இருவரும் ஒருவரே!‍ : விமுனா மூர்த்தி கவிதை


ஊழல் புரிவதில்
உத்தமர் நாங்கள்;
கருத்திலும் செயலிலும்
கை கோப்பது இயற்கை;

இலங்கை
இராஜ பக்சே
இலங்கைத் தமிழரை
ஒடுக்குதல் போல
தமிழகத் தமிழரை
ஒடுக்கிய என்னை
பிரித்துப் பார்ப்பது
பேதைமை, பேதைமை!

ஊழலில் கூட
உத்தமம் என்பது
கண்டு பிடித்தால்
திருப்பித் தருவது !

“ஹம்பந் தோட்டா”
ஊழல் மூலம்
அடைந்த பணத்தைத்
திருப்பிச் செலுத்திய
பெருமை மிகவர்
இராஜ பக்சே!

“டான்சி நிலத்தைத்”
திருப்பித் தந்து
ஊழலில் நானும்
புரட்சி செய்ததை
உலகே அறியும் ;

பத்திரிக்கை
ச் சுதந்திரம்
பறிப்பதில் கூட
ஒற்றுமை நிலவும்
எங்களுக் குள்ளே;

பரஸ்பரம் நாங்கள்
அழைப்பு விடுப்பதும்,
நன்றி கூறலும்
வியப்பே இல்லை !

(செய்தி ஆதாரம் : தி சண்டே இண்டியன் )

-விமுனா மூர்த்தி

No Response to "இருவரும் ஒருவரே!‍ : விமுனா மூர்த்தி கவிதை"

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger