தமிழருக்கே உரிய திருநாள்- தந்தை பெரியார்.

பொங்கல் என்பது- தமிழனுக்கு பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை.

இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை அவ்வாண்டு முதல் தடவையாக சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பது தான் பொருள் . இது தமிழனுக்கே (விவசாயிக்கே ) உரியதாகும்.

நமது மற்ற பண்டிக்கை என்பவை எல்லாம் ஆரிய மத சம்மந்தமான கதைகளை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும்.

இது விவசாயிக்கு உரிய பண்டிகை ஆனதினால்தான் – முதல்நாள் தானியம் சமைக்கும் பண்டிகையும், அடுத்தநாள் விவசாயிக்கு முக்கியமான- இன்றியமையாததுமான கால்நடை ஜீவன்களை பாராட்டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற நிகழ்ச்சியையும் ஒரு பண்டிகையாக ஏற்பாடு நிகழ்ச்சிகளுக்குப் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல் பண்டிகை என்று பெயர் வழங்கப்பட்டு வருகிறது.
- தந்தைப் பெரியார் ( விடுதலை 14.1.1972)

1 Response to தமிழருக்கே உரிய திருநாள்- தந்தை பெரியார்.

January 16, 2009 at 10:15 PM

பொங்கலை பார்ப்பனர்கள் விரும்பமாட்டார்கள் என்பது உண்மை ஆனால் பொங்கல் கொண்டாடும் அப்பாவித் தமிழர்களின்ஓட்டைஎப்படியாவதுஏமாற்றியாவது பெற்றுவிட சூழ்ச்சி செய்வார்கள்.

இதை உங்கள் பதிவில் இணைக்க...