என் வீட்டில் சூரிய கிரகணம்...படங்கள்....

அத்துனை ஊடகங்களும் 102 ஆண்டுகளுக்கு ஒரு முறை த் தோன்றும் கிரகணம் என்று செய்திகள் பரப்பின. வானவியல் அறிஞர்கள் இராமேஸ்வரம் கன்னியாகுமரிப் பகுதிகளில் குவிந்தனர். சென்னையில் பிர்லா கோளரங்கில் சென்னைவாசிகள் குவிந்தனர். ஆன்மீகவாதிகள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கோவில்களில் பூசை தள்ளிவைக்கப்பட்டு கோவிலே மூடப்பட்டு, தமிழகத்தில் கிரகணம் தோன்றிய நேரத்தில் உணவை தயாரிப்பதும் உண்பதும் தள்ளிவைக்கப்பட்டது.

என் வீட்டிலோ வேறு பொங்கலுக்கு சிறப்பான உணவு தயாரிக்கப்பட்டு வந்தது. தொலைக்காட்சி ஊடகங்கங்களில் கிரகணம் ஆரம்பித்துவிட்டதாக மிரட்டியது.

கிரகணத்தை வெறும் கண்களால் மட்டும் பார்க்கக் கூடாது , ஆனால் என் தந்தையாருக்கு ஒரு யோசனை . எக்ஸ் ரே தாளை நான்காக மடித்து பார்த்தார் பிரமாதம். வீட்டிலேயே எல்லோரும் பார்த்தோம். என் தம்பியோ மடிக்கப்பட்ட எக்ஸ் ரே தாளை பில்டர் போல வைத்து டிஜிட்டல் கேமிராவில் பதிவு செய்தான். அருமை. வீட்டிலேயே மக்கள் அறிவியல்...

இன்னொரு அதிசயமும் நிகழ்ந்தது.. அது.

வீட்டில் இருந்த மரங்களின் ஊடே வந்த நிழல்களில் கிரகனத் தோற்றம். ஒன்றல்ல பல நூறு வடிவத்தோற்றங்கள். இப்படங்கள் தான் நீங்கள் பார்ப்பது...

உணவு உண்டபடியே கங்கன கிரகணத்தை பார்த்தோம். அடுத்த நிகழ்வு சில நூற்றாண்டுகள் ஆகலாம்.

வீட்டிலேயே விஞ்ஞானக் கூடம்...





No Response to "என் வீட்டில் சூரிய கிரகணம்...படங்கள்...."

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger