நீர் வண்ண ஓவிய தோற்ற விளைவு- போட்டோசாப்


படக்காட்சிகளை ஓவியத்தில் காட்டுவதே ஒரு விதக் கலை. அதுவும் செய்தி ஊடகம்,  நாளிதழ்களில்  நீர் வண்ண ஓவியங்கள் தனியிடத்தை பெறுகிறது.
இவ்விளைவுகளை போட்டோசாப் சிறப்பாக செய்து கொடுக்கிறது.
நான் ஓவியத்தோற்ற விளைவுகளை மூன்று நிலைகளிலேயே விளக்க முயற்ச்சித்துள்ளேன்.
தோவையான படத்தை திறந்து கொள்ளுங்கள்.



கருப்பு வெள்ளையாக மாற்ற..
இதை கருப்பு வெள்ளையில் கருப்பு வண்ண தோற்றத்தில் உருவாக்கவேண்டும்.
படத்தை திறந்து இமேஜ்—பிரைட் காண்ட்ராஸ்ட் தேற்வுக்கு சென்று பிரைட்டை கூட்டி காண்ட்ஸ்ராஸ்ட்டை அதிகப்படுதுங்கள். வண்ணம்ச் செறிவு அதிகமாகுவதை காணுவீர்கள்.
பிறகு இமேஜ்—திரஷ்ஷோல்ட் சென்று விருப்பபடி தேர்வு செய்து கொள்ளுங்கள். படம் கருப்பு வெள்ளையில் தோன்றி இருக்கும்.
படம்1.
படம் திறந்த லேயேருக்கு மேல் படத்தை புதிய லேயரை திறந்து கொள்ளுங்கள்.
அதற்கு லேயர் விண்டோவில் வட்ட மிட்ட ஐக்கானை சொடுக்க திறக்கும்.
சிப்ட் + கண்ட்ர்ரொல் + என் (N)

படம்.2.
படத்தில் உள்ளபடி நீர் வண்ண தோற்றம் உருவாக்க வண்ணைத்தை பூசுங்கள்.
படம்.3.
வண்ணப்பூச்சு செய்து விட்டப் பிறகு படத்தில் காட்டியப்படி மாஸ்க் லேயர் உருவாக்குங்கள்.
படம்.4.
இந்நிலையில் கவனமாக செய்ய வேண்டிய இடம்.
பேக் கிரவுண் படத்தை அதாவது கருப்பு வெள்ளை படத்தை அனைத்தையும் தேர்வு செய்து காப்பி செய்யவும்.
அனைத்தும் தேர்வு செய்ய.. கண்ட்ரோல் + ஏ 
அதை நகல் எடுக்கா... கண்ட்ரோல் + சி
பிறகு லேயரில் உள்ள மாஸ்கில் அல்டர் கீயை அழுத்தியப்படி நகலை பேஸ்டு செய்யுங்கள்.
அடுத்தப்பணி அதை நெகட்டீவ் போல கொண்டு வரவேண்டும்.
இமேஜ்—இன்வெர்ட் தேர்வு செய்ய படம் ( மாஸ்கில் ஒட்டியுள்ளபடம்) நெகட்டிவ் படத்தில் இருப்பது
போல தோன்றும்.
இப்போது வண்ணம் தீட்டியுள்ள லேயரை கிளிக் செய்யுங்கள். முடிந்தது.

படம்.5.
இப்போது பில்டருக்கு சென்று ஆடிஸ்டிக்--- ஸ்மெட்ஜ் ஸ்டிக் தேற்வு செய்ய கேன்வாஸ் போன்ற தேற்வு வரும். இனி உங்கள் கலை விருப்பப்படி தேர்வு செய்யுங்கள்.
 மாதிரிப்படங்கள் இம்முறையில் என்னால் உருவக்கப்பட்டது. படம் பெரிதாக தெரிய கிளிக் செய்யுங்கள்.
நன்றி.
பின்னூட்டம் இட்டால் இன்னும் மகிழ்வேன்.

8 Response to நீர் வண்ண ஓவிய தோற்ற விளைவு- போட்டோசாப்

Anonymous
March 31, 2010 at 10:16 PM

இவ்வளவு நன்றாக சொல்லிக்கொடுக்கிறீர்களே. தனியா ஒரு கணினி வலைப்பூ ஆரம்பித்து டாப் டென்னில் வந்துவிடுங்கள்.

April 1, 2010 at 7:52 AM

@shirdi.saidasan@gmail.com

நன்றி. நண்பரே. உங்கள் நம்பிக்கை துளிர்விடும் கருத்துக்கு நன்றி.

April 3, 2010 at 4:41 AM

வணக்கம் சார்,

உங்கள் பாடத்திற்கு மிக்க நன்றீ. என்னால் ஆல்ட்டில் ப்ரஸ் பண்ணி நகலை பேஸ்ட் செய்ய முடியவில்லை. நகல் தனி லேயராக மாறி விடுகிறது. லேயர் மாஸ்க் மேல் வரவில்லை. கொஞ்சம் சொல்லுங்கள்.

இன்னொரு வேண்டுகோள்
தூய தமிழில் நீங்கள் நடத்தும் போது ப்ராக்கட்டில் இங்கிலீஷில் டூலில் பெயரையும் குறிப்பிட்டால் மிக நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

நன்றி

April 3, 2010 at 6:16 AM

தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

April 3, 2010 at 8:07 PM

@afrine

/இந்நிலையில் கவனமாக செய்ய வேண்டிய இடம்.
பேக் கிரவுண் படத்தை அதாவது கருப்பு வெள்ளை படத்தை அனைத்தையும் தேர்வு செய்து காப்பி செய்யவும்.
அனைத்தும் தேர்வு செய்ய.. கண்ட்ரோல் + ஏ
அதை நகல் எடுக்கா... கண்ட்ரோல் + சி
பிறகு லேயரில் உள்ள மாஸ்கில் அல்டர் கீயை அழுத்தியப்படி நகலை பேஸ்டு செய்யுங்கள்.
அடுத்தப்பணி அதை நெகட்டீவ் போல கொண்டு வரவேண்டும்.
இமேஜ்—இன்வெர்ட் தேர்வு செய்ய படம் ( மாஸ்கில் ஒட்டியுள்ளபடம்) நெகட்டிவ் படத்தில் இருப்பது/
அதாவது மாஸ்கில் ஆல்டர் கீயை அழுத்தி கிளிக் செய்யுங்கள். பிறகு பேஸ்டு செய்யவும். நன்றி அப்ரின்.

April 3, 2010 at 10:26 PM

@ராஜ நடராஜன்

நன்றி. நடராஜன். தொடர்ந்து பதிவுக்கு வருகைத் தாருங்கள்.

April 16, 2010 at 10:36 AM

அருமையான பாடங்களின் விளக்கம்... தயவு செய்து பெயர், புகழ் மட்டுமே போதுமானதாக நினைக்க வேண்டாம்... உங்கள் பாக்கெட்டையும் பாருங்கள்...
சக பயணி... ;-)

April 16, 2010 at 10:55 AM

@Sugumarje

உண்மையைச் சொன்னீர்கள். சுகுமார்ஜி. தூக்கம் கெடுகிறது அதைதான் முக்கியமாக கருதுகிறேன். நன்றி.

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger