போட்டோஷாபில் சின்ன டிரிக்…





போட்டோஷாப் மென்பொருளில் எனக்கு தெரிந்த சில தந்திர செயல்பாடுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சரி. வேலைக்குச் செல்வோம்.

கருப்பு வெள்ளை படத்தை குறிப்பிட்ட பகுதியை மட்டும் வண்ணமாக்குவதை பார்ப்போம்.

அடோப் போட்டோஷாப் மென்பொருளை திறந்து எந்த வண்ணப்படத்தை மாற்றவேண்டுமோ அப்படத்தை open மூலம் திறந்து கொள்ளுங்கள்.


படம்.1.

மேலே உள்ள டூல் பாரில் IMAGEக்கு சென்று Adjecements  சொடுக்கி  பிறகு Channel Mixer யை கிளிக் செய்யுங்கள்.

படம் .2.

Channel Mixer பகுதியில் கீழே தோன்றும்  Monochrome கட்டத்தில் டிக் செய்து ஓகே கொடுங்கள்.

இப்போது படம் கருப்பு வெள்ளையாகி இருக்கும்.

படம் .3.

சைடில் உள்ள கருவிகள் கானும் பகுதியில்  History Brush toolயை தேர்வு செய்யுங்கள்.

இக்கருவி பழைய மாற்றங்களை நினைவில் வைத்திருக்கும்.

படம் . 4.

உங்களுக்குத் தேவையான  பிரஷ் அளவு தேர்வு செய்து , கருப்பு வெள்ளைப்படத்தில் கிளிக் செய்தவாறே தேவையான இடத்தில் தேய்கவும் . வண்ணம் வர ஆரம்பிகும். பணிமுடிந்ததும் சேமியுங்கள்.

பல படங்களில்  நீங்கள் கண்ட தந்திர செயல் இப்போது  உங்கள் கையில்.

9 Response to போட்டோஷாபில் சின்ன டிரிக்…

February 9, 2009 at 4:02 AM

அட! இவ்வளவு தானா?
சொல்லிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

Anonymous
February 9, 2009 at 4:41 AM

ஸுப்பர் பிரத்ர்.... நன்றிங்..க... படம் அருமை... இனி நாங்களும் செய்வமல்லே...

February 20, 2009 at 1:19 PM

அடடா!
இவ்வளவு நாள் தெரியாம போச்சே!

March 4, 2009 at 5:45 PM

கோ.மணிவர்மா அவர்களே,
உங்கள் பிளாக்கரில் வேர்ட் வெரிபிகேஷேனை நீக்கவும். அடுத்து
படங்களை பதிவேற்றும் சமயம் உல்டாவாக பதிவேற்றவும். முதலில் 4 அடுத்து 3 அடுத்து 2 கடைசியாக 1 என தேர்வு செய்தால் உங்களுக்கு படம் 1.2.3.4என வரிசையாக வரும்.
விளக்கம் அருமை ...
வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்:,
வேலன்.

March 4, 2009 at 8:38 PM

நல்ல பயனுள்ள பதிவு!

இதற்காக வெகுநாட்கள் திணறியிருக்கிறேன். நன்றி!

AutoCAD அடிப்படையிலிருந்து, 2டி, 3டி வரை ஒரு தொடர் பதிவு எழுதலாம் என்றிருக்கிறேன். வரவேற்பு இருக்குமா?

//உங்கள் பிளாக்கரில் வேர்ட் வெரிபிகேஷேனை நீக்கவும். //

திரு. வேலன் அவர்களே!
வேர்டு வெரிபிகேஷன் என்பது என்ன?
தயவு செய்து விளக்கவும்.

March 4, 2009 at 9:29 PM

எளிதாக விளக்கியமைக்கு மிக்க நன்றி.

//உங்கள் பிளாக்கரில் வேர்ட் வெரிபிகேஷேனை நீக்கவும். //

March 7, 2009 at 7:00 AM

நண்பரே,,
பிளாக்கரில் வேர்ட் வெரிபிகேஷனை நீக்க டாஷ்போர்ட் சென்று அதில் அமைப்புகள்- கருத்துரைகள் தேர்வு செய்து பின அதில் வரும் கருத்துக்களுக்கு சொல் சரிபார்ப்பைக் காண்பிக்க வேண்டுமா? காலத்தின் எதிரில் உள்ள ரேடியோ பட்டனில் இல்லை என்பதை டிக் செய்து அமைப்புகளை சேமித்து வெளியெறவும். ( உங்கள் பிளாக்கு்ககு
கருத்து சொல்பவர்களுக்கு ஒவ்வோரு முறையும் வேர்ட் வந்து அதை பார்த்து டைப் அடிக்க சொல்வது தான் வேர்ட் வேரிபிகேஷன். கருத்து சொல்பவர்கள் இதனால் கடுப்பாகி கருத்து சொல்லாமல் சென்று விடக்கூடும்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

March 9, 2009 at 1:30 AM

மிக்க நன்றி, திரு. வேலன் அவர்களே

Anonymous
June 7, 2010 at 12:09 AM

Elimaiyana vilakkam. Many more Thanks.

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger