ஊடகங்கள் பேச ஆரம்பித்து விட்டாலேயே ஒரு பரபரப்பு, அச்சம், பீதி உலகம் முழுவதும் பரவி விடுகிறது. மெக்சிக்கோவில் தொடங்கி அமெரிக்கா என இக்காய்சல் பீதியை கிளப்பிவிட்டுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் இந்நாடுகளுக்கு பயணிப்பத்தை தவிர்க்க அறிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் இந்தியாவிலும் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
பன்றிக் காய்ச்சல் ( Swine Influenza- Swine Flu)
இது ஒரு வைரஸ் காய்ச்சல். ப்ளு , இன்புளியன்சா எனப்படும் சுவாசத்தொற்றாகும். பன்றிகளுக்கு மட்டுமே வரக்கூடிய இன்புளியன்சா “A” வைரஸ் வகையைச் சார்ந்த்து. பன்றிகளை மட்டுமே இலக்காக வைத்து தாக்குவதால் நான் பன்றிக் காய்ச்சல் என்கிறோம். இறப்பு விகிதம் குறைவாகவும் ஆனால் நோய்த்தாக்கம் அதிகமாகவும் பன்றிகளிடையே காணப்படுகிறது. ஆண்டு முழுக்க பன்றிகளின் உடலில் சுழற்சியில் காணப்படுகிறது.
பெரும்பாலும் குளிர்க்காலத்தில் மனித சமூதாயத்தில் கொள்ளை நோயாக வருகிறது. இவ்வைரஸ் 1930ஆம் ஆண்டு முதன் முதலில் பன்றியின் உடலில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட்து. இவ்வைரஸ் இன்புளியன்சா A H1N1 என்று அழைக்கிறார்கள்.
பீதியை கிளப்பும் பன்றிக்காய்ச்சல் எப்படி வருகிறது?.
இன்புளியன்சா சார்ந்த எல்லா வைரஸ் கிருமிகளும் பன்றிகளின் உடலில் சீராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. நம்மை அவ்வப்போது நம்மை பீதியில் ஆழ்த்தும் பறவைக் காய்ச்சல் (Avian Influenza ) மற்றும் மனிதனுக்கு வரும் சுவாசத்தொற்றை உருவாக்கும் இன்புளியன்சா வைரசும் தான் பன்றிகாய்ச்சளுக்கு முக்கிய காரணமாகிறது.
இவ்வெவ்வேறு வகையான வைரஸ் பன்றிகளின் உடலில் புதிய மாற்றம் கொண்டு ஆகாய சூர பலம் பெருகிறது.
இப்படிப்பட்ட பன்றிகளிடமிருந்து தான் H1N1,H1N2,H3N3 மற்றும் H3N1 வைரஸ் வகைகளை பிரித்து எடுத்து இருக்கிறார்கள்.
கடைசியாக பன்றிக்கூட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டதுதான் H1N1 வைரஸ் வகையாகும்.
மனிதனில் எப்படி பன்றிக்காய்சல் ?
இக்காய்ச்சல் மனிதனுக்கு பொதுவாக வருவதில்லை/பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை. இருந்தாலும் இங்குமங்குமாக இக்காய்ச்சல் மனிதனுக்கு தோன்ற ஆரம்பிகிறது. பன்றிகளுடன் நெறுங்கியத் தொடர்பு மற்றும் பன்றித் தொழில் சார்ந்த தொடர்புகளில் இந்நோய் வருவதற்கு காரணமாகிறது. பன்றித் தொழுவங்களில் பணிபுரிபவர்கள் இந் நோய்க்கு அதிகம் ஆட்படுகிறார்கள்.
எப்படி மனிதனில் கால முறைப்படி தொற்றேற்படுகிறது ?
சாதாரணமாக 1 முதல் 2 ஆண்டுகளுக்கிடையே தோன்றுகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் டிசம்பர் 2005க்கு அடுத்து பிப்ரவரி 2009ல் தான் உயிர்ப்பித்து வந்திருக்கிறது. அதுவும் அமெரிக்காவில் 12 உறுதிசெய்யப்பட்ட நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறார்கள்.
மனிதனில் எற்படும் அறிகுறிகள்
· காய்ச்சல்
· மயக்க நிலை (Lethargy )
· உணவில் விருப்பமிண்மை ( Lack of Appetite )
· இருமல் -இவ்வறிகுறிகள் தோன்றும்.
சிலருக்கு மூக்கொழுகுதல், தொண்டப்புண், வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு தோன்றலாம்.
பன்றி இறைச்சி சாப்பிடுவதல் இந்நோய் வருமா ?
வராது. பன்றி இறைச்சி சாப்பிடுவதின் மூலம் வரும் நோயல்ல இது. ஆனால் இறைச்சியை முறையாக சமைத்துன்பது நல்லது. அதுவும் 160F வெப்ப நிலையில் அனைத்து கிருமிகளும் அழிந்துவிடுவதால் ,மேற்கண்ட வெப்ப நிலையில் சமைப்பது நல்லது.
எப்படி தொற்றேற்படுகிறது ?
1.பன்றிக்கும் மனிதனுகுமான நேரடித்தொடர்பு
2. தொற்றேற்பட்ட மனிதனுக்கும் பன்றுக்கும் உள்ள தொடர்பால்.
மேற்கண்ட சங்கிலித் தொடர்பால் நோய்த் தொற்று ஏற்படுகிறது.
அதாவது சுவாச மண்டலத் தொற்று தும்மல், இருமல் மூலம் இந்நோய் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது.
எப்படி கண்டறிவது ?
இன்புளியன்சா A வைரஸ் தொற்றுக்கண்டவரின் | பன்றிகளின் சுவாசமண்டலம் சார்ந்த பொருட்டகள், குறிப்பாக சளி,திசுக்களின் மாதிரிகளை கொண்டு கண்டறியலாம். 4 முதல் 5 நாட்களின் காலத்தில் இவைரசை கண்டறியலாம். தொற்றுக் கண்ட மனிதனில் இவ்வைரஸ் மறைந்தே காணப்படுகிறது, குறிப்பாக 10 நாட்கள் கூட ஆகலாம்.
சிகிசைதான் என்ன ?
வைரஸ் எதிர்ப்பு மருந்துகளால் (Anti viral Drugs ) இதை குணமாக்கலாம். அமெரிக்காவில் இந்நோய்க்கு கீழ்கண்ட 4 மருந்துகள் பரிந்துரைஆ செய்யப்படுகிறது.
1. Amantadine
2. Rimantadine
3. Oseltamivir
4. Zanamivir இவ்வகை அனைத்து மருந்துகளுக்கும் இவ்வைரஸ் கட்டுப்படுகிறது. ஆனால் amantadine, rimantadine மருந்துகள் இப்போது வந்துள்ள வைரசுக்கு நோயெதிர்ப்பு வந்துள்ளதாக்க் கூறப்படுகிறது.
பன்றிகளில் இந்நோய்:
இத்தொற்று ஏற்பட்டுள்ள பன்றிக்கு மந்தைகளிடமிருந்து பெறப்படுகிறது. தொற்று உள்ள பொருட்கள் நீர்மங்கள், உடல் கழிவுகளில் இருந்து பன்றிகளுக்கு தொற்று ஏற்படலாம். தடுப்பூசிப் போடப்படாத பன்றிகளுக்கே வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
பன்றிகளுக்கு தோன்றும் அறிகுறிகள்:
காய்ச்சல்
கமருதல்/ இருமுதல்
மூகில் சளி ஒழுகுதல்
கண்களில் நீர் வடிதல்
கண்கள் சிவப்பாதல்
மூச்சு விடுதலின் சிறமங்கள்
உண்ண மருத்தல்.
தடுப்பூசிகள் உண்டா ?
உண்டு. ஆனால் மனிதனுக்கு கண்டரியப்படவில்லை. ஆய்வில் உள்ளது.
படிக்க…
No Response to "பீதியை கிளப்பும் பன்றிக் காய்ச்சல்"
Post a Comment