புத்திசாலியான மோசமான கொசுக்கள்.









இக் கொசுவின் பெயர் தான் ஏடீஸ். இவர் டெங்கு,சிக்குன்குனியா போன்ற நோய்களை பரப்புவார். இவறின் குணங்கள் வித்தியாசமானது. மற்ற வகை கொசுக்களிடமிருந்து வேறுபட்டது.

இக்கொசுக்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் பழக்கம் கொண்டவை.

நான் 2005ம் ஆண்டில் எடுத்த படத்தை கொண்டு விளக்க முயல்கிறேன். காலை வேலையில் எதிர்வீட்டு பையனுடன் பேசிக்கொண்டு டிஜிட்டல் கேமிராவில் படம் எடுத்துக் கொண்டு இருந்த போது ( படம் 1) நேரம் 7.55 மணித்துளிகள். படத்தில் பதிவாகியுள்ளது சரியான ஆவணமாகியுள்ளது. இந்த ஏடிஸ் வகை கொசு அவனது கன்னத்தில் கடிப்பதை பார்த்து அதையும் கிளிக் செய்தேன்( படம் 2) நேரம் : 08.04. பையனும் ஒத்துழைப்பு கொடுத்தான். அவன் அசையேவே இல்லை.

படம் (3) கொசுவை அடித்து ஆய்வு செய்தேன். இது ஏடிஸ் அல்போபிக்டஸ் வகையை சார்ந்த்து. பெரும்பாலும் கிராமப்பகுதியில் காணப்படும்.

சரி. செய்திக்கு வருவோம்.

புலிக்கொசு

பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் பழக்கம் கொண்ட இவ்வகை ஏடிஸ் கொசுக்களை ஆங்கிலத்தில் Day Biter அழைப்பர். புலிக்கொசு என்ற பெயரும் இதற்கு உண்டு. சூரியன் உதித்தும்,மறையும் இரண்டு மணிநேரத்திற்கு முன்பு தான் கடிக்கும் நேரமாகும். அப்போது தான் மிக மிக சுறுசுறுப்பாக இருக்கும். இரவில் என்ன செய்வார் இவர் ஓய்வுதான்.

மனித இரத்தமே பிடிக்கும்.

இன்னொரு முக்கிய செய்தி மனித இரத்தத்தையே விரும்பி குடிக்கும். அதனால் மனிதன் குடியிறுப்பு எங்கு உள்ளதோ அங்குதான் இருப்பார். சுமார் 50 முதல் 200 மீட்டருக்குள்ளேதான் இவரின் வளர்மிடங்கள் இருக்கும். பசித்தாலும் புலி புள்ளை தின்னாது என்பார்கள். இவர் பதித்தால் மனித இரத்தத்தையே குடிப்பார்.

வளர்மிடங்கள்.

நவீன உலகோடு சம்மந்தப்பட்டது. பிளாஸ்டிக் டிரம், சிமெண்ட் தொட்டிகள், பழைய டயர்கள், தூக்கி எறியப்பட்ட டப்பிகள், உடைந்த பானைகள், தேங்காய் ஓடு, மர பொந்து, பாலித்தின் கவர் போன்ற இடங்களில் நீர்த்தேங்கியுள்ள இடத்தில் இவரின் வளரும் இடமாகும். எல்லோர் வீட்டிலும் மிக்சி கிரைண்டர் வந்து விட்டது. அதனால் நமது பாரம்பரிய ஆட்டுக்கல் வீட்டிற்கு பின் பக்கம் சென்றுவிட்டது. அதில் தேங்கும் நீரிலும் இவர் வளருவார்.

இவரை வராமல் செய்ய வேண்டுமென்றால் மேற்கண்ட இடங்களில் நீர்த்தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாமே நமது நவீன வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது.

முட்டையின் உயிர்ப்புத்தன்மை.

ஏடிஸ் பெண் கொசுக்கள் போடும் முட்டைகள் மேற்கண்ட நீர் நிலைகளின் ஈரப்பதம் உள்ள ஓரப்பகுதியில் இம்முட்டைகள் ஒட்டிக் கொண்டு இருக்கும். ஒரு வேளை நீர் காய்ந்து விட்டாலோ அல்லது இல்லாமல்போனாலோ இம்முட்டைகள் காய்ந்த நிலையிலும் உயிர்ப்பு தன்மையோடு இருப்பது இக்கொசுவின் சிறப்புக்குணம்.

எப்படி இக்கொசுக்களை அழிப்பது ?

எளிது. ஏடிஸ் கொசுக்கள் வளருமிடங்கள் வீட்டைச் சுற்றி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உலகத்தில் பெறும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது டெங்கு. டெங்கு இரத்த ஒழுகல் மற்றும் டெங்கு அதிர்சியால் ஏற்படும் உயிரிழப்பு அதிகம். ஏடிஸ் கொசுக்களின் பரவலை பாருங்கள் இந்த உலகப்படத்தில்.

ஆனால் டெங்குவினால் வரும் பாதிப்போ அதிகம்.

ஏடிஸ் கொழுக்களை அழிப்பது எளிது.

1 Response to புத்திசாலியான மோசமான கொசுக்கள்.

Anonymous
September 14, 2009 at 1:46 AM

manithanukku ovvoru kala kattathilum oru savalthaan..

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger