உடலில் பிரச்சனைகள், நோய் பாதிப்புகள் என்றால் நாம் மருத்துவரிடம் செல்வோம். அவர் நோய் பாதிப்புகளை அறிந்து குணப்படுத்துவார்.
இதையே…
போட்டோஷாப் ஒரு மருத்துவரைப் போல செய்கிறது.
பார்க்க பிரமிப்பு செய்யும் இப்பணி … மிக மிக எளிது.
நாம் எடுக்கும் படத்தில்
அதாவது முகத்தில் வெட்டு காயம், வெட்டு வடு, முகப்பரு, சுருக்கங்கள் உள்ளது. கவலையே வேண்டாம். ஒரு மருத்துவரைப் போல போட்டோஷா உதவியுடன் செயல்படப் போகிறீர்கள்.
படம் .1.
வெட்டு காயமடைந்த ஒரு நபரை திறந்துள்ளேன். பாருங்கள் எவ்வளவு ஆழாமான வெட்டு.
இதற்கு மருத்துவரானால் தையல் போடுவார்.. பிறகு களிம்பு மருந்து வைத்து கட்டுப் போடுவார்.
ஆனால் போட்டோசாப் இதற்காக நமக்கு கொடுக்கும் கருவிதான் குணப்படுத்தும் கருவி.
Heal tool
இதை தான் நாம் பயன்படுத்தப் போகிறோம்.
படம்.2.
டூல் பாரில் நான் குறியிட்டுள்ள கருவி தான் அது.
தோற்றமே ஒரு பேன்டேஜ் போன்ற தோற்றத்தில் அமைந்திருப்பதை பாருங்கள்.
அதை தேர்வு செய்ய Healing Brush tool (படம் .3.) அடிகோடிடப்பட்டுள்ளது .அதை தேர்வு செய்யவும்.
சரி. இப்போது வெட்டுக் காயத்தை குணப்படுத்த வேண்டும்…எப்படி..
வெட்டு காயம்பட்டவரின் தோலைத்தான் நாம் பொருத்தப் போகிறோம்.
வெட்டு காயம் பக்கத்தில் (படம்.2.) உள்ள பாதிப்பில்லாத தோலை Alt கீயை அழுத்தி ஒரே ஒரு கிளிக். பிறகு வெட்டுப்பட்ட இடத்தில் மௌசின் குறியை வைத்து அழுத்திய படி தேய்கவும்…
காயம் மறைந்து தேர்வு செய்த தோலின் நிறம் வருவதைப் பாருங்கள்.
படம் .3.
அவரின் தோலை தேர்வு செய்து ( Alt கீயை அழுத்தி ) காயத்தை குணமாக்க மறைந்து விட்டது.
பணி முடிந்து விட்டது. ஜேபிஜி (JPG) கோப்பில் சேமியுங்கள்.
புகைப்பட கலையில் நீங்களும் ஒரு மருத்துவர் தான்..
1 Response to படத்தை குணப்படுத்தும் அதிசயக் கருவி- போட்டோஷாப்
உபயோகமான பதிவு.தொடருங்கள்.நன்றி.
Post a Comment