“குறுக்கே நிற்கும் துரோகத் தமிழன்”-முதல்வர் கலைஞர்

அங்கே போர் நின்று விடுமோ?

அமைதி திரும்பிவிடுமோ?

கள்ளிக்காடு சூழ அல்லலுறும் இலங்கைத் தமிழன் ஆறுதல் பெற

அங்கே முல்லைப் பூ பூத்துவிடுமோ;என்று முட்டிக் கொண்டு அழவும் முடியாமல்- மோதிக் கொண்டு கதறவும் முடியாமல்- அய்யோ!

இலங்கைத் தமிழ் இனம் காப்பாற்றப்பட்டுவிடும் போலிருக்கிறதே என்று;

‘தமிழன்  என்று சொல்லடா ; தலை நிமிர்ந்து நில்லடா; என்ற பாடலை மறந்துவிட்டு ;

அல்லது மாற்றிப்பாட முனைந்து

‘தமிழன் என்ற சொல்லடா;

தழை இலைகளை மெல்லடா என்றல்லவா பாடிட விரும்புகிறான் துரோகத் தமிழன் !

அவனுக்கு மாறாக ; அந்தச் சிறு அடங்காப்பிடாரிக் கூட்டத்தைத் தோலுரித்துக் காட்டுகின்ற

முறையிலே; அலை மோதும் கடலென ஆர்ப்பரிக்கும் தமிழர் கூட்டம் : கடந்த 21 ஆம் நாள்

மழை பொழிந்தாலும் கவலையில்லை;எங்கள் தமிழரை இலங்கையில் காத்திட இங்குள்ளோர் அணி திரள்வோம் என்று ஆடவர், பெண்டிர், மாணவர், தொழிலாளர் அனைவரும் ஒன்று திரண்டனரே; இருந்தாலும் மழை காரணமாக இரண்டு நாள் ஒத்திவைத்து ‘மனித சங்கிலி 24ம் நாள் பிற்பகல் என்று அறிவித்ததால்: - மேலும் நாலு மடங்கு மக்களன்றோ தமிழ் முரசொலித்து வர இருக்கின்றார்கள் – வரிசை வகுத்திட இருக்கின்றார்கள்.

No Response to "“குறுக்கே நிற்கும் துரோகத் தமிழன்”-முதல்வர் கலைஞர்"

இதை உங்கள் பதிவில் இணைக்க...