பல ஆண்டுகளாக திருட்டு டிவிடியால் தமிழ் திரையுலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரச்சனைகள் கிளம்புவது வழக்கம். இப்போது ஜக்குபாய் திரைப்படம் வெளியாகும் முன்பே இணையத்தில் வெளியாகியது. திருட்டு டிவிடியும் வெளியானதாக தயாரிப்பாளர் ராடான் நிர்வாக ராதிகா குற்றச்சாட்டு வெளியிட்டார். கூடவே முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் முன்னணியில் கண்ணீரை வெளியிட்டார். தன்னை இதைவிட “நடுத்தெருவில் சுட்டுக் கொன்று இருக்கலாம்” என்று கதறியுள்ளார்.
"ரூ.15 கோடி சொத்தைத் திருடி விட்டார்கள் என்பதைவிட எங்களைக் கொன்றுவிட்டார்கள்' என்பதே உண்மை என்று படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறிய அதே மேடையில், நடிகர் ரஜினிகாந்த் ஜக்குபாய் திரைப்படத்தில் தான் நடிக்க முடியாததைச் சொல்லும்போது, "ரவிக்குமார் எனக்கு வாசபி என்ற பிரெஞ்சு படத்தின் டிவிடியைக் கொடுத்தார். அந்தக் கதை நன்றாக இருந்தது. சூப்பர் கதை. ஜக்குபாய் படம் நன்றாக ஓடும். ராதிகா கவலைப்பட வேண்டியதில்லை' என்று கூறியிருக்கிறார்.
கமலோ தேசிய பற்றோடு ஒரு படி மேலே போய் திருட்டு டிவிடி பணம் தீவிரவாத்த்திற்கு செல்வதாக கூறியுள்ளார். இவர்கள் கதையை ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு “கட்டிங், புட்டிங், குட்டிங்கோடு ”டிஸ்கஸ் செய்வார்கள். முடிந்தால் கதை லீக்காகிவிடும் என்று லண்டன், அமெரிக்கா என்று வெளிநாடுகளுக்குப் பறப்பார்கள்.
இவர்களின் கதையின் அடித்தளம் 4 பாட்டு, டிஜிட்டல் டெக், பீட்டர் ஹெயின்ச் சண்டைகாட்சிகள் ( மேட்ரிக்ஸ் படத்தில் இருந்து திருடப்பட்டது போல இருக்கலாம்).
தொடையை காட்ட எவ்வளவு ஆடையை குறைக்க முடியுமோ அதை செய்ய ஸ்டார் நாயகிகள் ரெடியாக இருக்கிறார்கள். பின்னால் ஆடும் குழு நடனக் குழுவினர் கூட முழு ஆடையில் தான் ஆடுவார்கள். நமது நாயகி மர்லின் மன்றோ ஸ்டெயிலில் பாவாடை பறக்க இன்னும் ஆடிக்கொண்டு கலைப்பணியை செய்ய வைப்பார்கள் முன்னணி இயக்குநர்கள்.
படம் ரிலிசுக்கு முன்னால் ஏதாவது தனியார் தொலைக்காட்சியில் நேரலையில் தோன்றி திரைப்பட ஆக்ககத்தில் தங்களின் வியர்வையின் வேதனையை தெரிவிப்பார்கள். கனவு நாயகிகள் அது வந்து வந்து என் இனர்ஜிகளை கொண்டு வந்த இயக்குனரை தங்லீசில் பேசுவார்கள். இதற்காக ரோம்ப ரொம்ப ஹோம் வொர்க் செய்ததாக நாயக நாயகிகள் கூறுவார்கள். நாயகர்கள் 6 பேக் காட்டுவார்கள். ஏதாவது சேனல் இப்படத்தை டிரைலரைப் போட்டு போட்டு சூடேற்றுவார்கள்.
இதுதான் நமது சினிமா. விதிவிலக்காக பசங்க, 9 ரூபாய் நோட்டு, அழகி போன்றப் படங்கள் தலையை காட்டும். இதையும் மக்கள் பார்க்கத்தான் செய்தார்கள்.
ஆனால் நட்சத்திர இயக்குனர்கள் சொல்வது , மக்கள் பார்க்கிறார்கள் ரசிக்கிறார்கள் என்று கூறுவார்கள்.
ரஜினி ஓர் உண்மையை கூறியுள்ளார் அவரை பாராட்டலாம். ஜக்குபாய் படம் எங்கே சுட்டது? வாசபி என்ற பிரஞ்சுபடம். அந்த டிவிடியை தான் உல்டா பண்ணி படம் எடுத்து இருக்கிறார்கள். இது திருட்டுத் தொழில் இல்லையா? கலைச் செல்வி ராதிகா என்ன பதில் சொல்லுவார்.
இதற்காக நாம் திருட்டு டிவிடி நுட்பத்தை ஆதரிக்கவில்லை. ஸ்டார் வேல்யு உள்ள நுட்புனர்கள் மட்டுமே திரையுலகம் இராஜலோக வசதியை தருகிறது. மற்ற இரண்டாம், மூன்றாம் நுட்புனர்கள் படியேறி ஏறிதான் ஊதியம் பெற வேண்டும்.
இப்படிப் பட்ட வியர்வையை மதிக்காத நட்சத்திர தமிழ்சினிமா, தமிழ் மண்ணில் காலூன்றாத தமிழ் சினிமா,என்னதான் உயர் கணினி நுட்ப காட்சிகளை படமாக்கினாலும் கசியவே செய்யும்...
திருட்டு டிவிடி மட்டுமல்ல... கதைக்கூட திருட்டுதான்... இவர்களை யார் சுடுவது?
4 Response to இவர்கள் திருடினால் அது படைப்பு....
இவனுகள் புலம்புறதுக்கு நாம காது கொடுக்கக் கூடாது. என்ன பொறுத்தவரை ஜக்குபாயை வெளியிட்டவன பாராட்டணும். தமிழ்நாட்டில உள்ள ஏழைகளிடம் பணத்தை உருவி மலையாளிகளுக்கும் வடநாட்டவங்களுக்கும் எவ்ளோ காலத்துக்கு தான் கொடுப்பாங்கள்? எல்லா கிரோயின்களும் வேறு மாநிலத்தவங்க. நம்ப பணத்த எவளுக்கோ சுட்டுக் கொடுக்கிறாங்க. அதுவும் கொஞ்சமில்லை கோடிக்கணக்க. ஆமா இவங்க என்னதான் கஸ்டப்படுறாங்க கோடிக்கணக்க சம்பளம் வாங்கிறதுக்கு? சித்தள் வேல இல்ல களபுடுங்கிற வேலய விட றொம்ப கஸ்டமோ?
தமிழ்நாட்டுல சிந்திக்கிற கதைக்கு மாதக்கணக்க கிரோயின தேடுறதா கதைவிடுவாங்க. அதெப்படி தமிழ்நாட்டு கிராமத்தாளுக்கு கேரளாவிலேர்ந்தும் வடநாட்டிலேர்ந்தும் வெள்ளத்தோல் கிரோயின் தேவப்படுது?
நாலு படத்துல ஏய்... ன்னு சவுண்டு விட்ட அடுத்த முதலமச்சர் ரேஞ்சுக்கு போயிடுறாங்க.. ஏழசனங்கள் மனுக்கொடுக்கணும் என்னாலும் குஸ்பு நமிதா ஊடாத்தான் முதலமச்சர் கிட்ட கொடுக்கிற நிலமயில நாடு இருக்கு.
காலகாலமா ஏழய்ங்க வயித்தில அடிக்கிற ரவிக்குமாருக்கு ஒருக்கா வயித்தில அடிச்ச என்ன குடியா முழுகிப்போகும். ?
நம்ம புள்ளைகளுக்கு தொழில் தெரியாது நைனா...
காப்பி அடிக்க தான் தெரியும்...
தனது சீரியல் மூலம் மக்களை அழ வைத்துக்கொண்டிருக்கும்
ராதிகா இந்த காரணத்தால் அழுதது பரிதாபகரமானது .
யாருக்குமே தன்னுடைய உழைப்பு திருடபட்டால் வருத்தம் வரவே செய்யும்.
இது இங்குமட்டுமல்ல .உலகம் பூராவும் உள்ள பிரச்சனைதான்.
ஆங்கில படம் X man origins 2009 மே மாதம் ரிலீஸ் என்றால் ஒரு
மாதம் முன்னதாகவே ஏப்ரலில் இணையத்தில் வெளியாகி விட்டது.
அறிவியல் வளர்ச்சியை தடுக்க முடியாது.
ஆனால் முதலில் DVD வெளிவந்து வெற்றிபெற்று பிறகு தியேட்டரில்
வெளியாகி சக்கைபோடு போட்டுக கண்டிருக்கிற படம் Paranormal Activity (2009)
//முழுக்க முழுக்க.. ஒரேயொரு வீடியோ கேமரா. இரண்டே கேரக்டர்கள்! இன்னும் இரண்டு கேரக்டர்கள்.. வெறும் இரண்டு சீன் களுக்கு மட்டும் வந்து போக…, படம்… ரணகளம்.தற்போதைய.. “டாக் ஆஃப் அமெரிக்கா”, இந்தப் படம்தான். வெறும் $15,000 -ல் ஒரு ஹாலிவுட் திரைப்படம் சாத்தியம் என்பதை இயக்குனர் Oren Peli நிரூபித்துள்ளார்
படம் Saw VI-ஐ கீழே தள்ளிவிட்டு $60 மில்லியன் டாலரை ($15,000 பட்ஜெட்) லபக்கியுள்ளது. நன்றி .-ஹாலிவுட் பாலா //
முன்பு ஒருமுறை திரை பட துறைக்கு உதவி செய்ய கருணாநிதி கேளிக்கை வரியை குறைத்தார்.ஆனால் தயாரிப்பாளர்கள் அனைத்து ஊழியர்களுக்கும் சம பலன் கொடுக்காமல் லட்சங்களில் இருந்த
நடிகர்களின் சம்பளத்தை கோடிகளககினர்
வீடியோவில் பார்க்க விரும்புபவன் வீடியோவில்தான் பார்ப்பான் .
காரணம் டிக்கெட் விலை மிக அதிகம் .ஒரு குடும்பம் சினிமா சென்றுவர
ரூ.500-1000 ஆகிறது .இன்றஈக்கு உள்ள விலைவாசியில் பேரும்பாலனோர்
இவ்வளவு செலவு செய்வது கடினம்.
சரக்கு இருந்தால் எந்த படமும் கண்டிப்பாக ஓடும்.இல்லாவிட்டால் ரஜினி படமாக இருந்தாலும் படுத்துவிடும் .
ஆரம்பத்தில் சாபமாக இருந்த டிவி இப்போது வரமானதை போல இதையும் மாற்றலாம்.
CD Rs.20/- ,DVD Rs.50/- Blue Ray Rs.200/- என்று ரிலீஸ் செய்துவிட்டால் பிரச்சனை தீர்ந்தது.
இன்னும் நிறைய சொல்லலாம்.
தமிழ் நாட்டில் பல சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன.இதனால் வேலையிழந்த தொழிலாளர்களைப் பற்றி இவர்கள் என்றேனும் நினைத்ததுண்டா?தி.மு.க என்பது திரைப்பட முன்னேற்ற கழகமாக மாறி வருகிறது
Post a Comment