அன்புள்ள பாலா...
வாழ்த்துக்கள்..
“நான் கடவுள்” படம் தேசிய விருதுகள் உங்களுக்கு வாங்கிக் குவித்துள்ளது. உங்களின் படங்களில் விருதுகளால் மட்டுமே நீங்கள் கோடம்பாக்கத்தில் இன்னும் தொலையாமல் இருக்கிறீர்கள்.
தமிழ்த்திரை உங்களின் மகுடங்களால் தலை நிமிர்ந்து இருக்கிறது...
தமிழனின் அடையாளமாய் உங்கள் படங்கள்...
ஆனால் ஒரே வருத்தம்...
நந்தாவில்.. பிதாமகனில்..நான்கடவுளில்...
மனிதர்களைத்தான் காட்டியுள்ளீர்கள்..
ஆனால் அவர்கள் சாமானிய மனிதர்களுக்கு அப்பார்ப்பட்டவர்கள்...
சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள்...
அப்பாவைக் கொன்றவர்களாக இருப்பார்கள்...
பினமெறிப்பவனாக மனிதத்தன்மை இல்லாதவனாக..
சாமியாராய்ப்போய்.... காசியில் குடியிருந்து...
பிச்சைக்காரர்களை உருவாக்கும் மாபியா கும்பல்களை அடித்து துவைக்கும் நாயகனாகத் தான் இருப்பார்...
பாத்திரம் வடிவமைப்பு, உருவாக்கம் குறையேது மில்லை.
இவர்கள் ஆயிரத்தில் ஒருவனாக, இலட்சத்தில் ஒருவனாக இருப்பவர்களை உங்கள் படைப்பு நாயகனாக்குகிறதே என்பதுதான் என் வருத்தம்.
இதை விருது வாங்கும் இந்த நேரத்தில் சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது...
அப்போதே என் மனதில் இதைப் பற்றி நான் யோசித்ததுண்டு.
இவர்கள் தான் தமிழர் அடையாளங்களா?
பசியுடன்.. கிராம அடையாளங்களை தொலைத்த...
வாழ்க்கையை இழந்த எம் மக்கள்...
சாதிய முரண்களோடு தமிழ்த்தேசிய அடையாளத்தை இழக்கும் இச்சமூகத்தை உங்கள் போன்றோர்களால் தான் பதிவு செய்ய முடியும்.
நீங்கள் காட்டும் நாயகர்கள் தான் தமிழர்களின் அடையாளங்களா?
உலகம், இந்திய திரை உலகம் தமிழன் என்ற அடையாளத்தோடு தான் பார்க்கிறது.
உங்கள் திரைப்பதிவில் எங்களின் முகமென்ன?
லும்பன் பாட்டாளிகளை உதிரி பாட்டளிகளே உங்கள் நாயகர்கள்?
இவர்கள் அவார்டுகளுக்கு சரியான பாத்திரங்களே!
உங்களின் விருதுகள் என்ற நதி திரை வரலாற்றில் ஒவ்வொரு முறையும் ஒரு மையில் கல்லை நடுகிறது. அது தமிழ் திரை நோக்கியே வருகிறது.
ஆனால் அது தமிழ் அடையாளத்தோடு வருகிறதா? என்பதே தாழ்மையான கருத்தாகும்.
7 Response to விருதுகளில்... பாலா.... ஆனால்...
இது தான்... இதே தான்...
நல்லா சொல்லியிருக்கீங்க
உண்மைதான் நானே பலமுறை எண்ணியிருக்கிறேன் நம்மவர் இப்படி அருமையான ஆளுமையுடைய பாத்திரங்க்களை படிக்கக்கூடியவர் ஏன் சாதாரணமாய் நாம் எங்கும் காணும் இளைஞர்களை தன்னுடைய பாத்திரமாக்குவதில்லை
ஆம் இவரைப்போன்ற இயக்குனர்களைத்தான் நல்ல தமிழ்மக்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் இவர்களைப்போன்றோருக்கு என் நினைவில் இடமுண்டு.. எங்களுக்கு ரவிகுமாரோ, வாசுவோ, பேரரசுவோ, ஷங்கரோ இவர்களைப்போன்ற மொக்கை இயக்குனர்கள் எங்களுக்குத்தேவையில்லை..
இயக்குநர் பாலா தமிழ்த் திரையுலகம் கண்ட மிக மாறுபட்ட இயக்குநர். இவரால் தமிழ்த்திரையுலகம் பெருமையடைய வேண்டும். அவருடைய படங்களைப் பார்த்து வாயைப் பிளந்து வியந்திருக்கிறேன்.
ஆனால், நீங்கள் பதிவில் குறிப்பிட்டது போல இதுவரை நான் சிந்தித்தே இல்லை. நீங்கள் சொல்வது மிகச் சரிதான் நண்பரே. நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். இந்தப் பதிவை பாலா கவனத்திற்கு விடுக்கவும்.
அவர் கண்டிப்பாகச் சிந்திப்பார்.. செவிசாய்ப்பார். அவரிடமிருந்து நாம் பெற வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.
பாலாவுக்கு வாழ்த்துகள்.
வணக்கம் மணிவர்மா..படித்தேன்..உங்கள் பார்வை சரிதான்..ஒத்துக்கொள்கிறேன்..நம் சாமானியர்களின் முகங்களை வாழ்வை பதுவி செய்ய இன்னும் சில நல்ல இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற அரிய மனிதர்களின் இருட்டு வாழ்க்கையை, சமூக அவலங்களை பதிவு செய்ய பாலா மட்டுமே இருக்கிறார் என்பது என் கருத்து..
அப்புறம் படைப்பு என்பது ஒரு கலைஞனின் பார்வை..அதை இப்படி இருக்கலாம் என்று வரையறுக்க நமக்கு உரிமை இல்லை..படைப்பை விமர்சிக்கலாம்..தவறில்லை.. பாலாவின் படைப்பு ஆளுமை கவனம் எல்லாம் ஒரு தனி உலகம்.அதில் பயணிக்கவே நமக்கு அதிக அனுபவம் தேவைப்படுகிறது..
பாராட்டுவோம்..நம் சகோதரன் வடநாட்டு ஆளுமையை வென்று விருதை வாங்கியதற்க்காக..
உங்களின் பார்வையும் பாராட்டப்படவேண்டியதே..னம் படைப்புகள் நம் சமூகத்திற்கு உதவ வேண்டும் என்ற ஒத்த கருத்து உள்ளவன் தான் நானும்..இயன்றவரை முயற்சிப்போம்..சமூகம் மேம்பட..
வாழ்த்துக்கள்..
அன்புடன்
சேரன்..
அருமை
பின்னூட்டங்கள் இட்ட அரைகிறுக்கன், முரளிசாமி,சு.ப.நற்குணன், இயக்குநர் சேரன் முத்து ஆகியோருக்கு என் நன்றிகள்.
சிலர் விருதுகளைத் தேடிப் போவார்கள். அது செய்தியாகிறது.
ஆனால் விருதுகள் சிலருக்கு பாதையாகிறது. அப்பாதையில் பாலாவை நடக்க வைத்து இருக்கிறது. இது அவரின் உழைப்புக்கு கிடைத்த விருது. இதை பின்னூட்டங்கள் தந்த அனைவரும் பதிவு செய்துள்ளார்கள்.
இயக்குநர் சேரன் பதிவு செய்தது /அரிய மனிதர்களின் இருட்டு வாழ்க்கையை, சமூக அவலங்களை பதிவு செய்ய பாலா மட்டுமே இருக்கிறார் /. உண்மைதான்.
இதைத்தாண்டி எழுதப்படாத இலக்கியங்கள்,பதிவுகள் எங்கள் மண்ணில் மன்னிக்கவும் ,பாலா வாழும் மண்ணில் தான் இருக்கிறது.
ஒரு ஜெர்மன்/பிரெஞ்சு/ஈரானிய படத்தைப் பார்த்தால் அவர்களின் அடையாளம் கண்டிப்பாக இருக்கும்.
இதைதான் பாலா செய்ய வேண்டும். இன்னும் பெரும்பான்மை மக்கள் /உழைக்கும் மக்களின் ஊடே உள்ள இன்பங்களை, துன்பங்களை திரை ஊற்றில் கொண்டு வாருங்கள்.
தமிழ்த்திரை தவமாய் தவமிருந்து, ஒன்பது ரூபாய் நோட்டு, அழகி போன்ற கதைகளை தமிழ் மண் ஆதரிக்க தவறியதே இல்லை. சேரன், தங்கர் போன்றோர் இன்னும் நம்பிக்கையூட்டிக் கொண்டுவருகிறார்கள்.. இவர்களின் நன்மதிப்பைப் பெற்ற இயக்குநர் பாலாவும் , என்னைப் போன்ற சாமான்ய பார்வையாளர்களின் எதிர்பாப்பும் இதுவே. மீண்டும் புதிய படைப்பைத் தர பாலாவுக்கு வாழ்த்துக்கள்,.
Post a Comment