அரசதிகாரம்+ஊழல்+முதலாளிதுவ சார்பு = இடது கம்யூனிஸ்ட் தோல்வி


கம்யுனிஸ்டுகள் ?! மக்களுக்காக போராடுவார்கள். தங்கள் உயிரை தியாகம் செய்வார்கள் என்பது அந்தகாலம். இப்போது கதையே வேறு. போராடும் மக்களின் உயிரை எடுப்பது இந்த காலம்.. நான் சொல்லுவது மேற்கு வங்க மாநிலத்தை ஆட்சி செய்யும் கம்யுனிஸ்டுகளை சொல்லுகிறேன். மக்கள்தான் வரலாறு. வரலாற்றை படைப்பவர்களே மக்கள் தான். நந்தி கிராம் மக்கள் இதை செய்திருக்கிறார்கள்.
நிலமல்லா உழவர்களுக்காக போராட வேண்டியவர்கள், இருகிற விளை நிலங்களை முதலாளிகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்து இருகிறார்கள். பாராளுமன்ற போலி ஜனநாயகத்தை தோலுரிக்க வேண்டியவர்கள் அங்கேயே குடியிருக்கிறார்கள். நோக்கம் ஒன்றே ஒன்று. பாராளுமன்ற அரசதிகாரம். அதற்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

நந்திகிராம் மக்கள் விளை நிலங்களை இழந்தவர்கள், போராடினார்கள்.
தடியடி-
துப்பாக்கிச்சூடு-
சிறைக்கொடுமை-
மக்கள் அஞ்சவில்லை. தொடர்ந்து போராடுகிறார்கள்.

உலகமே செஞ்சட்டைக்காரர்களின் தொழிலாளர் விரோத செயலை கண்டு திகைத்தது. நந்தி கிராம் வன்முறையில் 2007ஆம் ஆண்டு மார்சு மாதத்தில் போலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெரோசாபீவி மகன் கொல்லப்பட்டார்.

பெரோசாபீவி யார் ?

நந்திகிராம் சிறப்பு பொருளாதாரத்தை எதிர்த்து நடந்த போரட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் பெரோசாபீவி மகன் கொல்லப்பட்டார். மகனை இழந்த அவர் அஞ்சாமல் தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு எதிராக போராடி வருகிறார். எதிர்கட்சியாக செயல்பட்டு வரும் திரிணாமூல் காங்கிரஸ் இவரை அரவணைத்து இடைத் தேர்தலில் போட்டியிடச் செய்தது. மாபெரும் வெற்றியை அம்மக்கள் அவருக்கு அளித்துள்ளார்கள்.

பெரோசாபீவி 93,002 வாக்குகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பரமானந்த பாரதி 53,473 வாக்குகள்

சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் நந்திகிராம் மக்கள் வெற்றி பெறச் செய்திருகிறார்கள். வெற்றியை நந்திகிராம் வன்முறையில் கொல்லப்பட்டவர்களுக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார். நந்திகிராம் மக்களின் நலனை பாதுகாக்கவும் , உரிமைகளை மீட்டுத் தரவும் தாம் பாடுபடப் போவதாக பெரோசாபிவீ கூறியுள்ளார்.

No Response to "அரசதிகாரம்+ஊழல்+முதலாளிதுவ சார்பு = இடது கம்யூனிஸ்ட் தோல்வி"

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger