எப்போது வயது முதுர்ச்சி துவங்குகிறது ?

மனித வாழ்வில் வயது நிலையானது இல்லை. மனித உடலின் அடிப்படை அலகு செல் ஆகும். பல ஆயிரம் செல்களின் தொகுப்பே திசுக்களாகும். ஒரேவகையான செல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட உறுப்புகளை தோற்றுவிக்கும். திசுகள் குறிப்பிட்ட காலத்தில் அழிவதும் தோன்றுவதும் இயற்கையாக நடக்கும் நிகழ்வாகும். வயது முதிர்ச்சி வரவர புதிய திசுக்கள் தோன்றுவது குறைவாக நடைபெறுகிறது. உடல் திறன், நல் உணவு, உழைப்பு,சுற்றுச்சூழலின் தாக்கம் இந்நடவடிகையில் பெறும் பங்குவகிக்கிறது.

வயது முதிர்ச்சி தவிர்க்க முடியாதபடி படிப்படியாக நடைபெறுகிறது. மொத்த உடல் செயலியக்கத்தில் 30வயதுக்கு மேலிறுந்தே மெல்லமெல்லமாக,கீழிறங்குமுகமாக செயல்பாடுகள் நடைப்பெற்று வருகிறது

தசைகள் (30வயதிலிருந்து முதிர்ச்சி துவங்குகிறது )

தசை செல்களின் வலிமை கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. இதை தசைத்தன்மை இழப்பு(Sarcopenia) தன்மை 30 வயதிலிருந்தே துவங்குகிறது.வளர்சிதை மாற்ற விகிதம் (Metabolic Rate) குறைந்து கொண்டே வருகிறது. விளைவு உடல் சக்தி,கலோரியின் தேவை குறைவாகிறது. உடலில் எரிகப்படாத கொழுப்பு சக்தியின் அளவு கூடுகிறது.

இந்த உடல் இயக்க போக்கைத்தடுக்க/குறைக்க தொடர்சியான உடல்பயிற்சி நல்ல கைக்கொடுக்கும்.

மூளை (30 வயதிலிருந்து)

மூளைச்செல்லின் அடிப்படை அலகு நியுரான் ஆகும். மூளைச்சுறுக்கமே அதனை சுருங்கச்செய்து சிறியதாக்குகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் நியுரான் செல்கள் குறைந்து அல்லது இரத்த ஓட்டம் மூளைக்கு செல்வது குறைய ஆரம்பிகிறது. பெரும்பாலானோர் அவர்களுடைய மதிநுட்பத்திறனில் சில மாற்றங்கள் ஏற்படுவதை உணர்வார்கள். நீண்ட நேரம் யோசிப்பது, கணக்கு போடும் திறனில் காலம் அதிகமாகுவது.

ஆனால் பெண்களுக்கு ஆண்களைவிட மூளைச்செயல் பாட்டில் காலம் கடந்தே ஆரம்பிகிறது. காரணம் அவர்களுக்குள்ளே சுறக்கும் ஈஸ்ட்ரோஜன் ஆர்மோன் காரணமாகிறது.

கண்கள் (40 வயதிலிருந்து)

கண்ணிலுள்ள லென்சின் தன்மையில் மீள்நீட்சித்தன்மை குறைந்து தடிமனாகிறது. அதனால் பார்வையின் குவியும் தன்மை மாறுபடுகிறது. குறைந்த வெளிச்சம் மற்றும் மஞ்சல் நிற ஒளியில் பார்க்கும் தன்மை கடினமாகிறது. இதனால் கண்மணியின்  ஒளியின் தன்மைக் கேற்ப மாறும் தன்மை மெதுவாகவே செயல்படுகிறது.

நரம்பு செல்களின் குறைவால் உற்று கவனிக்ககூடிய தோற்றம் பலவீனமடைகிறது.

கண்களில் லென்ஸ் திரவம், ஈரம் உலர்ந்து விடுவதால் கண்களில் வரட்சி பார்வையில் ஏற்படுகிறது.

காது (50 வயதுக்கிடையில்)

காது கேட்புத்திறனில் குறைகிறது. குழந்தை மற்றும் பெண்களின் குரல்களை கேட்புத்திறன் குறைவதை உணரலாம்.

இருதயம் (40 வயது முதல்)

பெருந்தமனித் தடிப்பு (Atherosclerosis) , இந்நிலை இருதயம் மற்றும் தமணி சுறுங்கி விரியும் தன்மை மெல்ல மெல்ல இழக்கிறது. இதனால் இருதயம் இரத்தத்தை தள்ளும் செயலை கடினமாக செய்கிறது. உறுப்புகளுக்கு இரத்தம் செல்லும் நிலை மெதுவாகவே நடைபெறுகிறது.

முடி (30வயது முதல்)

முடி வளைர்நிலை  மெல்ல குறைகிறது.  முடியின் மெல்லிய தன்மையாகி சுருங்கி ஒவ்வொரு முடியும் மாறுகிறது . முடி உதிர்ந்து வழுக்கையாகிறது. முடியில் உள்ள நிறமிகள் தன் நிறமியின் தன்மையை இழந்து வெள்ளை மற்றும் பழுப்பு நிறமாகிறது.

தோல் (25வயது  முதல்)

வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கிறது. நெகிழ்வு தன்மை, சுருங்கு தன்மை மெல்ல இழந்து சுருக்கம் தோன்றுகிறது. சூரிய ஒளிபட தன் நிறத்தை மெல்ல இழகிறது. இந்நிலையை குறைக்க நார்சத்து உள்ள உணவு சாப்பிடுதல், பிரனாயமா யோகா செய்வதின் மூலம் தடுக்கலாம்.

( இதை படித்துவிட்டு நான் இளமையாகத்தான் இருகிறேன் என்றால் நான் பொறுப்பள்ள. உங்கள் நம்பிக்கைக்கு நான் குறுக்கே நிற்கப்போவதில்லை )

இக்கட்டுரை அடிப்படை ஆதாரம் சென்னை, டிகான் கிரானிகல் 08.03.2009 நாளிட்ட ஆங்கில நாளிதழில் டாக்டர் வி. ரவிந்தர நாத் ரெட்டி, அமெரிக அக்கடாமியின் வயது மூப்பு மருத்தவப் பிரிவு அவர்கள் எழுதியது )

1 Response to எப்போது வயது முதுர்ச்சி துவங்குகிறது ?

Anonymous
March 8, 2009 at 7:24 AM

பயனுள்ள தகவல். மிக்க நன்றி. இவ்வளவு விரைவாக(30) முதுமை தொடக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை.

இதை உங்கள் பதிவில் இணைக்க...