அடுத்த வீட்டில் இழவு விழுந்தால் நமக்கென்ன?

பக்கத்து வீட்டில்
நடைபெறும் அநீதியை
கேட்காதே.
அது
அவர்கள் பிரச்சனை.
எட்டுலகத்திற்கு அப்பால் நடக்கும்
அநீதியை
மேடை போட்டு முழங்கு.
மனித உரிமை மீறல் எனச்சொல்.

பக்கத்து வீட்டில்
நடக்கும் அநீதியை கேட்டால்
பயங்கரவாதம் எனச்சொல்.

கேட்கும் கூக்குரலை
கேட்காதது போல நட..
அதை
கேட்டால்…
பார்த்தால்…
கண்ணீர்விட்டால்…
பிரிவினைவாதி முத்திரை குத்து

இருக்கவே இருக்கிறது
வார்த்தைகள்

பயங்கரவாதி
தீவிரவாதி

அடுத்த வீட்டில் இழவு விழுந்தால் நமக்கென்ன?

மனித உரிமைப் பற்றி பேச
அத்துமீறல் எழுத எவ்வளவோ இருக்கிறது ?

1 Response to அடுத்த வீட்டில் இழவு விழுந்தால் நமக்கென்ன?

January 5, 2009 at 12:44 AM

நீங்கள் சொல்லுவது சரிதான்.உலகளாவிய மனித உரிமை பேசும் நாம் நமது பக்கத்து வீட்டில் மீறல் நடந்தால் கண்டு கொள்வது இல்லை தான்.அதற்காக வேறு இடங்களில் நடை பேஉம் மனித உரிமை மீறல்களை கொச்சை படுத்தி இருக்க வேண்டியது இல்லை(உணர்வு பூர்வமாக குரல் கொடுப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்).....இங்கே நாம் குரல் கொடுக்காமல் இருப்பது ...மனித உரிமை மீறல்களை அனுமதிப்பது குறித்து மட்டும் எழுதி இருக்கலாம் ..இரண்டிற்கும் முடிச்சி போட்டதால் உங்கள் கருத்தின் வெளிப்படுத்துதலை தவற விட்டீர்கள்.

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger