கருப்புக் கறைநான்
விளகில் வீற்றிருக்கும்
அக்கினியின் கர்ப்பத்தில்
பூத்த புகையல்ல…
பூமியின் கையெழுத்தாய்
ஆகாயத்தில் பொறிக்கப்பட்ட
உண்மை உழைப்பின்
சூடான வரலாறு.

என்னுடைய ‘இன்று’
சுருங்கி ஒடுங்கி
இருக்கலாம்…
ஆனால், நாளை
வரவிருக்கும்
உழைப்பின் வெற்றியால்
உயர்த்தப்படும்
புகைக்கொடி நான்.
பசித்த வயிற்றில்
நான் வளருகிறேன்… தீக்
கண்ணீராக இல்லை…
கனலாக வெளி வருகிறேன்!

காலனின் காலம்
வந்த பின்பு
எல்லாம் மானங்களும்
இல்லாமல் போகும்.

நான்
கருப்புக் கறையில்லை
காலக் கணக்கன்…!
என்னைக் கண்டு
வெள்ளை ஆடைகள்
அச்சப்படுகின்றன.

-ஒரு துளி பூமி! ஒரு துளி வானம் !!
என்ற வி.பி.சிங் அவர்களின்கவிதை தொகுப்பு நூலில்

No Response to "கருப்புக் கறை"

இதை உங்கள் பதிவில் இணைக்க...