ஆறு கோடி தமிழர்களும் வெட்கி தலை குனிந்து….

ஆறு இலட்சம் தமிழர்கள் வாழ்க்கையே கேள்விகுறி…

கிளிநொச்சி மீதான இராணுவத் தாக்குதலால் அம்மக்கள் ஊரை விடே இடம் பெயர்ந்திருக்கிறார்கள். முட்களில், புதர்களில் மொத்தமாக காடுகளில் வாழ்ந்து கொண்டிருகிறார்கள். சொந்த நாட்டிலேயே வான் தாக்குதல் நடக்கும் கொடுமை ஈழத்தில் மட்டுமே நடக்கிறது. காஸாவின் மீது நடக்கும் வன்தாக்குதல்களை எல்லா நாடுகளும் கண்டித்துவிட்டன. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மனித உரிமை மீறல் காசாவில் மட்டுமே தெரிகிறது. குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், வயதானோர் காடுகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் நிமிடத்திற்கு நிமிடம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பு போர் நிறுத்தமே. இல்லையென்றால் ஈழத்தமிழினமே பூண்டோடு அழிபடும் நிலைமை.

விடுதலை சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன் கூறுவது போல “ரா “ உளவு அமைப்பின் விமானம் முல்லைத்தீவு மற்றும் கடலோரங்களில் சென்று கூடிக்கொடுக்கும் பணியையே செய்து வருகிறது. நாம் கேட்பது உதவி அவர்கள் செய்வது ‘உபத்திரம் ??’.

சென்னை செய்தியாளர்களிடம் டாக்டர் இராமதாஸ் குறிப்பிட்டர்.

ஆறு கோடி தமிழர்களும் வெட்கி தலை குனிந்து நிற்கிறோம். தமிழர்களின் சுயமரியாதை, தன்மானம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசையும், மக்களையும் மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டது.


2 Response to ஆறு கோடி தமிழர்களும் வெட்கி தலை குனிந்து….

January 13, 2009 at 6:08 PM

சோனியா அம்மையார் பழி வாங்கும் படலத்தில் இருக்கிறாரா?
தமிழினப் பிஞ்சுகளும்,பெரியவர்களும் பத்து முறை இடம் பெயர்ந்து 6000க்கும் மேற்பட்ட இரவு பகல் குண்டடியில் மாய்ந்தது போதாதா?
பிரபாகரனின் இரத்தம் குடித்தால் தான் பழிவாங்கும் படலம் முடியுமா?
தமிழர்களை ஏமாற்றியது போதும்.

January 13, 2009 at 10:20 PM

என்று நீங்கும் ஈழத்தமிழனுக்கு விமோசனம்

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger