



போட்டோஷாப் மென்பொருளில் எனக்கு தெரிந்த சில தந்திர செயல்பாடுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சரி. வேலைக்குச் செல்வோம்.
கருப்பு வெள்ளை படத்தை குறிப்பிட்ட பகுதியை மட்டும் வண்ணமாக்குவதை பார்ப்போம்.
அடோப் போட்டோஷாப் மென்பொருளை திறந்து எந்த வண்ணப்படத்தை மாற்றவேண்டுமோ அப்படத்தை open மூலம் திறந்து கொள்ளுங்கள்.
படம்.1.
மேலே உள்ள டூல் பாரில் IMAGEக்கு சென்று Adjecements சொடுக்கி பிறகு Channel Mixer யை கிளிக் செய்யுங்கள்.
படம் .2.
Channel Mixer பகுதியில் கீழே தோன்றும் Monochrome கட்டத்தில் டிக் செய்து ஓகே கொடுங்கள்.
இப்போது படம் கருப்பு வெள்ளையாகி இருக்கும்.
படம் .3.
சைடில் உள்ள கருவிகள் கானும் பகுதியில் History Brush toolயை தேர்வு செய்யுங்கள்.
இக்கருவி பழைய மாற்றங்களை நினைவில் வைத்திருக்கும்.
படம் . 4.
உங்களுக்குத் தேவையான பிரஷ் அளவு தேர்வு செய்து , கருப்பு வெள்ளைப்படத்தில் கிளிக் செய்தவாறே தேவையான இடத்தில் தேய்கவும் . வண்ணம் வர ஆரம்பிகும். பணிமுடிந்ததும் சேமியுங்கள்.
பல படங்களில் நீங்கள் கண்ட தந்திர செயல் இப்போது உங்கள் கையில்.