செய்தியோடைகளை உங்கள் கணினி பக்கம் திருப்புங்கள்....
செய்திகளை ஒருங்கிணைந்து பெறப்படும் முறைமையே செய்தியோடை என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை RSS –Really Simple Syndication என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது.
பெரும்பாலான இணையத்தளங்கள்/வலையிதழ்கள் இவ்வசதியை அளிக்கின்றன. இதன் ஐகான் ஆரஞ்சு வண்ணத்தில் அளித்து இருப்பார்கள்.
செய்தியோடை என்பதுதான் என்ன?
இணையம் கடல் போன்றது. தளங்கள் எண்ணிலடங்கா. ஆனால் நாம் விரும்பிப்பார்க்கும் இணையத்தளங்களை வரிசைப்படுத்திவிடலாம்.
சிலர் புக் மார்க் செய்து படிப்பார்கள். நாம் பார்க்கும் தளங்களை எல்லம் பதிவு செய்து பார்ப்பது சாத்தியம் இல்லாத்து. அப்படிப் பார்த்தாலும் நாம் தேடும் தளங்களில் புதிய செய்திகள் இல்லாமல் இருந்தால் எரிச்சல் / சோர்வு ஏற்பட்டுவிடும்.
இப்பணிகளை எளிதாக்கும் பணியைதான் செய்தியோடை மென்பொருள்கள் செய்கிறது. கீழே உள்ள மென்பொருட்கள் இப்பணியை செய்கிறது.
http://www.rssreader.com/download.htm
வண்ணமிடப்பட்டுள்ள மென்பொருட்களை நான் பயன்படுத்தியுள்ளேன். இரண்டுமே சிறப்பாக செயல்படுகின்றன. இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நான் டிவிஎஸ் 50 என்ற வலையிதழில் தான் இதன் பயன்பாட்டை அறிந்து கொண்டேன்.
படம் :1.
குறிப்பாக FEEED DEMON ல் செய்தியோடையை இணைக்க SUBSCRIBE கிளிக் செய்து செய்தியோடைகளின் முகவரிகளை இணையுங்கள்
சில மாதிரி செய்தியோடைகளின் முகவரிகள்.
தமிழ்மணம் : http://www.tamilmanam.net/feed
கூகிள் செய்திகள் : http://news.google.com/news?ned=ta_in&hl=ta&output=rss
தினமணி தலைப்பு செய்திகள் : http://www.dinamani.com/edition/rssSectionXml.aspx?SectionId=128
மற்றொரு முறை
ஆன்லைனில் கூகில் இவ்வசதியை தருகிறது.ஜி மெயில் கணக்கு வைத்து இருப்பவர்கள் செதியோடையின் வசதியை பயன்படுத்தலாம்.
படம்2ல் உள்ளது ஜி மெயிலின் செய்தியோடையின் தோற்றம்.
தமிலிஷ் இணைய செய்தியின் தொகுப்பு
செய்தியோடையின் பயன்பாடுகள்
காலம் விரயம் தவிர்க்கப்படுகிறது
விளம்பர எரிச்சல்
இணையத்தை தேடி அலைய வேண்டியதில்லை.
பயன்படுத்துங்கள். உங்கள் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


அன்புள்ள படவா?

மன்னிக்கவும்.
நிலா. நீ வானம் காற்றி என்ற பாடலின் வரியே அது.
இதயம் ஐஸ் கட்டியில் வைக்கும் பாடலின் வரியே இது. படம் பொக்கிஷம். பயப்படவேண்டாம். நான் பட விமர்சனத்திற்கு செல்லவில்லை. சபேஷ் முரளின் கொஞ்சல் இசையை கேட்டேன். அட பாடலின் வரிகளுக்கு ஆயிரம் முறை கைத்தட்டலாம்.
அன்புள்ள ஒளியே!
அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே
அன்புள்ள இலக்கனமே
அன்புள்ள திருக்குறளே
அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா
அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா
அன்புள்ள கிறுக்கா?
இப்படி தொடரும் பாடலை கேட்டுப்பாருங்கள்.
உங்கள் வலையிதழில் PDF மாற்றும் கருவியை இணையுங்கள்


இணையத்தில் உங்கள் பதிவை பார்வை இடுபவர்களுக்கு PDF மாற்றும் கருவியை இணைத்து வசதி ஏற்படுத்தி செய்து தாருங்கள். இதை பிளாக்கர் இணையமே இவ்வசதியை தருகிறது. அவர்களிடம் அச்சு பொறி இல்லாமல் இருக்கலாம் அல்லது வெளியே பிரௌசிங் செண்டரில் இருந்து பார்ப்பவருக்கு இக்கருவி மிகவும் பயன் தரும். இக்கருவையை கொண்டு
- 1. ஆன் லைனில் உள்ள மற்ற வலை தளங்களின் முகவரியை கொடுத்தும் இவ்வசதியை பெறலாம்.
- 2. பணி செய்யும் கணினியில் இருந்தே உங்கள் கோப்பை பிடிஎப் ஆக மாற்றிக் கொள்ளலாம். அதுவும் பார்வையாளரின் மின் அஞ்சல் முகவரிக்கு உடன் இக்கோப்பு அனுப்பப்பட்டு விடும். அவர்கள் பொறுமையாகக் கூட இக்கோப்புகளை படித்துக் கொள்ளலாம் அல்லது பிறருக்கு பரிந்துரையும் செய்யலாம்.
கருவியை இணைக்கும் முறை:
படம்1.
உங்களின் பிளாக்கரின் வலையிதழின் உள்ளே சென்று லே அவுட்டை தேர்வு செய்து கேட்ஜ்யை சொடுக்கவும்.
படம் 2.
ADD a gadget விண்டோ திறந்துள்ளது. குறியிடப்பட்ட இட்த்தில் Online PDF maker என்று தட்டச்சு எண்டர் தட்டவும்.
படம்3.
RESULTS என்ற விண்டோ இப்போது திறந்துள்ளதில் + குறியிடப்பட்ட இட்த்தில் கிளிக் செய்து சேமித்து வெளியே வாருங்கள்.
இப்போது பிடிஎப் கருவி இங்கள் வலையிதழில்.
