“லெப்டோஸ்பைரோசிஸ்” நோயை அறிவோம்.





பருவ மழை முன்னதாகவே துவங்கி விட்டதாக வானிலை மையங்கள் அறிவிக்கிறது. இக்கால நிலை மாறுபாட்டால் பல்வேறு நோய்கள் திடீர் நிகழ்வுகளாக தோன்றுகின்றன. இதில் சிக்குன்குனியா,டெங்கு,மலேரியா மற்றும் லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் நோயும் ஒன்று.

சமீப காலங்களில் இந்நோயைப்பற்றி விழிப்புணர்வு மருத்துவ துறையினரிடம் தோன்றியுள்ளது. இதனால் பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவ நிலையங்களில்  கண்காணிப்பு தோன்றியுள்ளது.

குறிப்பாக லெப்டோஸ்பைரோசிஸ் நோயை எலிக்காய்ச்சல் என அழைக்கிறார்கள்.எலிக்காய்ச்சல் என்ற பெயரிலேயே எலியின் மூலம் பரவுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

   லெப்டோஸ்பைரோசிஸ்ஒரு வகை  பாக்டீரியாவே !

இந்த பாக்டரியா பிரிவில் நோய்த்தொற்று  உண்டாக்கும் வகை   (Pathogenic ) மற்றும் நோய் உண்டாக்கா  வகை (Saprophytic) என வகைப்படுத்தலாம். இக்கிருமிகள் விலங்குகளின் சிறுநீரகத்தில்  உள்ள நுண்ணிய குழாய்களில் இயற்கையாகவே காணப்படும். ஈர சூழலில் சேறும் சகதியும் உள்ள சூழலே  இந்நோய் பரவ ஏதுவான சூழலாகும்.

இதன் அமைப்பிலுமே வித்தியாசம்

ஒரு ஸ்குரு நெட்டை மனதில் கொண்டு வாருங்கள். பிறகு அதை சுற்றுவது போல் மனதிலேயே காட்சிப்படுத்துங்கள். அதன் முனை மரக்கட்டையிலோ அல்லது சுவற்றிலோ  அழுத்தி சுற்ற சுற்ற உள்ளேச் சென்று விடும். இந்த பாக்டிரியாவும் ஸ்குரு/திருகு ஆணி போல சுற்றிக்கொண்டேதான் இருக்கும். இதை கருப்பு பின்னணியில் பார்க்கும் போது வெள்ளிக் கம்பிகள் அங்கும் இங்கும் சுற்றுவதை பார்க்கலாம்.

இயற்கை விருந்தோம்பி.

பெரும்பாலான முதுகெலும்பு விலங்குகளின் சிறுநீரில் இதை காணலாம்.  பெரும்பாலும் இக்கிருமிகள் இவ்விலங்குகளுக்கு எவ்வித பாதிப்பையும் எற்படுத்துவதில்லை.

இத்தனை பிரிவுகளா ?

சுமார் 200 பிரிவுகளில் 25 பிரிவுகள் மட்டுமே நோய் பரப்பும் தன்மையுடையது. ஒரு சமுகத்தில் லெப்டோ பெரும் நிகழ்வாக தோன்றி இருக்கும் போது ,தொற்று வகையில் எவ்வகை என கண்டறிவதே முக்கியமாகும்.

நோய்த்தொற்று குறித்து இரண்டு வகையாக லெப்டோஸ்பைரோசிசை பிரிக்கலாம்.

1.        லெப்டோஸ்பைரோசிஸ் இன்டிராகன்ஸ் (Lepto. Interogans )

2.       லெப்டோஸ்பைரோசிஸ் பைபிலெக்சா (Lepto. biflexa)

நோயின் அறிகுறிகள்.

·         காய்ச்சல் -7 முதல் 14 நாட்கள் வரை

·         தசைவலி

·         உடல் வலி

·         கண்கள் சிவந்து காணப்படுதல் (Conjuctival suffusion )

·         மஞ்சள் காமாலை

ஆனால் இந் நோய் மற்ற நோய்கள் போன்றும் குழப்பம் ஏற்படுத்தும். சொல்லப்போனால் டெங்கு போன்றோ மலேரியா மற்றும் மஞ்சள் காமாலை  போன்றோ தோன்றும்.

நோய் வளர்காலம்

லெப்டோ தோன்றி முதல் அறிகுறி தெரியும் காலத்தை  நோய் வளர்காலம் எனலாம்.  இந்நோயுக்கு வளர்காலம் 5 முதல் 14 நாட்களாகும்.

பரவும் விதம்.

மீண்டும் பழைய செய்திக்கு செல்வோம். விலங்குகளின் சிறுநீரில் இயற்கையாகவே காணப்படும். குறிப்பாக எலி,நாய், கால்நடைகள்,முயல், வெள்ளெலி போன்ற பாலுட்டிகளின் சிறுநீரகத்தில் இக்கிருமி இயற்கையாகவே காணப்படும். இவ்விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர்  மற்றும் சேறு சகதி போன்ற சூழலில் மனிதனுக்கு லெப்டோ வரும் வாய்ப்பை அதிகம் உண்டாக்குகிறது.

வீடுகளில் உள்ள எலிகள் பெரும்பாலும் சமையல் அறை, உணவுப்பொருள் சேமிப்பு அறைகளில் காணப்படும்.எலி அங்குமிங்கும்  தாவி ஓடும் போது  எலி சிறுநீர் கலக்க வாய்ப்பாக்குகிறது.

நோய் பரவும் விதத்தை காண்போம். திருகு ஆணி ஒன்றை மனதில் கொண்டு வாருங்கள் அது சுற்றுவது போல கற்பனைச் செய்யுங்கள்.

ஒரு பேச்சுக்கு நாம் குடிக்கும் நீரில், குளிக்கும் தண்ணீரில் லெப்டோகிருமி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த தண்ணீரை வாய் கொப்பளிக்கிறோம்.என்ன நடக்கும் ? திருகு ஆணிப்போல சுற்றிக்கொண்டு இருக்கும். மென்மையான உள் அன்னத்தில் இக்கிருமி பட துளைத்துக் கொண்டு உள்ளே சென்று விடும். பிறகு நோய் பாதிப்பு தான்.

பிறகு..

நமது சமூகச் சூழலில் பெண்கள் வீட்டு வேலை முழுவதையும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செய்வார்கள். பாத்திரங்கள் கழுவுவது,துணி துவைப்பது போன்ற வேலைகளில்  ஈடுபடுவதால் அவர்களின் கால்கள் கைகளில் விரல்களின் இடுக்குகளில் உள்ள தோல் மிருதுவாக இருக்கும். இந்நிலையில் லெப்டோ கிருமிகள் இப்பிளவுகள் வழியாக உள்ளே சென்று விடும்.

இதேபோல்..

கழிவுகளை துப்புரவு செய்யும் தொழிலாளர்கள், உழவுத்தொழிலாளர்கள், கரும்பு வெட்டுபவர்கள், மழைக்காலங்களில் ஈரப்பதம் மற்றும் ஈரம், சேறு சார்ந்த மண் பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கும், விலங்குகளோடு நெறுங்கியத்தொடர்பு கொண்டோருக்கும் இந்நோய் பாதிப்பு வர வாய்ப்புள்ளவர்கள்.

உடலில் எப்பகுதி மூலம் இக்கிருமி துளைத்துக் கொண்டு உள்ளே செல்லும் ?

மெல்லிய மிருதுவான தோலுள்ள பகுதிகளான மூக்கு, வாய் மற்றும் கண்கள்.  நீரில் றி மிருதுவான தோல் பகுதிகள் கால் மற்றும் கைகளில் விரல் இடுக்குகள்.

சிகிச்சை.

பரவலாக மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் டாக்சிசைக்கிளின்,பென்சிலின், அமாக்சளின் போன்ற மருந்துகளுக்கு கட்டுப்படும். இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சிகிச்சை மேற் கொள்ளவேண்டும்.

கிராமப்பகுதிகளில் மஞ்சள் காமாலை என்று தவறாக நினைத்து பாரம்பரிய வைத்தியம் செய்வார்கள். ஆனால் லெப்டோ இதற்கு கட்டுப்படாது. கல்லீரலை பாதித்த லெப்டோ இப்படியான அறிகுறிகளைக்காட்டும். இதனால் நிலைமை மோசமாகக்கூடும்.

தடுப்பு நடவடிக்கைகள்.

·         இந்நோயைப்பற்றிய குறைந்தபடச தகவலை தெரிந்துவைத்தல்.

·         மழைக்காலத்தில் இந்நோய் பரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் நமக்கு நோய் பற்றிய விழிப்புணர்வு அவசியம்.

4 Response to “லெப்டோஸ்பைரோசிஸ்” நோயை அறிவோம்.

May 23, 2009 at 4:59 AM

இன்றுதான் முதல் தடவை வருகை தருவது உங்கள் பக்கம். முதல் வருகையிலேயே பின்னூட்டம் போட வைத்துவிட்டீர்கள் வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்!
அப்படியே, நம்ம பக்கமும் வாங்க!

May 23, 2009 at 5:43 AM

சரியாக 10 வருடங்களுக்கு முன்பு (1999) என்னுடைய ஒரே சகோதரனை 26 வயதில் இந்த கொடிய நோய்க்கு பலி கொடுத்தோம். இத்தனைக்கும் பொறியியல் படிப்பு முடித்து 30 நாட்களில் வெளிநாடு செல்ல தயாராக இருந்த நிலையில் திடீரென சாதாரண காய்ச்சலாக வந்தது இந்த நோய். ஈரோட்டில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவரிடம் தொடர்ந்து 10 நாட்கள் சிகிச்சை எடுத்தோம். அந்த முட்டாள் மருத்துவரின் சாதாரண காய்ச்சல் தானே என்ற அலட்சியத்தால் நாளுக்கு நாள் காய்ச்சல் கூடிக்கொண்டே வந்தது.

ஏதேட்சையாக எங்கள் உறவினர் மருத்துவரிடம் (எலும்பு முறிவு மருத்துவர்) இது பற்றி போனில் பேசும் போது "ஜான்டிஸ் டெஸ்ட்" செய்தீர்களா என்று கேட்டார், உடனே இன்னொரு மருத்துவரை அவர் அனுப்பியும் வைத்தார், அந்த மருத்துவர் பரிசோதிப்பதற்காக கையை பிடித்த போது சதை வலிப்பதாக என் சகோதரன் கூற அடுத்த விநாடி சொன்னார் "இது லெப்டோஸ்பைரஸிசஸ், உடனே கோவை கே.ஜி மருத்துவமனை செல்லுங்கள்" என்று.

அன்று வெள்ளிக்கிழமை.... உடனே கிளம்பி காரில் 2 மணி நேரத்தில் கே.ஜி சென்றோம்.... அப்போது காரில் நன்றாக உட்கார்ந்து பயணிக்கும் அளவில் உடல் நலம் இருந்தது. அவனால் காரில் இருந்து இறங்கி மருத்துவமனைக்குள் செல்லவும் முடிந்தது. ஆனால் மருத்துவமனைக்குள் அனுமதிக்கும் போது என்னிடம் கையெழுத்து வாங்கும் பொழுது சொன்னார்கள், 30 சதவிகிதம் தான் பிழைக்க வாய்ப்பு உள்ளது என்று..... உட‌னே என் உற‌வின‌ர் ம‌ருத்துவ‌ரை தொட‌ர்புகொண்ட போது, அவ‌ர்க‌ள் சொல்வ‌து உண்மைதான், நீ எதையும் தாங்குவ‌த‌ற்கு ம‌ன‌தை த‌யார்ப‌டுத்திக்கொள் என்றார்.

எனக்கு உலகமே இருண்டது, காரில் இருந்து இறங்கி வந்தவனின் ஆயுளுக்கு 30 சதவிகிதம் தான் உத்திரவாதமா....? அடுத்த 98 மணி நேர சிகிச்சை 48 பாட்டில்கள் பிரெஷ் இரத்தம், சுமார் 2.5 லட்சம் ரூபாய் செலவு எல்லாவற்றையும் லெப்டோஸ்பைரஸிசஸ் என்ப்படும் "எலி காய்ச்சல்" தோற்கடித்து நோய் என் சகோதரனின் உயிரைப் பறித்தது.

அந்த 98 மணி நேரப் போராட்டம் மிகக் கொடுமையானது, உடம்பினுள் ஒவ்வொரு பகுதியாக செயலிழந்து வந்ததை கையறு நிலையில் பார்க்க வேண்டியிருந்தது....


இது எவ்வளவு கொடிய நோய் என்பது எங்களைப் போல் பாதிக்கப் பட்டவர்கள் தான் உணரமுடியும்.

May 23, 2009 at 6:03 PM

leptospirosis leads to certain psychotic symptoms thath may initially mimic neurological movement disorders

May 23, 2009 at 10:12 PM

கதிர்,
தங்களின் குடும்ப துயரம்… இந்நோயின் கொடிய பாதிப்பைக் காட்டுகிறது.எல்லோரும் மஞ்சள் காமாலை என்று தவறான சிகிச்சைக்கு செல்வதால் இறப்பு நிகழ்வுகிறது.
இப்போது மருத்துவர்களிடம் லெப்டோவைப்பற்றி விழிப்புணர்வு வந்து கொண்டு இருக்கிறது. லெப்டோவை கண்டறியும் மேம்படுத்தப்பட்ட ஆய்வு முறை எல்லா அரசு மருத்துவமனையில் வரவேண்டும்.
லெப்டோ கண்காணிப்பு தீவிரம் இறப்பை தவிர்க்கலாம்.

............

டாக்டர்களுக்கு,
நீங்கள் சொல்வது உண்மையே.
நோயின் தீவிரம் அதிகமாக அத்துனை பாகங்களும் சிறுநீரகம்,கல்லீரல்,இருதயம்,நுறையீரல் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும்.
இதனால்,
Hypotension
Mental Confusion
Psychosis
Delirium போன்ற அறிகுறிகள் தோன்றும்.
தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

மணிவர்மா.

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger