“அன்புள்ள” புஷ் அவர்களுக்கு,

ஈராக் செருப்பு வீச்சு நிகழ்வுக்குப் உங்களுக்கு கடிதமொன்று எழுத நினைத்து காலம் கழித்து எழுதுகிறேன். ஊடகங்கள் இப்போதெல்லாம் உடனுக்குடன் விரும்பியோ விரும்பாமலோ அனைத்து காட்சிகளையும் காட்டிவிடுகின்றன. தொலைக்காட்சியில் உங்கள் மீது வீசப்பட்ட செருப்புவீச்சு உலகமெங்கும் பேரதிர்வை உண்டாகியது. [சதாம் தூக்கிலிடப்பட காட்சியும் இதே அதிர்வைத் தான் உண்டாக்கியது]. ஆனால் புஷ் அவர்களே உங்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த செருப்பு வீச்சை நியாயப்படுத்தி பேசவரவில்லை. செருப்பு வீச்சு செய்த செய்தியாசிரியர் கதாநாயக முத்திரை பெற்றுவிட்டார். அளப்பரிய துணிவுள்ள நாயகனாக சித்தரிகப்படுகிறார். பல கோடிகள் பரிசை அச்செருப்பு பெற்றுள்ளது. 20 வயதுக்குட்பட பல பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள முன் வந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இது எதை வெளிப்படுத்துகிறது. புஷ் மீதான தாக்குதலாக உலகம் இதை பார்க்கவில்லை. அமெரிக்க வல்லரசின் மீதான தாக்குதலாக பாவித்தே இதை காண்கிண்றனர். உலகத்தில் எங்கெல்லாம் அநீதகள் [!?] நிகழ்கிறதோ அங்கெல்லாம் உங்கள் அமெரிக்க போலிஸ்காரன் தான் நுழைந்து நீதியை நிலை நாட்ட வேண்டும். உங்கள் நாட்டாமை தனத்தின் விளைவுகளை பல நாடுகளில் பார்த்துள்ளோம். இப்போதைக்கு ஈராக்கில்,உங்களிடம் இல்லாத உலகை அச்சுறுத்தும் பல நவீன ஆயுதங்களை கைப்பற்றி காத்துள்ளீர்.

ஒன்று தெரியுமா புஷ் அவர்களே அங்கு வீசப்பட்ட குண்டுகளின் செலவில் அந்த பாலை பூமியையே தேனாறு ஓடும் சொர்கமாக்கியிருக்கலாம். உங்கள் நாட்டில் நிகழ்ந்துள்ள பொருளாதாரச்சரிவை சரி செய்திருக்கலாம். அமெரிக்காவில் உணவுவிலை உயர்ந்தால் இந்தியர்கள் அதிக உணவு [?!] சாப்பிடுவதால் வந்த வினை என்று கூறிய மாபெரும் பொருளாதார வல்லுநர் அமெரிக்க வல்லரசின் அதிபர்தானே நீங்கள். ‘காத்ரினா புயல் ‘ தாக்கிய போது வல்லரசு அமெரிக்கா பட்ட பாட்டை பார்த்தோம். உங்கள் மூத்தோர் சீனியர் புஷ், கிளின்டன், ரீகன் போன்ரோர் ஏகாதிபத்தின் நாயகர்களாக காட்டிய விதத்தை மூன்றாம் உலக நாடுகள், வளரும் நாடுகள் மறக்குமா ?. வன்முறையை உலகமெங்கும் வியாபாரம் செய்யும் தொழிலைத் தானே அமெரிக்க வல்லரசு செய்துவருகிறது என்பதை இக்கடிதம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

பராக் ஒபாமா அடுத்த அதிபர் ஆகிறார். ஊடகங்கள் புதிய ஓளியாக ஒபாமா திகழ்வார் என்று செய்தியை பரவலாக சொல்லப்பட்டுகிறது. உங்களுக்கும் ஒபாமாவுக்கும் உள்ள வேறுபாடு ஒன்று மட்டுமே நீங்கள் சிவப்பு அவர் கருப்ப மட்டுமே. ஆனால் உண்மைமுகம் அமெரிக்க வல்லாதிக்க குணத்தின் முகமுடியே நீங்கள். தண்ணீர் பஞ்சம் உள்ள குக்கிராமத்திலும் உங்கள் கோக்கும் பெப்சியும் தங்கு தடையின்றி கிடைப்பதே ஏகாதிபத்தியத்தின் புனித வேலையலல்லவா ?

மூன்றாம் உலக நாடுகள் உங்களின் கையாலாக இருக்கும் வரையில் அந்நாட்டின் இறையான்மையை போற்றுவீர். வல்லாதிக்க சுரண்டலை எதிர்த்தால் … அதை நசுக்க கியுபா மாதிரி மற்றும் ஈராக் மாதிரியான புனித போரை துவங்குவீர் என்பதை அறிவேன்.

எங்கள் ஊர்களில் பெரிய போக்கிலிகளைஎதிர்க்க மண் தூற்றுவார்கள். அது போலத்தான் செருப்பு வீச்சு நிகழ்வும்.

No Response to "“அன்புள்ள” புஷ் அவர்களுக்கு,"

இதை உங்கள் பதிவில் இணைக்க...