

வாக்கெடுப்பு நடத்துவதைபல இணையதளத்தில் பார்க்கலாம் . அவ்வப்போது எழும்பிரச்சனைகள், சூடான விவாதங்களுக்கு பொது கருத்து, மாதிரி கணக்கெடுப்பு,
இணையத் தள படிப்பாளிகளிடையே கருத்து கணக்கெடுப்பை நடத்தலாம்.
இதற்கு கீழ் கண்ட இணைய முகவரி இலவச பயன்பாட்டைத் தருகிறது.
வழக்கம் போலவே நாம் இதிலும் பதிவை செய்து கொண்டு நமக்கென்று தனி கணக்கை துவங்க வேண்டும். பதிவு முடிந்தவுடன் ஒப்புதல் கிடைக்கும்.
நாம் செய்யப்போகும் கருத்து கணிப்பு/ வாக்கெடுப்பை முன்னமே தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.
- சரியான தலைப்பு
- கேட்கப்போகும் கேள்வி
- அல்லது தேர்வு செய்யச் சொல்லும் பதில்கள்
நாம் முன்னதாகவே யுனிக்கோட் தமிழில் தட்டச்சு செய்து கொண்டு ,படம் 2. காட்டியுள்ள இடத்தில் ஒட்ட வேண்டும். பிறகு நமக்குத்தேவையான வாக்குமுறை குறிப்பாக ஒருவரே பல கேள்விகளை தேர்வு செய்வது, ஒரே வாக்கை மட்டும் அளிப்பது போன்ற தேர்வுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
நமக்குத்தேவையான டிசனை தேர்வு செய்யவும்.
முடிவுகள் பார்வையாளர்களுக்கு எப்படி காட்ட வேண்டும்?
எண்ணிக்கையில்
விழுக்காட்டில் அல்லது மறைத்தல் போன்ற வற்றையும் தேர்வு செய்தல் வேண்டும். முடிதவுடன் நமக்கு HTML கோடை இத்தளம் நமக்குத்தரும். இதை நமது வலையிதழில் HTML கேட்ஜில் ஒட்டவேண்டியதுதான். இப்போது வாக்கெடுப்பு பட்டை தயார். உங்கள் பதிவிற்கு வருபவர்கள் வாக்களிப்பு செய்வார்கள்.
உங்களுக்கு தேவையான எண்ணிக்கை பதிவானதுடன் அது குறித்து தனியாக ஆய்வு பதிவையும் நீங்கள் பதிப்பிக்கலாம்.