கணினி பார்வை குறைபாடு (Computer Vision Syndrome )





கணினியை சார்ந்து இருக்க வேண்டிய  வாழ்க்கை முறையாகிவிட்டது. கணினி இல்லாத உலகத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இணையம் உலகத்தைச் சுறுக்கிவிட்ட்து. இணையத்தில்  உலவச்சென்றால் நேரம் போவதே தெரிவதில்லை.  உலகம் சுறுங்கிவிட்டது என்னவோ  உண்மைதான். ஆனால் நம் விழிகளும் சுறுங்கிவிட்டன.

பெரும்பாலான கணினி உபயோகிப்பாளர்கள் சொல்லும் பிரச்சனை கணினி பார்வை குறைபாடு (Computer Vision Syndrome )  தான்.

முக்கிய அறிகுறிகள்

1.  வறண்ட மற்றும் அரிக்கும் விழிகள்.

2.  விழி எரிச்சல்

3. விழி களைப்பு மற்றும் விழி தளர்ச்சி.

4.  ங்கிய பார்வை

5.  தலைவலி

6.  மணிக்கட்டு, கழுத்து, முதுகுவலி மற்றும் உடலின் மேல் பகுதிகளில் வலி.

மேற்கண்ட அறிகுறிகளை படிக்கும் போது இரண்டுக்கும் மேற்பட்ட அறிகுறிகளை நாம் அனுபவத்திருப்போம். இதைதான் கணினி பார்வை குறைபாடு (Computer Vision Syndrome ,CVS)  என்று கூறுகிறார்கள்.

2003ல் டெலியா.. பிலிஸ்டர் என்ற மருத்துவர் , ஒகியா ஸ்டேட் பல்கலைகழகத்தில் செய்த ஆய்வில் 90 விழுக்காடுகளுக்கு  மேற்பட்டோர் மேலே பார்த்த அறிகுறிகளோடு அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார். அவரே தன் 3 ஆண்டுகால ஆய்வில் 25,000 கணினி பயன்படுத்துவோரை ஆய்வு செய்ததில் நாளொன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் மேலாக கணினித் திரைக்கு முன்பாக செலவிடுவோர் விழி களைப்பு ஏற்படுவதாக கூறியுள்ளார்.

நல்வாய்ப்பாக, நம்மால் செய்யக்கூடிய எளிய மாற்றங்களினால் அல்லது செயல்பாடுகளினால் இவ்விழி அயர்வு பாதிப்பில் இருந்து எளிதாக விடுபடலாம்.

எளிய வழிமுறைகளைப் பார்ப்போம்.

1.  போதிய வெளிச்சத்தில் பணியாற்றுதல்.

போதிய ஒளியில் /அதிக வெளிச்ச சூழலில் பணியாற்றுவது நன்மையையே தரும்.

 

2.  சுற்றுச் சூழலைக் கட்டுப்படுத்துதல்.

·        வெளிச்சத்தில் உங்கள் கணினி திரை பிரதிபலிகும் ஒளி பாதிப்பை உண்டாக்கும்.

·        சுவர் அடர்த்தியான வண்ணம் கொண்டதாக இருத்தல்.

·        பிரதிபலிக்கும் கண்ணாடிகளை (Anti –Glare Screen) பொருத்துதல்

·        நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால் பிரதிபலிப்பைத் தடுக்கும்  வண்ணப்பூச்சு (Anti-Reflective Coating ) கொண்ட கண்ணாடிகளையே பயன்படுத்துதல்.

3. உங்கள் கணினி திரை அமைப்பை (Screen Setting)  சரியாக உபயோகித்தல்.

·        பிரைட் மற்றும் கான்ட்ராஸ்டு அமைப்புகளை உங்கள் வசதிக்கேற்றார் போல அமைத்துக் கொள்ளுங்கள்.

·        குறிப்பாக பின்பக்கம் இருந்து அதிக ஒளி வந்தால் பிரைட்னஸை குறைக்கலாம்.

4.  எழுத்து வடிவங்கள்/ அளவு மற்றும் வண்ணங்கள்  உங்களுக்கு விருப்பமானவையாக மகிழ்ச்சியூட்டுபவையாக இருக்கட்டும்.

·         சிறிய எழுத்துருக்ளை உற்றுப்பார்ப்பதின் மூலம் விழித் தளர்வு ஏற்படலாம்.

·        பெரும்பாலான மென்பொருட்கள் எழுத்து வடிவத்தை மாற்ற வகை செய்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5.   தேவையான ஓய்வு

·        ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5-10 நிமிடங்கள்  உங்கள் விழிகளுக்கு ஓய்வு கொடுங்கள்.

6.  கணினித்திரை தூய்மையாக இருக்கட்டும்.

·        தூசு , விரல் அடையாளங்கள், மை படிவு, கீரல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் கணினியை இயக்கும் முன்  திரையை துடைப்பதை வழக்கமாக கொள்ளுங்கள்.

7.  சரியான படி உட்காருங்கள்.

·        திரைக்கு அருகில் இருந்து பணியாற்றுவது நல்லதல்ல. பெரும்பாலானோர் இதைத்தான் செய்கிறோம்.

·        கணினித்திரையில் இருந்து 20-24 இன்ச் தொலைவில் உங்கள் விழிகள் இருக்கட்டும்.

·         உங்கள் திரை 10 முதல் 15 டிகிரி கோணத்தில் பார்வை இருக்கட்டும்.

8.  கணினி வேலைக்கு  சிறப்பு மூக்குக் கண்ணாடி அணியுங்கள்.

·         உங்கள் பார்வைக்கென வடிவமைக்கப்பட்ட கண்ணாடிகளையே அணியுங்கள்.

·        அது உங்கள் கண் மருத்துவர் ஆய்வு செய்து வழங்கப்பட்டதாக இருக்கட்டும்

9.  மாற்றுப் பயிற்சிகள்.

·        தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்தல்

·        வாரத்தில் 5 நாட்களில் இப்பயிற்சியை உறுதிப்படுத்துதல்.

·        60 நாட்களில் நல்ல பலன் கிடைப்பதாக கூறுகிறார்கள்.

 

முக்கிய பணி நீங்கள் செய்ய வேண்டியது கணினி பார்வை குறைபாடு (Computer Vision Syndrome ,CVS) பற்றி  உங்கள் மருத்துவரிடம் எடுத்துச் செல்லுங்கள்.  உங்கள் விழிகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

2 Response to கணினி பார்வை குறைபாடு (Computer Vision Syndrome )

April 18, 2009 at 6:08 PM

பயனுள்ள குறிப்புகள்
நன்றி

April 19, 2009 at 10:00 AM

thanks for the info:)

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger