போலியோ சொட்டு மருந்து -வதந்தி பரப்பும் ஊடகங்களின் மீது நடவடிக்கை- உடனடித் தேவை.

கடந்த ஆண்டு திசம்பர் 21ம் தேதி தமிழகம் முழுவதும் இளம்பிள்ளை வாதம் ஒழிப்பு சொட்டுமருந்து 5வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போடப்பட்டது. இதில் சில குழந்தைகள் இறந்து விட்டதாக  ஒரு தொலைக்காட்சி திரும்ப திரும்ப செய்தியை ஒளிபரப்பியது.

செய்தியின் தாகம்

பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை கள ஊழியர்களுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் பெறும் பிண்ணடைவு ஏற்படது.

சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினர் மருத்துவமணையை முற்றுகை இட்டனர். கிராமங்களில் மாட்டு வண்டி, டிராக்டர் வண்டிகளில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சுகாதார நிலையங்களுக்கு சென்றனர்.

14 ஆண்டுகாலமாக நடைபெறும் இத்திட்டத்தில் தவறான செய்தியால் சுமார் 4.5 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளவில்லை. தமிழகத்தில் கடந்த நான்காண்டுகாலமாக ஒரு குழந்தைக் கூட இந் நோயினால் பாதிக்கப்படவில்லை. நோயொழிகும் நிலையில் தமிழகம் உள்ளது, ஆனால் பிகார் உ.பி போன்ற சில வட மாநிலங்களில் இந்நோய் காணப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே இச் சொட்டுமருந்து போடும் நிலை தொடருகிறது.

குறிப்பாக இச்சொட்டுமருந்து போடுவதால் எந்த பின்விளைவுகளும் ஏற்படுவதில்லை. அரசுதரப்பு மருத்துவமனணைகளில் தான் தொடர் குளிர் நிலையில் (Cold Chain Maintain) சரியாக முறையாக கடைப் பிடிக்கப்படுகிறது.

இளம்பிள்ளை வாதம் ஒழிப்பு திட்டத்தின் பயனாக  இளம்பிள்ளை வாத உடல் ஊனமுள்ள குழந்தைகளை இப்போதெல்லாம் காணமுடியாது.

அப்பட்டமான மட்டரகமான அரசியல் நோக்கத்தின் வெளிப்பாடே இது. ஓட்டு பொறுக்கும் அரசியல், மலிவான நோக்கமற்ற கொள்கை, நாற்காலி கனவு மெய்ப்பட என்ன வேண்டுமானாலும் செய்யலாம், செய்தியாகலாம் என்பது தமிழகத்தின் வருங்கால சந்ததியை இருளில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

இதனை கருத்தில் கொண்டு நடுவண் நலவாழ்வு அமைச்சர் மரு. அன்புமணி இராமதாசு அவர்கள் சென்னையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் வதந்தி பரப்பும் ஊடகங்களின் மீது நடவடிக்கையை வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை, சமூக மேம்பாடு கருத்தில் கொண்டே செயல்பட வேண்டும்.

அப்பட்டமான மட்டரகமான செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் மீது கடும் நடவடிக்கையை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

1 Response to போலியோ சொட்டு மருந்து -வதந்தி பரப்பும் ஊடகங்களின் மீது நடவடிக்கை- உடனடித் தேவை.

January 9, 2009 at 4:02 AM

//அப்பட்டமான மட்டரகமான செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் மீது கடும் நடவடிக்கையை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.//

கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளின் உயிருடன் விளையாடும் காட்டுமிராண்டிகள் இந்த ஊடகத்துறையினர்.
குறைந்தபட்சம் அந்த துறையின் இயக்குனரை கலந்து ஆலோசித்து விட்டாவது இது போன்ற செய்திகளை வெளியிட வேண்டும்.

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger