நெட்டை பனை

நெட்டை பனை
காய்ந்து போன ஏரி
எல்லாம் எங்களுடன் பேசும்.
·
பழுத்த பனைம் பழம்
பணமில்லாமல் கிடைகும்.
·
சுட்ட வாசம் ஊரேவீசும்
ஒரு வேளை பசியைப் போக்கும்.

·
பல்லிடுக்கில் பழந் நாறு மாட்டும்
அதை பிடுங்குவதில் ஒரு வேளையே ஓடும்
·
இருட்ட மட்டும்
ஏரி மேட்டில் ஓடுவோம்
எல்லைக்காத்தான் துணையுடன்
இருட்டிலேயே திரும்புவோம்.
·
காய்ந்த சுல்லி
காலில் தட்டும்
பொகசுலடன் வாழ்க்கை நடத்தும்
ஆச அம்மாவின் வலியும் புரியம்.
·
சுண்ட காரக் கொழம்பு
பொக வாசம் வீசும்.
ஊதி ஊதி கரியாய்ப் போன
அம்மாவின் மொகம்
சாப்பிடும் என்னை பார்த்து மலரும்.
·

No Response to "நெட்டை பனை"

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger