

நீங்கள் செல்போன் உபயோகிப்பவராகவே இருப்பீர் !
அதுவும் இடுப்பில் கட்டும் பெல்டில் செல்போன் வைப்பவரா? இது உங்களுக்கான செய்தியே !.
செல்போன்களில் வெளிப்படும் மின் காந்த அலைகளின்(electromagnetic) வெளிப்பாட்டில் எலும்புகளின் அடர்த்தியில் மெலிவு (Osteoporosis) ஏற்படுவதாக கூறுகிறார்கள். அதுவும் இடுப்பெலும்பு வளையம் (pelvis Area ) பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது. சுலிமான் டெமிரில் பல்கலைக்கழகம், துருக்கியைச்சார்ந்த டாக்டர் டோல்கா மற்றும் அவரது குழுவினர் செய்த ஆய்வின்படி செல்போன்களில் வெளிப்படும் மின் காந்த அலைகளின் வெளிப்பாடு எலும்பை பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.
சுமார் 150 ஆண்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். அவர்களை எக்ஸ் ரே அப்சார்ப்மெட்ரி(Dual-X-ray absorptiometry) மூலம் அளவீடு செய்து எலும்பு மெலிவு பாதிப்புக்கு உள்ளாவதை கண்டறிந்துள்ளார்கள்.
ஒரு செல்போன் பயன்படுத்துவோர் தினம் 15 மணி நேரம் உத்தேசமாக 6 ஆண்டுகள் பயன்படுத்துவதின் மூலம் இப்பாதிப்புக்கு உள்ளாவதாக இவ்வாய்வு கூறுகிறது.
செல்போன் உமிழும் மின் காந்த அலைகள் இந்த எலும்பு மெலிவு தாக்கத்தை உண்டுபண்ணுவதாக கூறுகிறார்கள்.
இருந்தும் இம்முடிவுகள் துவக்க நிலையில் உள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை என்று நாம் மறுக்கமுடியாது. இவ்வாய்வு செப்டம்பர் மாத-The Journal of Craniofacial Surgery இதழில் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு அறிவியல் சார்ந்த நுட்ப பயன்பாட்டில் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகும் செய்தி இருக்கவே செய்கிறது.









