அறிவியல், இயற்கை, கண்டுபிடிப்புகள், மருத்துவம், உயிரியல், விலங்கியல், மருத்துவம் என்ற விஞ்ஞான சிகரங்களின் எல்லைகளை டிஸ்கவரிச் சேனல் ஆங்கிலத்தில் வழங்கிவந்தது. காட்டுவிலங்கிகளின் அதிசய வாழ்க்கையை படக்காட்சியை மட்டும் பார்த்து அதிசயித்த தமிழுலகம் இப்போது தன் மொழியிலேயே இந் நிகழ்சிக்களை பார்க்கிறது. டிஸ்கவரி சேனல் தமிழில் மொழிமாற்றம் செய்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி செய்து வருகிறது. நான் சென்ற வீடுகளில் எல்லாம் இச் சேனல் ஆர்வத்தோடு பார்ப்பதாக கூறினார்கள். மொழியாக்கம் தமிழ் மொழியில் செய்யும் போது கல்வி, சமூக நிலையில் கீழ் உள்ளவர்களின் வீடுகளில் எல்லாம் இவ்வூடகம் செல்கிறது. சினிமாவை பற்றியே உலகமாக இருந்த தொலைக்காட்சி ஊடகம் இப்போது விஞ்ஞானத்தின் கதவுகளை திறந்து விட்டுள்ளது. இப்போது கூட இப்பதிவை எழுதிக்கொண்டு இருக்கும் போது கொரியா நாட்டில் அதிவேக தொடர்வண்டி தடத்தை கட்டியமைக்கப்பட்டது பற்றிய நிகழ்ச்சி. அதாவது 70 சதவீத மலைகளே உள்ள கொரியாவில் மலைகளை குடைந்து தொடர்வண்டி பாதை அமைப்பது .... என்ன சிறப்பு தெரியுமா? முன்பு ஊமைப்போல சில வார்த்தைகள் மட்டுமே புரிந்து படம் பார்த்த அனுபவத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
என் துனைவியார் மகன்கள் எல்லோரும் சினிமா சேனல்களுக்கு தாவாமல் பார்ப்பது அடிக்கடி நிகழ்கிறது. தாய்த்தமிழ் மொழியில் கிடைக்கும் அறிவியல் மக்களின் மூளையில் உரிமையோடு சென்று உட்கார்ந்து கொள்கிறது.
உலங்குவானூர்திகளின் தர வரிசையை சொல்லும் ஒரு நிழ்ச்சி (Countdown of Helicopters ) ஓட்டுநர்களுக்கு புரியவேண்டிய நிகழ்ச்சி ஒட்டு மொத்த குடும்பமே நிகழ்ச்சியை பார்க்க வைத்து உள்ளது.
இன்னொரு நிகழ்ச்சி இயற்கைக்கும் மனிதனுக்கும் (Man vs Wild )நடக்கும் சாகச நிகழ்ச்சியை காட்டும் காண்பொலியை தமிழில் பார்க்கும் போது மெய்சிலிர்கிறது. ஆனால் முன்பு அப்படியில்லை வெறுமனே சர்க்கஸ் பார்ப்பது போல இருக்கும். இதை உடைத்து இருக்கிறது டிஸ்கவரி. ஆம் வியாபாரம் நோக்கில் இருந்தால் கூட தாய் மொழியில் தொலைக்காட்சி ஊடகம் நிகழ்சிகளை தரும் போது பெறும் பெரும்பான்மை மக்களைச் சென்று அடைகிறது என்பது தான் உண்மை.
அனைத்து துறைகளும் தமிழில் கிடைத்தால் உழைக்கும் மக்களே பயன் பெறுவர். இப்போது டிஸ்கவரி தொலைக்காட்சி ஊடகத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
4 Response to தமிழ் பேசும் டிஸ்கவரி சேனல்.
இதை எந்த நாட்டிலும் இருந்து பெற
முடியுமா?
நான் இங்கிருந்து இதைப் பார்க்க
எந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பை அணுகவேண்டும்.
கருத்துக்கு நன்றி யோகன்..உள்ளூர் கேபிள் டீவி ஆபரேட்டர்கள் இதை தமிழ்நாட்டில் தருகிறார்கள். டிஸ்கவரி வலைதளத்துக்கு சென்று பார்த்தால் இதற்கு விடை கிடைக்கலாம்
சூப்பர்..நிறைய பேர் இதை பார்த்து பயனுற முடியும். (ஏங்க..வேற எதாவது படம் போட்டுருக்கலாம் :) நிறைய பேரு பயந்துட போறாங்க).
மெகா சீரியல் பார்க்காமல் இந்த சேனல் பார்த்தால் நல்லது.
உங்கள் blog மிகவும் நன்றாக உள்ளது . உங்கள் தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது. தங்கள் சேவையை மேம்மேலும் தொடர வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி
Post a Comment