பல நண்பர்கள் பல மாதங்களாக பதிவுலகில் இருப்பவர்கள் கூட இம்முறையைப்பற்றி அடிக்கடி கேள்வி எழுப்புகிறார்கள்.
சின்ன செய்திதான். தெரிந்தால் சிறியது.
தெரியாவிட்டால் கண்ணுக்கருகில் இருக்கும் சிறிய கல் போல பிரமிப்பை கொடுத்துவிடும்.
ஆகையால் இப்பதிவு புதியவர்களுக்கு மட்டுமே.
பல பதிவுகளில் பார்த்து இருப்போம்.
இங்கே கிளிக் செய்யவும்
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
குறிப்பிட்ட வார்த்தைகளை கிளிக் செய்ய இணைப்புக்கொடுக்கப்பட்ட வேறு இணைய தளத்திற்கு செல்லும்.
அதைதான் இப்போது பார்க்கப்போகிறோம்.
இவ்வசதியை மின்னஞ்சல், பிளாக்குகளில் கொடுக்கிறார்கள்.
படம். 1.
முதலில் நீங்கள் சொல்லும் செய்திகளை தட்டச்சு செய்துவிட்டு , இணைப்பு கொடுக்க , வார்த்தையை தேர்வு செய்து விட்டு லின்க் (Link ) கிளிக் செய்யுங்கள்.
படம்.2.
ஒரு விண்டொ படத்தில் காட்டியப்படி தோன்றும் .அதில் வார்த்தையை தேர்வு செய்து இருந்தால் தோன்றி இருக்கும் அல்லது தட்டச்சு செய்து கீழே உள்ள வெப் முகவரியில் நீங்கள் இணைப்பு கொடுக்கும் முகவரியை கொடுத்து ஓகே செய்யுங்கள்.
அவ்வார்த்தை தற்போது தேர்வாகி இருக்கும்.
4 Response to புதியவர்களுக்கு -வார்த்தைக்கு இணையதள முகவரியின் இணைப்பு கொடுத்தல்
this is nice. thank you
தகவலுக்கு நன்றி.
நன்றிங்க...இது தெரியாமத்தான் ரொம்ப நாளா முழிச்சுட்டிருந்தேன்..
Post a Comment