“புரட்சி வீரன்” பகத் சிங் தூக்கிலிடப்பட நாள் 23 மார்சு1931.
குண்டுகளை வீசிவிட்டு, தப்பியோடுவதைக் காட்டிலும், தாங்களே கைதாகச் சம்மதித்து, பிறகு நீதி மன்றங்களைத் தம் கொள்கை பரப்பும் மேடைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற பகத்சிங்கின் யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
திட்டப்படி, சட்டசபையில் குண்டு வீசப்பட்டவுடன் பகத் சிங், தத் இருவரும் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
விசாரனை என்ற பெயரில் நடந்த சித்திரவதைகள் பகத்சிங்கை ஒன்றும் செய்ய முடியவில்லை. ‘விசாரணை”களுக்கு அசைந்து கொடுக்காத பகத்சிங்கின் நெஞ்சுறுதியைப் பற்றி அரசாங்கக் கோப்புகளில் குறிக்கப் பெற்றுள்ளது…
07.10.1930 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படது….
இறுதியில் 23.03.1931 அன்று இரவு 7.33 மணிக்கு, வீரர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.
மனிதர்களின்
வாழ்க்கை சாவில் முடிகிறது.
ஆனால்
மாவீரர்களுக்கு மட்டும்
அது மேலும் தொடர்கிறது !.
(பகத் சிங்கும் இந்திய அரசியலும் என்ற நூலில் சுப.வீரபாண்டியன்)
நாங்கள்,
வாழ்வை நேசிப்பவர்கள்
அதனால்
மரணத்தை வெறுப்பவர்கள்.
ஆனால், மரணம்
எங்கள் லட்சியத்துக்காகவெனில்
நாங்கள்
மரணத்தையும் நேசிக்கிறோம்.
ஏனெனி நாங்கள்,
வாழ்வை நேசிப்பவர்கள்
-இராசோ
No Response to "நாங்கள் மரணத்தையும் நேசிக்கிறோம்."
Post a Comment