ஒ.சி.ஆர் ஒரு பயனுள்ள மென்பொருள்அலுவலகத்திலோ அல்லது நமது சொந்த பணிக்கோ ஒரு புத்தகத்தில் உள்ள சில பக்கங்களையோ சில திருத்தங்களுடன் கோப்பு தேவைப்படலாம். அதற்காக ‘மாங்கு மாங்குஎன்று அப்பக்கங்களை தட்டச்சு செய்வோம். 10 பக்கம் கூட தேவலாம் ஆனால் 100 பக்கங்களாக இருந்தால் விழி பிதுங்க வேண்டியதுதான். இப்பணியை மிக மிக எளிதாக்கும் மென்பொருள்தான் ஓ.சி.ஆர். இதை பயன்படுத்த ஸ்கேன் கருவி அவசியம் தேவை.

ஓ.சி.ஆர். (OCR) என்றால் Optical Character Recognition என்பதாகும். ஓ.சி.ஆரின் பணி ஸ்கேன் செய்த கோப்புகளை திருத்தம் செய்யகூடிய கோப்பாக மாற்றலாம்.

அதுவும் குறிப்பாக

MS Office

MS Excel  வடிவமாக உடன் மாற்றிவிடலாம்.எழுத்துரு மற்றும் அளவுகளை எளிதாக மாற்றலாம்.

ஆனால் இது இப்போதைக்கு ஆங்கிலத்திலேயே சாத்தியமாகிறது. ஸ்கேன் கருவி வாங்கும் போதே இந்த மென்பொருளை உடன் தருவார்கள்.

தனியாக இதற்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருள்தான் பைன் ரீடர் (FINE READER)

முகவரி : http://www.abbyy.com/finereader7/?param=43509

இதேபோல் தமிழில் இருந்தால் தகவல் சொல்லுங்களேன்.

3 Response to ஒ.சி.ஆர் ஒரு பயனுள்ள மென்பொருள்

March 23, 2009 at 8:39 AM

உபயோகமான தகவல்

நன்றி வாழ்த்துக்கள்

March 23, 2009 at 7:04 PM

தமிழில் உள்ளது.ஆனால் அதை உபயோகிக்க தனியாக பல்கலைகழகம் சென்று அதற்கான படித்துவிட்டுவரவேண்டும்.(அவ்வளவு கடினமாக உள்ளது)

வாழ்க வளமுடன்,
வேலன்

Anonymous
March 24, 2009 at 12:55 AM

உங்கள் firefox ஐ வேக படுத்த
http://vinothkumarm.blogspot.com/2009/03/limit-history-size-and-speed-up-firefox.html

இதை உங்கள் பதிவில் இணைக்க...