போட்டோஷாப் என்றவுடன் ஒரு பிரமிப்பு. அதற்கு மென்பொருள் குறித்த பயிற்சி அவசியம் என்ற அச்சமே தேவையில்லை. ஒரு கோப்பை அனுப்பும் போது கையெழுத்துடன் அனுப்புவது தான் வழக்கம். இணைய உலகில் இது சற்று சிறமமே. நாம் எடுக்கும் டிஜிட்டல் படத்தில் நமது கையெழுத்து இருந்தால் எப்படி இருக்கும் . சிறிய முயற்சி.
போட்டோஷாப் இதை எளிதாக்குகிறது.
நமக்கு விருப்பமான வடிவத்தில் பிரஷ் /துரிகையை தயாரிக்கலாம்.
படம்.1.
போட்டோஷாப்பில் புதிய கோப்பை திறந்து கொள்ளுங்கள்.
குறுக்கு வழி (short cut) : ctrl+n
அளவு : 8 x 4
Mode : RBG Colour
பின்னணி : வெண்மையாக இருக்கட்டும்.
பிரஷ் கருவியை தேர்வு செய்யுங்கள் அல்லது B என்ற எழுத்தை அழுத்துங்கள்.
தேவையான அளவுடன் வெள்ளைக் கோப்பில் எழுதுங்கள் அல்லது வரையுங்கள்.
படம் .2.
படத்தை லேயராக்க வேண்டும்.
மிரட்சி வேண்டாம்.
குறுக்கு வழி (short cut) : shift+ctrl+n
அல்லது லேயரில் சென்று புதிய லேயரை தேர்வு செய்யுங்கள்.
நான் எழுதிய ‘அன்புடன் ‘ என்ற எழுத்து புதிய லேயரில் இருக்கும்.
படம்.3.
படத்தில் நீலக்குறியீடு காட்டியப்படி மார்க்யு ரெக்டாங்குலர் கருவியை அல்லது M என்ற எழுத்தை மட்டும் அழுத்தினால் அக்கருவி தேர்வாகிவிடும். உங்கள் கை வண்ணத்தை இக்கருவியை கொண்டு தேர்வு செய்யுங்கள்.
படம்.4.
தேர்வு செய்யப்பட்ட நிலையில் எடிட்க்குச் சென்று டிபைன் பிரஷ்யை தேர்வு செய்யவும்.
Edit- Define Brush
நீலக் குறியீடு காட்டப்பட்டுள்ளது போல்.
படம்.5.
டிபைன் பிரஷ்யை தேர்வு செய்தவுடன். பிரஷ் பெயர் கேட்கும் .
விருப்பமான பெயர் இட்டு ஒகெ கொடுங்கள்.
படம்.6.
புதிய வெண்மை கோப்பில் நான் தயாரித்த தூரிகை வடிவம் பல் வண்ணத்தில்.
பிரஷை தேர்வு செய்யவும் அல்லது B யை மட்டும் அழுத்த பிரஷ் தேர்வாகிவிடும்.
நீங்கள் பெயரிட்ட தூரிகை உள்ளே சென்று பார்த்து தேர்வு செய்யவும்.
ஒரு கிளிக்கில் கையோப்பம். வண்ணம் தேர்வு செய்து மீண்டும் கிளிக்.
படம்.7.
என் கையோப்பத்துடன்…
அன்புடன்…
1 Response to உங்கள் கையெழுத்தை பிரஷ் ஆக்க போட்டோஷாப்
Very very Thanks frnd. Can u just give me the good tamil fonts which u have used. pls send it to shankarspidie@gmail.com
Post a Comment