாக்கெடுப்புகள் கூறியது. இது போன்ற கருத்தாக்கங்கல் தான் இணையவாழ்விகளை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது.
யதார்த்தத்தை மீறிய இணைய வாழ்க்கை ஒரு மன பிறழ்வே.
ஆக்க பூர்வமான கருத்துக்கள் படைப்புகள் இணைய பயண்படு உபயோகிக்கும் 5 விழுக்காடு மக்களுக்கே செல்கிறது. இணையத்தில் பொதுவுடைமை சமுகத்தை படைப்பவர்களும் உள்ளார்கள். இவர்கள் நிலத்தில் கால்களை பதிப்பதே இல்லை.

இணையத்தின் எல்லைகளை நாம் உணரவேண்டும்.
இல்லையேல் நாம் ஒரு மன நல மருத்துவரை நாடுவது தன் சிறந்த செயலாக இருக்கமுடியும்.

No Response to "இணைய வாழ்விகளின் கனவு வாழ்க்கை."

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger