கருப்புக் கறை



நான்
விளகில் வீற்றிருக்கும்
அக்கினியின் கர்ப்பத்தில்
பூத்த புகையல்ல…
பூமியின் கையெழுத்தாய்
ஆகாயத்தில் பொறிக்கப்பட்ட
உண்மை உழைப்பின்
சூடான வரலாறு.

என்னுடைய ‘இன்று’
சுருங்கி ஒடுங்கி
இருக்கலாம்…
ஆனால், நாளை
வரவிருக்கும்
உழைப்பின் வெற்றியால்
உயர்த்தப்படும்
புகைக்கொடி நான்.
பசித்த வயிற்றில்
நான் வளருகிறேன்… தீக்
கண்ணீராக இல்லை…
கனலாக வெளி வருகிறேன்!

காலனின் காலம்
வந்த பின்பு
எல்லாம் மானங்களும்
இல்லாமல் போகும்.

நான்
கருப்புக் கறையில்லை
காலக் கணக்கன்…!
என்னைக் கண்டு
வெள்ளை ஆடைகள்
அச்சப்படுகின்றன.

-ஒரு துளி பூமி! ஒரு துளி வானம் !!
என்ற வி.பி.சிங் அவர்களின்கவிதை தொகுப்பு நூலில்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு சட்டங்கள் வாழ்க.



நன்றி : தமிழோசை நாளிதழ் . 11.12.2008

என்ன செய்ய போகிறோம்?.






படம் வரைந்து கொண்டிருந்த திலிபனை பார்த்துக் கேட்டேன்.
ஈழப்படுகொலையை வரையச் சொன்னேன்.

என்ன செய்ய போகிறோம்?.













மனித வடிவின் அவலம் நீ…






“குறுக்கே நிற்கும் துரோகத் தமிழன்”-முதல்வர் கலைஞர்

அங்கே போர் நின்று விடுமோ?

அமைதி திரும்பிவிடுமோ?

கள்ளிக்காடு சூழ அல்லலுறும் இலங்கைத் தமிழன் ஆறுதல் பெற

அங்கே முல்லைப் பூ பூத்துவிடுமோ;என்று முட்டிக் கொண்டு அழவும் முடியாமல்- மோதிக் கொண்டு கதறவும் முடியாமல்- அய்யோ!

இலங்கைத் தமிழ் இனம் காப்பாற்றப்பட்டுவிடும் போலிருக்கிறதே என்று;

‘தமிழன்  என்று சொல்லடா ; தலை நிமிர்ந்து நில்லடா; என்ற பாடலை மறந்துவிட்டு ;

அல்லது மாற்றிப்பாட முனைந்து

‘தமிழன் என்ற சொல்லடா;

தழை இலைகளை மெல்லடா’ என்றல்லவா பாடிட விரும்புகிறான் துரோகத் தமிழன் !

அவனுக்கு மாறாக ; அந்தச் சிறு அடங்காப்பிடாரிக் கூட்டத்தைத் தோலுரித்துக் காட்டுகின்ற

முறையிலே; அலை மோதும் கடலென ஆர்ப்பரிக்கும் தமிழர் கூட்டம் : கடந்த 21 ஆம் நாள்

மழை பொழிந்தாலும் கவலையில்லை;எங்கள் தமிழரை இலங்கையில் காத்திட இங்குள்ளோர் அணி திரள்வோம் என்று ஆடவர், பெண்டிர், மாணவர், தொழிலாளர் அனைவரும் ஒன்று திரண்டனரே; இருந்தாலும் மழை காரணமாக இரண்டு நாள் ஒத்திவைத்து ‘மனித சங்கிலி’ 24ம் நாள் பிற்பகல் என்று அறிவித்ததால்: - மேலும் நாலு மடங்கு மக்களன்றோ தமிழ் முரசொலித்து வர இருக்கின்றார்கள் – வரிசை வகுத்திட இருக்கின்றார்கள்.

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger