விஞ்ஞானத்தில் ராஜபாட்டை என்பது கிடையாது, அதன் செங்குத்தான பாதைகளில் களைப்போடு ஏறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் பிரகாசமான சிகரங்களை எட்டுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கும்.- காரல் மார்க்ஸ்
இயற்கையின் அத்துனை கதவுகளையும் திறந்து அறிவியல் உண்மைகளை வெளிக்கொணர்ந்ததின் மூலம் இவ்வுலகில் அற்புதங்களை நிகழ்த்தி வருகிறது மனித சமுகம். அவ்வுண்மைகளை,மெய்மைகளை எட்ட சுலபமான பாதைகள் கிட்டவில்லை. இவ்வுண்மைகளை எழுத்து வடிவங்களாக படிக்க நேர்கையில் சற்று சலிப்பு ஏற்படலாம். ஆனால் காண்பொலி காட்சிகள் சோர்வு தட்டாது. அறிவியல் வல்லுநர்களைக்கொண்டு சரிபார்க்கப்பட்டு தகவல் துல்லியமாக இருகிறதா எனச்சோதனை செய்யப்பட்ட பிறகே இவ்விணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. விலங்கியல், தாவரவியல், இயற்பியல், கணினி, வாணவியல் என்று எல்லா எல்லைகளையும் இத்தளம் தொடுகிறது. காட்டாக கொசுவின் வாழ்கை சுழற்சியைப்பற்றி தேடினால் அற்புதம். நீர்நிலையில் இருந்து முதிர் கொசு வரை காட்சி ஓடுகிறது. நீரில் கொசுகள் முட்டை இடுவது, அதிலிருந்து கொசுப்புழுக்கள் வருவது என்று காட்சிகள் ஒடுகிறது.
தேடு(Search) கட்டத்தில் தேவையான பொருளைப்பற்றி தட்டச்சு செய்து தடினால் அறிவுலகம் விரிவடைகிறது.
முகவரி : http://sciencehack.com/
1 Response to மகத்தான அறிவியல் காண்பொலி காட்சிகள்- இணையதள அறிமுகம்
பயனுள்ள செய்தி...
நன்றிங்கோவ்...
--சூரியன்--
Post a Comment